பண்பாடு சார்ந்த நம் பாரம்பரிய வாழ்க்கை முறை பிற்போக்கானது என்றும் மனம்போனபடி வாழ்வதுதான் நாகரிகமானது என்று மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள இளம் பெண்களின் வாழ்வு எந்த அளவுக்கு சீரழிந்து நிற்கிறது என்பதைப் பாருங்கள்.
பெற்றோர் சொல் கேளாதீர்; கண்டவனோடு கண்ட நேரத்தில் ஊர் சுற்றுங்கள்; எல்லாவற்றையும் திறந்து போட்டுக்கொண்டு உடையணியுங்கள், அது உங்கள் உரிமை, அதுதான் பெண் விடுதலை; காதல்(காமம்)தான் வாழ்வில் முக்கியமான விஷயம், அதற்காக எதையும் இழக்கலாம் - இப்படியெல்லாம் சினிமாக்களும் ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் ஓயாமல் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு? ந்மக்கென்று இருந்த பாரம்பரிய பண்பாடுகளை இழந்து “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று நிற்கிறோம்.
குடுமப வாழ்வு முறையையே சிதைத்து தகப்பன் பெயர் தெரியாத மக்களைக் கொண்ட சமுதாயமாக நம் நாட்டை மாற்றுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு பல அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு பல மேலை நாடுகளிலிருந்து கோடி கோடியாகப் பணம் வருகிறது.
கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வு முறையையும், சேமிப்பு மனப்பான்மையையும் ஒழித்துவிட்டல் மேலை நாகரிகத்திற்கு மக்கள் முழுதும் அடிமையாகி கடன் வாங்குவதிலும், படாடோபங்களிலும், டம்பாச்சாரி சிலவுகளிலும் ஈடுபட்டு ஒரு சூன்யமான நிலையை நோக்கி நம் சமுதாயத்தை செலுத்திவிடலாம் என்று முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றியும் கிட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு இசைவாகத்தான் நம் சமூகத்தை உருக்குலைக்கும் 498A போன்ற சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-
திருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தோழி நித்யா கொலை செய்து எரிக்கப்பட்டாரா? பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
திருச்சி, ஜன.12-2009 - செய்தி - தினத்தந்தி
காதலனுடன் உயிரோடு திரும்பி வந்த கல்லூரி மாணவியின் தோழி நித்யா கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி கருமண்டபம் அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன்- ஜோதி தம்பதிகளின் மகள் வசந்தி(வயது 20). இவர் பிராட்டினிரில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். வயிற்று வலி காரணமாக வசந்தி, கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கண்டோன்மெண்ட் போலீசில் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த பெண்ணின் உடலை ஓயாமரி சுடுகாட்டில் சுப்பிரமணியன் குடும்பத்தினர் தகனம் செய்தனர்.
இந்த நிலையில் வசந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட அதே நாளில் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை தாயனூரைச் சேர்ந்த மல்லிகாவின் மகள் நித்யா(20) மாயமானாள். நித்யாவை பல்வேறு இடங்களில் அவரது தாய் மல்லிகா தேடினார். ஆனால் எங்கும் கிடைக்காததால் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகள் மாயமாகி விட்டதாக ஒரு புகார் மனு கொடுத்தார்.
