ஆட்டோக்காரர் உயிர் அரைக்காசுகூட பேறாதா?

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அவளுடைய கணவன்தான் காரணமானவன் என்று உடனே முடிவு செய்து அவனை அவனுடைய பெற்றோரோடு சேர்த்து கைது செய்யவேண்டும் என்று ஒரு சிறப்புச் சட்டம் இந்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

கணவனை, மனைவியின் தற்கொலைக்குத் தூண்டினான் (abetting the suicide) என்று ஒரு செக்‌ஷனிலும், வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தள்ளினான் (sec 498A) என்று இன்னொரு செக்‌ஷனிலும் கேசு போட்டு கைது செய்து ஜாமீன் கொடுக்காமல் சிறையிலடைத்து விடுவார்கள். வெறும் அனுமானம் மட்டுமே போதும், குற்றத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்று சட்டத்தில் மாற்றம் செய்து ஆண்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் இந்நாட்டின் இரண்டாம்தரக் குடிமக்களாக தரமிறக்கி நாயினும் கேடாக அவர்களை நடத்துகிறார்கள். அப்படியும் அது போன்ற மொத்த வழக்குகளில் 1% கூட நிரூபிக்கமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் என்பது சமீபத்திய அரசு ஆய்வில் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தக் கணவன்மார்களும் அவர்களுடைய வயதான தாய் தந்தையினரும் பட்ட பாட்டிற்கு பதில் சொல்வோர் யார்?

இதோ கீழ்க்கண்ட நிகழ்வினைப் பாருங்கள் இந்த ஆட்டோக்காரரை தற்கொலைக்குத் தூண்டியது யார்?

இதே பெண்ணாக இருந்தால் இந்நேரம் கணவன் கைதாகி ஒரு மாமாங்கம் கழிந்திருக்கும்.

இந்நாட்டில் பெண்ணுக்கு மட்டும்தான் நீதியா? ஆண் உயிர் என்ன செல்லாக்காசா?

கேட்பாரில்லையா?

மீண்டும் சொல்கிறேன். இன்னிலை நீடித்தால் ஆண் சிசுக்கள் கர்ப்பத்திலேயே கொல்லப்படும் நாள் தொலைவில் இல்லை!

இப்போது செய்தி:-


தேனி அல்லிநகரத்தில் மனைவி பிரிந்து வாழ்வதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

அல்லிநகரம்,ஜன.30- 2009

தேனி அல்லிநகரத்தில் மனைவி பிரிந்து வாழ்வதால் மனம் உடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- ஆட்டோ டிரைவர் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கசெல்வம் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெயர் சந்திரா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. ரஞ்சனி(4) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் தங்கசெல்வம் ஆட்டோ செலவிற்காக ரூ.2 ஆயிரம் பணத்தை வீட்டில் வைத்திருந்தார். இந்த பணத்தை எடுத்து அவரது மனைவி சந்திரா செலவு செய்து விட்டார். இதுகுறித்து தங்கசெல்வம், மனைவியிடம் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து கணவருடன் கோபித்து கொண்டு சந்திரா அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த தங்கசெல்வம் சம்பவத்தன்று ரத்தினம் நகர் சாலை பகுதியில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தங்கசெல்வத்தை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்