தேனிலவில் கணவனைக் கொன்ற ஐயங்கார் பெண்!

திருமணமாகி 8 நாட்களுக்குள் தன் அன்பு மனைவியிடன் ஆசையாய் கேரளாவுக்கு உல்லாசப் பயணம் சென்றான் அனந்தராமன் என்ற ஐயங்கார் இளைஞன். நல்ல வசதி படைத்த வீட்டினர் இருவரும்.

இன்பக் கனவுகளுடன் தன் புது மனைவியுடன் கேரளாவில் உள்ள் "முன்னார் குந்தளா டாம்" சென்றான் அனந்தராமன். அங்கே திடீரென இருவர் அந்த தம்பதியை நெருங்கினர். .... அனந்தராமன் கழுத்தை ஒரு நைலான் கயிரால் நெறித்தனர்..... துடிதுடித்து அந்த இடத்திலேயே செத்துப் போனான் அனந்தராமன். ....யாருமில்லாத அந்த உல்லாச இடத்தில் சாட்சிகளற்று பரிதாபமாக தனது 30ஆவது வயதில் அந்த இளைஞன் செத்துப் போனான்.

புலன் விசாரிக்க வந்த போலீசிடம் யாரோ தனது நகையை எடுத்துக்கொண்டு தன் கணவனை கொன்று விட்டத்தாய் புகார் கூறினாள் அனந்தராமனின் இளம் மனைவி வித்தியா லஷ்மி . 24 வயதான வித்தியா லஷ்மி கதறி அழுத செய்திதான் முதலில் வெளிவந்து எல்லோர் மனத்தையும் உருக்கியது! ஐய பாவம் இளம்பெண்!

.....ஊரும் உறவும் நடுங்கிப் .போயினர்..... கதறினர் ......ஆனால் முனாரில் உள்ள அன்பழகன் என்ற ஒரு ஆட்டோ டிரைவரின் வாக்குமூலத்தால் உண்மைகள் வெளி வர ஆரம்பித்தன.

அனந்தராமன், வித்தியா லஷ்மி தம்பதியை பின் தொடர்ந்த கொலையாளிகள் இருவரும் ஒரு ஆட்டோவில்தான் அந்த டேம் பகுதிக்கு வந்தனர். வரும் வழியில் அவர்களுக்கு போன் கால்களும் எஸ் எம் எஸ்களும் வந்த வண்ணம் இருந்தன. சென்னையில் இருந்து வந்திருந்த அந்த கொலையாளிகளின் மொபைல் போனில் சரியான சிக்னல் கவரேஜ் (டவர்) கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் அன்பழகன் போனுக்கு அந்த எஸ் எம் எஸ் களை அனுப்ப சொன்னார்கள் கொலையாளிகள் இருவரும்....

அந்த மெஸேஜ்களை பார்வையிட்ட போலீஸார் திருக்கிட்டுப் போயினர்!

அவர்களை கொலைக்களத்துக்கு கூப்பிட்டது மனைவி வித்யா லக்ஷ்மியே!!!

கொலையும் செய்வாள் பத்தினி......

ஐயங்கார் வகுப்பை சேர்ந்த, வசதி படைத்த வித்தியா லக்ஷ்மிக்கும் சென்னையை சேர்ந்த ஏழை கிறித்துவ வகுப்பை சேர்ந்த ஆனந்துக்கு இளம் வயதிலேயே காதல் ஏற்பட்டது. அந்த காதலை வீடும் சமூகமும் ஒப்புக்கொள்ளாததால், பெற்றோர் பார்த்து வைத்த அப்பாவி ஐயங்கார் பையன் அனந்தராமனைத் திருமணம் செய்துகொண்டு விட்டு, பின் தன் கணவனை கொடூரமாய் கொல்ல முற்பட்டாள் இளம் ஐயங்கார் மனைவி வித்தியா லஷ்மி!

தன் கணவனை உல்லாசப் பயணம் என்ற பெயரில் யாருமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றாள். அதே இடத்துக்கு தன் கள்ளக் காதலனையும் அவனது சகாவையும் கூப்பிட்டாள். இதற்கு பல போன் கால்களும் எஸ் எம் எஸ் களும் அனுப்பினாள். இவற்றில் கடைசீ சில நிமிஷங்களில் அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் கள்தான் ஆட்டோ ஒட்டுனர் அன்பழகனிடம் சிக்கின.

ஒரு பக்கம் தன் கணவனுடன் உல்லாசமாய் சல்லாபித்துக் கொண்டு, அதே நேரத்தில் தானும் தனது இளம் கணவனும் எங்கே இருக்கிறோம், அவனைக் கொல்ல எப்படி வர வேண்டும் என்றெல்லாம் கொலையாளிகளுக்கு செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தாள் வித்யாலஷ்மி.

கொலையாளிகள் அந்தராமனைக் கொன்றவுடன், தனது பத்துப் பவுன் சங்கிலியைக் கழற்றி அவர்களிடம் கொடுத்து விட்டு, தன் கணவனை யாரோ அடையாளம் தெரியாதவர்கள் கொன்று விட்டு தனது சங்கிலியை கழற்றிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கத்திக்கொண்டே ஓடினாள் கள்ளக்காதலி, கொலைகாரி வித்தியாலக்ஷ்மி!!!!

கொலையாளிகள் சந்தேகிக்க கூடிய விதத்தில் பேசியதையும், தனது மைபைலில் வந்த செய்திகளையும் கண்ட அட்டோ ஓட்டுனர் அன்பழகன் போலீஸிடம் தந்த விபரங்களின் பெயரில் கொலையாளிகளை ஒரு லாட்ஜில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விபரங்களை கோர்ட்டில் சமர்பிக்க, வித்தியா லக்ஷ்மிக்கும் கொலையாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது கோர்ட்டு.

மேல் விபரங்கள் செய்தியில் ......................

Chennai woman murders husband in honeymoon

நன்றி:

கல்யாணமாகி 8 நாட்களில் செத்துப்போன அனந்தராமன்........

4 மறுமொழிகள்:

Anonymous said...

கொலையும் செய்வாள் பத்தினி....
நாட்டு நிலவரம் இப்போது.......

ஏதோ சில உத்தம பத்தினிகளைத் தவிர மற்ற பத்தினிகளுக்கு இது தான் பொருந்தும்......

கொலை மட்டும் தான் செய்வாள் பத்தினி....

')) said...

:)

Anonymous said...

”ஐயங்கார் பெண்”!

ஐயோ, ஐயங்கார் பெண்ணுங்களெல்லாம் கொலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா!

இதுக்கு டோண்டு என்ன சொல்கிறார்!

')) said...

வழக்கமாக 498A என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி கொலைசெய்யும் காமப்பிசாசுகளுக்கிடையே இவர் காதலனையே வைத்து கொலைசெய்த ___________