இந்த நிலையில் தீக்குளித்து இறந்ததாக கூறப்பட்ட வசந்தி நேற்று முன்தினம் தனது காதலன் வெங்கடேசோடு உயிருடன் திரும்பி வந்தார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலெக்சாண்டர் மோகனிடம் வசந்தி ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தங்கள் காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
இறந்து போனதாக பெற்றோரால் கூறப்பட்ட வசந்தி தனது காதலனோடு உயிருடன் திரும்பி வந்தது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வசந்தியின் வீட்டில் உடல் கருகி இறந்து கிடந்த பெண் யார்? அது ஏற்கனவே காணாமல் போனதாக சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நித்யாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
தோழிகளான வசந்தியும், நித்யாவும் ஒருவரையே (வெங்கடேஷ்) தீவிரமாக காதலித்து வந்ததால்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க கூடும் என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசந்தியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த இடத்தில் நித்யா தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கலாம், அல்லது தனது காதலுக்கு குறுக்கே நிற்கும் வசந்தியை பழிவாங்குவதற்காக நித்யாவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
இதனால்தான் பயந்து போய் வீட்டை விட்டு வசந்தி காதலருடன் தப்பி ஓடியிருக்கலாம் என்றும் அதனை மறைக்கவே வசந்தியின் பெற்றோர் நாடகமாடி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வசந்தியின் வீட்டில் இறந்து கிடந்தது நித்யா தான் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்காகவும், வசந்தியின் தந்தை சுப்பிரமணியன், அவரது மகன்களை கண்டோன்மெண்ட் போலீசார் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து உள்ளன.
இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால், உண்மை நிலையை அறிய எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய சான்றாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த பெண்ணின் உடலில் தீக்காயம் ஏற்படுவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பே உயிர் பிரிந்து இருக்கலாம் என்றும், உடலில் தலைப்பகுதியில் காயங்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருக்கிறது.
இதனால் நித்யா அடித்து கொல்லப்பட்டு அதன் பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையாக விசாரிக்காமல் வழக்கை முடிவுக் கொண்டுவந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
கொலைவெறியூட்டும் காதல் நாடகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
இறந்ததாக கருதப்பட்டு உயிருடன் வந்த மாணவி விவகாரத்தில் திருப்பம்
தோழியை எரித்துக் கொன்று விட்டு நாடகமாடிய காதல் ஜோடி கைது
திடுக்கிடும் வாக்குமூலம்
திருச்சி, ஜன.13-
திருச்சியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தோழியே காதலர் உதவியுடன் அவரை எரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடி இருக்கிறார். இதைத் தொடர்ந்து காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டனர்.
நெஞ்சை பதறச் செய்யும் இந்த கொடூர கொலை பற்றிய விவரம் வருமாறு:-
நெருங்கிய தோழிகள்
திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் வசந்தி(20). பி.எஸ்சி. இறுதியாண்டு மாணவி. இவரது வகுப்புத் தோழி நித்யா.
கடந்த மாதம் 26-ந்தேதி சுப்பிரமணியன், தனது மகள் வசந்தி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தெரிவித்தார். போலீசாரும் வசந்தி வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடித்து விட்டனர்.
இதனிடையே, நித்யாவின் தாயார் மல்லிகா, கடந்த 6-ந்தேதி முதல் தன் மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் செய்திருந்தார்.
போலீசில் ஆஜர்
இந்த நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட வசந்தி, தனது காதலன் வெங்கடேசுடன் திடீரென திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் ஆஜரானதால், தீக்குளித்து செத்த பெண் யார்? என்ற கேள்வி எழுந்தது.
வசந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது வசந்தியின் வீட்டில் இறந்து கிடந்தது நித்யாதான் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
நித்யா எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரைக் கொன்றது யார்? என்பதை கண்டுபிடிக்க வசந்தி, அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் வசந்தியின் பெற்றோரையும் பிடித்துச் சென்று போலீசார் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.
திடுக்கிடும் தகவல்
அப்போது மேலும், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. வசந்தியும், வெங்கடேசனும் சேர்ந்துதான் நித்யாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டு கபடநாடகமாடி இருப்பது தெரிய வந்தது.
