இவர்களிடம்தான் மனைவிகள் தஞ்சமடைகின்றனர்!


மது குடித்து விட்டு கலாட்டா செய்த பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்

ஜனவரி 26,2009, தினமலர்

திருவனந்தபுரம்: கேரளாவில், மது குடித்து விட்டு போதையில் கலாட்டா செய்த பெண் போலீஸ் சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளா, வயநாடு மாவட்டம் கல்பேட்டாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் வினயா. இதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலருக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, அவர் சக போலீசாருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.இதில், வினயா உள் ளிட்ட 19 போலீசார் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மது குடித்தனர். வினயா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குடித்தார். ஒரு வழியாக விருந்து முடிந்தது.

போதையில் மிதந்த அனைவரையும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, கார் ரெடியாக இருந்தது. ஆனால், வினயா அந்த காரில் ஏற மறுத்து அடம் பிடித்தார். சக போலீசாருடன் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டார். அந்த வழியாகச் சென்ற பஸ் சில் ஓடிச் சென்று ஏறினார். இந்த விவகாரம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. விசாரணைக்குபின் வினயா சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

விருந்தில் பங்கேற்ற மற்ற போலீசாருக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விருந்துக்கு ஏற்பாடு செய்த தலைமைக் காவலருக்கு எதிராகவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

1 மறுமொழி:

')) said...

போதையேறிப்போச்சி புத்திமாரிபோச்சி
சுத்தும் புமி எனக்கே சொந்த மாகிப்போச்சி ன்னு ஆத்தா தண்ணிய போட்டு அடிருக்கு
யாராவது 498a பார்ட்டி மாட்டிருக்கும்