உண்மையைக் கூறும் குடியரசுத் தலைவருக்கு எதிர்ப்பு

"வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு”

ஜனவரி 06,2009. தினமலர்

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண்கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங்களால் பெண்கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்” என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறிய போது, "குறிப்பிட்ட சில சம்பவங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அப்படி பேசியிருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டது.

"ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே போய், போலீசிடம் புகார் செய்வதோ, கோர்ட் படியேறுவதோ கடைசி கட்டத்தில் நடக்கிறது. "கணவன், அவன் குடும்பத்தார் கொடுமைகளை சகித்துக்கொள்ளவே ஒரு பெண் நினைக்கிறாள். அது தான் இன்றைய நாள் வரை நடந்து வருகிறது. அது முடியாத போது தான், கடைசி கட்டமாக வெளியேறுகிறார்; போலீசுக்கு போகிறாள்; கோர்ட் படியேறுகிறாள். அப்படியிருக்கும் போது, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதான கேள்விக்கே இடமில்லை' என்றும் சுதா சுந்தரம் கூறினார்.
===================

“95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” - என்றால் என்ன பொருள்? 95% கேசுகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்பதுதானே? அவர்கள் சொல்வது என்ன? நாடு முழுவதுமான பல கோர்ட்டுகளில் நடந்த 95% வழக்குகளில் தள்ளுபடி செய்த நீதிபதிகள்மீது களங்கம் கற்பிக்கிறார்களா?

இந்த சுதா சுந்தரம் போன்றவர்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள் தெரியுமா?

இந்த வரதட்சணை சட்டம் (Sec 498A of IPC) ஒரு கூட்டுக் கொள்ளைச் சட்டம். இவர் போன்ற பெண்ணியவதிகளும், சில வக்கீல்களும் இன்னும் சில கெடுமதியினரும் சேர்ந்து இந்த கொடுங்கோன்மை சட்டத்தை மெகா அளவில் தவறாகப் பயன்படுத்தி கணவன்மார்களிடமிருந்தும், புகார் கொடுக்கும் மனைவிகளிடமிருந்தும் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

குடியரசுத் தலைவியே இப்படி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டாரே, அதனால் எங்கே அந்தக் கொள்ளை நின்றுபோய்விடுமோ என்று கிலி பிடித்து கொய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார்கள் இந்த பணக்காரப் பெண்மணிகள். உண்மையில் இவர்களுக்கு துன்பப்படும் பெண்கள்மேல் எந்த அக்கரையும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அன்றாடம் கூலி வேலை செய்து வயிறு பிழைத்து குடிகாரக் கண்வனிடம் அடிவாங்கும் பெண்களின் வாழ்வு முன்னேற இவர்கள் ஏதேனும் செய்வார்கள் அல்லவா? அங்கெல்லாம் காசு பெயராதே! வரதட்சணை கேசு போட்டு பணம் கறக்க முடியாதே!!

உண்மைக்கு இடமில்லாத நாடு இது. இங்கு “சத்தியமேவ ஜயதே” என்னும் சுலோகம் வேறு!

வெட்கக்கேடு!!

4 மறுமொழிகள்:

')) said...

போலியான பெண்ணியவாதிகளுக்கு ஜனாதிபதியின் பேச்சு "திருடனுக்கு தேள் கொட்டியது போல ஆகிவிட்டது."
குற்றம் செய்தவர் நெஞ்சம் தான் உண்மையை கேட்டவுடன் பதைபதைக்கும்.

Anonymous said...