சினிமாவில் வரும் கொலை காட்சிகளையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்த கொலையை வசந்தியும், வெங்கடேசனும் மிகச் சாதுர்யமாக நடத்தி முடித்து இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த அன்று நித்யாவை தனது வீட்டுக்கு வசந்தி வரவழைத்திருக்கிறார். பின்பு வசந்தியும், காதலர் வெங்கடேசனும் அவருக்கு தூக்க மாத்திரை கலந்த பாலை கலந்து கொடுத்துள்ளனர். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த நித்யாவை குளியல் அறைக்குள் இழுத்துச் சென்று மண்எண்ணை ஊற்றி எரித்து கொன்றுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டது, வசந்தி என மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக நித்யாவின் உடலை எரிப்பதற்கு முன் அவர் அணிந்திருந்த உடைகளை அகற்றி அவற்றை வசந்தி அணிந்து கொண்டு தனது உடைகளை நித்யாவிற்கு அணிவித்து இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளதாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வசந்தியையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர். மாணவி நித்யாவை கொன்றதாக கைதாகியுள்ள வசந்தி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பதிவு திருமணம்
நித்யாவும், நானும் நெருக்கமான தோழிகள். பொதுவான விஷயங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வோம். வெங்கடேசனுக்கும் எனக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டது. எங்களது காதல் விவகாரம் தோழி நித்யாவிற்கு நன்கு தெரியும்.
நானும் வெங்கடேசனும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ திட்டமிட்டோம். அதற்கு எனது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பிறகும் அவரவர் வீட்டிலேயே வசித்தோம். நாங்கள் திருமணம் செய்து கொண்டது எனது பெற்றோருக்கு தெரியாது.
மிரட்டிய நித்யா
இந்த நிலையில் எங்களது ரகசிய திருமணத்தை பற்றி எனது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என நித்யா என்னை மிரட்டி வந்தாள். இது எனக்கு பெரிய தலைவலியாக இருந்தது. தவிர, வெங்கடேசனுடன் வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவியாக வாழ்ந்தால் குடும்ப மானம் போய்விடும், எனது அண்ணன்களின் திருமணமும் தடைபட்டு விடும் என நினைத்தேன்.
எனவே நித்யாவின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரை கொல்ல முடிவு செய்தேன். யாரும் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு நித்யாவை வரவழைத்து எரித்துக்கொன்று விட்டால் இறந்தது நான் (வசந்தி) என எல்லோரும் முடிவு செய்து விடுவார்கள் என நினைத்து ஒரு சதித்திட்டம் தீட்டினேன்.
டிசம்பர் 26-ந்தேதி மதியம் கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின்போது நித்யாவை சந்தித்து பேசினேன். அப்போது நித்யா, `நான் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன். என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால், உனது காதல் விவகாரத்தையும், பதிவு திருமணம் செய்து கொண்டது பற்றியும் உன்பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துவிடுவேன்` என மிரட்டினாள். இதை நான், எனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டேன்.
பாலில் தூக்க மாத்திரை
இன்று மாலை எனது வீட்டுக்கு வந்தால் வெங்கடேசனிடம் பேசி உன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்கிறேன் என கூறினேன். நான் கூறியதை நம்பிய நித்யா அன்று மாலை சுமார் 6 மணி அளவில் எங்கள் வீட்டிற்கு வந்தாள். வீட்டில் அப்போது என்னையும், வெங்கடேசனையும் தவிர வேறு யாரும் இல்லை.
நித்யா வீட்டிற்கு வந்ததும் தூக்க மாத்திரை கலந்த பாலை அவளுக்கு கொடுத்தோம். அதை வாங்கி குடித்ததும் அவள் மயங்கி விழுந்தாள். உடனே நித்யாவின் கழுத்தை நெரித்தோம். பின்னர் குளியல் அறைக்கு இழுத்து சென்று நித்யாவின் உடலில் மண்எண்ணையையும், பெட்ரோலையும் ஊற்றி தீவைத்தோம். முகம் அடையாளம் தெரியாத வகையில் எரித்தோம்.
பின்வாசல் வழியாக ஓட்டம்
பிறகு, வீட்டின் முன்பகுதியை பூட்டிவிட்டு பின்வாசல் வழியாக நானும் வெங்கடேசனும் அங்கிருந்து தப்பிச் சென்றோம். சேலம், கோவை, பாபநாசம் உள்பட பல இடங்களுக்கு சென்று தங்கினோம். நித்யாவை எரித்து கொன்று எனது வீட்டில் போட்டதன் மூலம் நான் (வசந்தி) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கருதி என்னை எனது பெற்றோர் தேட மாட்டார்கள் என நினைத்திருந்தேன்.
ஆனால் நித்யாவை காணவில்லை என்று அவளது வீட்டில் தேடியதாலும், எனது கணவர் வெங்கடேசனை போலீசார் தேடுவதாக அறிந்ததாலும் வேறு வழியின்றி நேரில் ஆஜர் ஆக வந்தோம். எங்களை போலீசார் பிடித்து விட்டார்கள்.
மேற்கண்டவாறு வசந்தி போலீசில் அளித்து உள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.
சிக்கலான இந்த வழக்கில் துப்பு துலக்கியது எப்படி என்பது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலெக்சாண்டர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வசந்தியும், வெங்கடேசனும் திடீரென ஆஜராகி நாங்கள் காதல் ஜோடி என்றும், பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியதுமே முதலில் அவர்கள் மீது தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டிருப்பவரே வசந்திதான்.
திசை திருப்ப முயற்சி
இந்த வழக்கில் போலீசாரை திசை திருப்புவதற்காக வசந்தி முன்னுக்குப் பின்னாக பல தகவல்களை கூறினார். எனினும், தனிப்படை போலீசார் திறமையாக துப்புதுலக்கி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டனர்.
உடல் முழுவதும் அடையாளம் தெரியாத வகையில் கருகி போய் இருந்ததால் வசந்தியின் தந்தை சுப்பிரமணியனுக்கு அது தனது மகளின் உடல் தான் என்பதில் சந்தேகம் வராமல் இருந்திருக்கலாம். ஆனால் நித்யாவின் தாயார் மல்லிகா, எரிந்த நிலையில் கிடந்த போது எடுக்கப்பட்ட படத்தில் இருந்த நித்யாவின் முகத்தை பார்த்துவிட்டு இது எனது மகள் தான் என்று உறுதியாக சொன்னார்.
கேரளாவில் ஜாலி
பிரேத பரிசோதனை அறிக்கையில் நித்யா கர்ப்பமாக இருந்ததாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் நித்யாவுக்கும் வெங்கடேசனுக்கும், காதல் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவில்லை.
நித்யாவுக்கு வேறு யாருடனும் காதல் இருந்திருக்குமா? என விசாரிக்க வேண்டியது இந்த வழக்கை பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று. நித்யாவை எரித்து கொன்று விட்டு வசந்தி- வெங்கடேசன் ஜோடி சேலம், கோவை, திருவனந்தபுரம், பாபநாசம் என பல இடங்களுக்கு ஜாலியாக சென்று இருக்கிறார்கள்.
வெளினிர்களில் தங்கி இருந்த போது வெங்கடேசன் திருச்சியில் உள்ள அவரது நண்பர்களிடம் அடிக்கடி செல்போனில் பேசி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் வசந்தியுடன் இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் வசந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததால் வெங்கடேசனின் நண்பர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் போலீசாரின் காதில் எட்டியதும், வெங்கடேசன் தரப்பினர் அவரை விடாமல் தேடி வந்ததும் வழக்கில் விரைவில் துப்புதுலங்குவதற்கு காரணமாக அமைந்தன.
இவ்வாறு கமிஷனர் அலெக்சாண்டர் மோகன் கூறினார்.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்த கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி சரிவர விசாரிக்காமல் தற்கொலை என்று முடிவு செய்ததால் அவரிடம் விளக்கம் கேட்டு `மெமோ` கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர், தரும் விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது
பொய் 498A வழக்குகளிலிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்ற இயற்கை ஏற்படுத்தியுள்ள புதிய வழிமுறை தான் கள்ளக்காதலில் பெண்களே பெண்களை கொலை செய்துகொள்ளும் அவல நிலை. இது உண்மையான குற்றவாளிகளை சமுதாயத்திலிருந்து நீக்கும் புதிய சமுதாய சுத்திகரிப்பு முறை. அரசாங்கம் செய்யத்த தவறியதை இயற்கை செய்கிறது,
உங்கள் கருத்தைத் தெரிவிக்க