இந்தச்செய்தியை படிக்கும் பொழுது வெளிநாட்டில் வேலை செய்து வரும் எனது இஸ்லாமிய நண்பரிடம் அவர் மனைவி 50 லட்சம் மோசடி செய்து பிடுங்க இந்த வரதட்சனை கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறித்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

பெண்ணை பற்றியும், குடும்பத்தை பற்றியும் சரிவர விசாரிக்காமல் புதுச்சேரி, மடுகரை சேர்ந்த வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் குடும்பத்தில், எனது இஸ்லாமிய நண்பர் எந்த வரதட்சனையும் எதிர்பார்ப்புமின்றி முழு திருமணச் செலவையும் ஏற்று லட்சத்திற்கு மேல் பெண்ணுக்கு நகை அன்பளிப்பு செய்தும் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின் மனைவியின் மோசடியும், மோசடி திட்டமும் தெரிந்ததும் உள்ளுர் இஸ்லாமிய ஜமாத்திடம் முறையிட்டார்.

இதை அறிந்த அவர் மனைவி, வக்கீல் (மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு தவ்ஹீம் ஜமாத்), காவல்துறை உயர் அதிகாரி உதவியுடன் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து பொய்யான தகவலுடன் வழக்கு பதிவு செய்து, கௌரவமான குடும்பத்தை சேர்ந்த கணவரின் பெற்றோரையும், கணவரையும் சிறையிலடைத்து கட்ட பஞ்சாயத்து பண்ணி பெருந் தொகை பறிக்கலாமென முயன்றார்கள்.

விபரீதத்தை உணர்ந்து எனது இஸ்லாமிய நண்பரின் பெற்றோர்கள் ஹைகோர்ட்டிற்கு பெயில் கேட்டு விண்ணப்பித்தார்.

மேலும் இந்த வழக்கில் (குஐசு) குற்றம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள இடம், மாதங்களில் நண்பரின் மனைவி அவர்கள் பெற்றோர்கள் வீட்டிலும், குற்றம் சாட்டப்பட்ட நண்பரும் நண்பரின் பெற்றோரும் அயல்நாட்டில் இருந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரத்தை நீதிபதியிடம் சமர்பித்து பெயில் பெற்றார்கள். மேலும் பாண்டிச்சேரி நீதித்துறையின் மீடியேஷன் சென்டரின் உதவியுடன் சமரசம் செய்துக் கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

பாண்டிச்சேரி நீதித்துறையின் மீடியேஷன் சென்டரில் பேசியதில் 50 லட்சம் கொடுத்தால் வழக்கை வாபஸ் பெற்று விவாகரத்து பெற்று சென்று விடுவதாக நண்பரின் மனைவி கூறினாள். நண்பரின் தரப்பினர் கோர்ட் வழியாக கேஸை பார்ப்பதில் பிடிவாதமாக இருந்ததால் 50 லட்சத்திலிருந்து 5 லட்சத்திற்கு இறங்கி வந்தாள்.

நண்பரை சேர்ந்த அனைவரும் எந்த கோர்ட் போய் எவ்வளவு வருடம், பணம் செலவு செய்தாலும் பாவம் பொண்ணு என உன்னிடம் பிடுங்கித்தான் கொடுக்கப்பார்ப்பார்கள். இன்னும் இந்தப் பெண், மீடியா முன் தோன்றி பிரமாதமாக அழுது நடித்தால் உங்கள் குடும்ப மானம் தான் போகும். மோசடிக்காரர்களின் முகத்திரயை கிழிப்பதால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன உலைச்சலை தவிர்க்க 5 லட்சம் கொடுத்து முடிக்க வற்புறுத்தி 5 லட்சம் கொடுத்த உடன் வழக்கு வாபஸ் பெற்றார்கள்.

திருமணம் என்ற போர்வையில் மோசடி செய்து பணம் பறிக்க நினைப்பவர்களுக்கு இந்த சட்டம் மிகப்பிரமாதமாக கை கொடுக்கிறது. இந்திய குடும்ப அமைப்பை சீர்குலைக்க அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட சிறந்த சட்டம்.

//சங்கீதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்களையும் மயக்கும் விதமாக சிரித்து, சிரித்து பேசினார். தனது மேலாடைகளை அடிக்கடி, கீழே விழ வைத்தார்.//

ரண களத்திலும் அந்த பொம்பளைக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது.