வன்கொடுமை சட்டத்தில் மாப்பிள்ளை கைது

இந்தக் குற்றச்சாட்டு ஏதேனும் நம்பத்தகுந்ததாக உள்ளதா என்று பாருங்கள். அந்தப் பெண் சொன்னால் போதும், “சூ, சூ, பிடிடா, விடாதே” என்று போலீஸ் செயல்படுவதுதான் ஆண்களுக்கும் அவர்களைப் பெற்றவர்களுக்கும் இந்த சமூதாயத்தில் அமைந்த சாபக்கேடு!

----------------

(செய்தி - தினத்தந்தி)


நாகர்கோவில்: திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.


கன்னியாகுமரி, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (31). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வி (26)க்கும், கடந்த ஆகஸ்டு 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பத்து சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணம் முடிந்து 40 நாட்களி லேயே மாப்பிள்ளை வீட்டில், வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுக்கத் துவங்கினர். முருகனும் பண ஆசையில் முத்து செல்வியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதுதொடர்பாக முத்துசெல்வி கோட்டார் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து முதலில் தனித்தனியாகவும், பின் சேர்த்தும் கவுன்சிலிங் நடத்தி சேர்த்து வைத்தனர்.பின் வீடு திரும்பினர்.அடுத்த அரை மணி நேரத்தில், முத்துசெல்வி அடித்து உதைத்து, ரோட்டுக்கு அனுப்பப்பட்டார்.
முத்துசெல்வி போலீசில் மீண்டும் புகார் செய்தார்.இது தொடர்பாக, முருகன்,மாமியார் செந்தில்வேலம்மாள் உட்பட எட்டு பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முருகன் மற்றும் உறவினர் சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

11 மறுமொழிகள்:

')) said...

அட...! நம்மூர் மேட்டரு....


(நான் ஊர்ல இல்லாததால் எங்க ஊரு பெண்களுக்கு என்னென்ன கொடுமை நடக்குன்னு பார்த்தீங்களா?)

')) said...

உண்மை இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் தோழரே ?

')) said...

செந்தழல் ரவி,

இதுபோன்ற 498A புகார்களுக்கென்று ஒரு டெம்பிளேட் வைத்திருக்கிறார்கள். அப்படியே வாசகங்கள் ஜோடிக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. அதில் முதல் வாசகம் “திருமணத்தின்போது இத்தனை பவுன் நகையும், இவ்வளவு ரூபாயும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. அது போதாதென்று மேலும் இவ்வளவு ரூபாய் கேட்டார்கள். எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லை” இப்படித்தான் எல்லா புகார்களும் தொடங்கும்.

ஆனால் முதல் பார்வையிலேயே இதிலுள்ள அபத்தங்கள் புரியும். முதலில் பெண்ணுக்குப் போடும் நகை எப்படி வரதட்சணை ஆகும்? குறைவாக நகை போட அந்தப் பெண்ணே முதலில் ஒப்புக்கொள்வாரா?

அது போகட்டும். வரதட்சணை தடுப்புச் சட்டம் 3-வது பிரிவின்படி வரதட்சணை கேட்பதோ, கொடுப்பதோ, வாங்குவதோ எல்லாம் குற்றம். ஆனல் இவர்கள் 498ஏ பிரிவில் கொடுக்கும் கடுமையான புகாரில் வரதட்சணை கொடுத்ததாக ஒப்புக்கொள்வதால் சில பாதிக்கப்பட்ட கணவர்கள் எதிர் வழக்கு போடத்தொடங்கியிருக்கிறார்கள். இதனால் எதிரிகள் வசமாகச் சிக்கி விழித்துக் கொண்டு நிற்பதும் நடக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை, இவ்வளவு கடுமையான 498ஏ பிரிவில் பொய் கேஸ் போட்டு வயதான தாயார், தந்தை, சிறு பெண்கள், குழந்தைகள், கணவன் எல்லோரையும் கைது செய்யவைத்து கொடுமை செய்தபின், கேஸ் பெரும்பாலும் (98%) பொய் என்று நிரூபிக்கப்படுகிறது. ஆனால் அதற்குள் கணவனின் குடும்பத்தினர் சித்திரவதைக்கு ஆளாகி சீரழந்துவிடுகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, அப்படி பொய் புகார் நிரூபிக்கப்பட்டாலும் புகார் கொடுத்த மனைவிமேல் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்னும் சிறப்பு விதி ஒன்றைச் செய்திருக்கிறார்கள். இந்தக் கொடுமையை எங்கு போய் முறையிடுவது!

இதற்கு NCW, Minisiter for women and children, AIDWA, மற்றும் பெண்ணியவாதிகளும், ஜொள்ளியவாதிகளும்தான் காரணம்.

நீங்கள் இதை விளையாட்டாக நினைத்து நகைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்தப் பிர்ச்னையின் தீவிரம் பாதிக்கப்படும் போதுதான் தெரியவரும். ஆனல் அப்போது things will be too late. ஆனால், உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கும் இந்நிலை வரவேண்டாம் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்!

நீங்களும் மணமாகாத உங்கள் சகோதரர்கள், நண்பர்கள் போன்றோரும் திருமண விஷயத்திலும், மனைவியுடன் பழகும் விஷயத்திலும் நிதானத்துடன் கவனத்துடனும் இருந்துகொள்ளுங்கள். நன்றாக இருக்கும் மனைவிமார்களிடம் கூட மனதைக் கலைத்து சின்ன சின்ன மனஸ்தாபங்களையும் கூட கிரிமினல் குற்றங்களாக மாற்றத்துடிக்கும் கெடுமதியினர் நம்மிடையே நிறைய இருக்கிறார்கள்.

Anonymous said...

//முதலில் பெண்ணுக்குப் போடும் நகை எப்படி வரதட்சணை ஆகும்?
//
நண்பரே , துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு ஒரு கொடுமை நேர்ந்துவிட்டது ...
ஆனால் நகை போடுவேதெல்லாம் எப்படி வரதட்சணை ஆகும் என்று கேட்பது ஒரு டூ மச் ... நீங்கள் எல்லா செயிதியையும் ஒரே பார்வையில் பார்கிறீர்கள் என்பது என் தாழ்மையான கருத்து ... நான் எல்லா பெண்களும் நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை ,நீங்கள் கூறியது போல் வரதட்சணை ஓர் ஆயுதமாக கையாள்பவர்களும் இருக்கிறார்கள் ....ஆனால் எத்தனை சதவீதம் அவ்வாறு உள்ளார்கள் என்பதை எண்ணி பார்க்கவும் ...

')) said...

//நகை போடுவேதெல்லாம் எப்படி வரதட்சணை ஆகும் என்று கேட்பது ஒரு டூ மச் ... //

என்ன டூ மச்?

திருமணத்தின்போது பெண்ணுக்குப் போடும் நகை தகப்பன் பெண்ணுக்குச் செய்யும் சீதனம். வரதட்சணை என்பது மணம் செய்துகொள்ளும் பையனுக்குக் கொடுக்கப்படும் வெகுமதி. இது பல குடும்பங்களில் முன்பு இருந்த பழக்கம். அந்தணக் குடும்பங்களில் “எதிர் ஜாமீன்” என்றும், வடக்கே “தஹேஜ்” என்றும் அழைக்கப்பட்ட கப்பம். தமிழ்க் குடும்பகங்களில் இந்தப் பழக்கம் முன்பு இல்லாமல்தான் இருந்தது. ஆண்மகன்தான் பெண்ணுக்கு பரிசம் போடப் பணம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களும் இந்தக் கெட்ட பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இது பின்பு கிறிஸ்தவ, இசுலாமியர்களிடமும் தொற்றிக் கொண்டது.

ஆனால் தற்காலத்தில் படித்த ஆண்களும், அவர்களது பெற்றோர்களும் வரதட்சணையைப் பற்றிப் பேச்சையே எடுப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமல்ல “பெண்ணுக்கு என்ன நகை போடுகிறீர்கள்?” என்று கேட்பதைக் கூட நாகரிகக் குறைவு என்று தற்காலத்தில் கருதுகிறார்கள்.

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், வரதட்சணை மறைந்து போன இக்காலத்தில்தான் சட்டங்களும், வக்கீல்களும், போலீஸ்காரர்களும் மணவாழ்க்கையில் ஊடே புகுந்து திருமணம், குடும்ப வாழ்வு என்னும் நம் அடிப்படை பண்பாட்டு வாழ்க்கை முறையையே சின்னாபின்னப்படுத்தி, மனம் போனபடி எல்லோரையும் சுற்றவைத்து, நம் கலாசாரத்தைச் சீரழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டம் (Sec 498A of IPC) முழுதுமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது அனைவரும் ஒத்துக்கொண்ட விஷயம்.

ஆனால் இந்தியாவில் பெண்கள் தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று வழக்குகளை மேன்மேலும் பதிவு செய்து கணக்குக்காட்டி, ஊடகங்களும், செய்தித்தாள்களும் கோரசாக அதைப் பெரிதுபடுத்தி கூச்சல் போடுகிறார்களே ஏன்? பணம் ஐயா, பணம்!

இந்தியாவிலுள்ள AIDWA, NCW மற்றும் இதில் ஈடுபட்டுள்ள பல பெண்ணியவாதிகளின் என்.ஜி.ஓக்களுக்கு UNIFEM மற்றும் பல அமைப்புக்களிலிருந்து பல மில்லியன் டாலர்கள் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமை குறைந்துவிட்டது என்னும் உண்மை வெளியானால் அந்த பைப் மூடப்பட்டுவிடும் என்பதால் கனிந்துகொண்டிருக்கும் நெருப்பை அணையாமல் விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

வழக்கு முடிவில் 99% தள்ளுபடி செய்யப்பட்டு 1% தான் உண்மை என்று தீர்ப்பானால் கூட, அதை வெளிக் காண்பிக்காமல் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பொய் வழக்குகளை மட்டும் காட்டி கையூட்டு பெற்றுக் கொண்டு நம் சமூகத்தைச் சீரழிக்கும் இந்த கெடுமதியினரின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்து, புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்ர்ந்து நடுநிலையாக் நோக்கக்கூடிய மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் எங்கள் நோக்கம்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வேலை மெனக்கெட்டு இந்தப் பதிவில் நாங்கள் எழுதிக்கொண்டிருப்பது எங்கள் நன்மைக்காக அல்ல. எங்கள் பிரச்னைகளை தனிப்பட்ட முறையில் தீர்த்துக்கொள்ள எங்களுக்கு முடியும். அதற்கு உங்கள் உதவி தேவையில்லை.

நாங்கள் எடுத்துரைப்பது உங்கள் நன்மைக்குத்தான். அதனால் தாங்கள் ஏதோ எல்லாம் தெரிந்த புத்திசாலி போலவும், எங்களுக்கு வேறு வேலையில்லாமல் மனம் பிறழ்ந்த நிலையில் நாங்கள் பிதற்றிகொண்டிருப்பது போலவும் எகத்தாளமாக பதிலுரைத்துக் கொண்டிருந்தால் நட்டம் உங்களுக்கே!

இந்தச் சட்டம் உங்கள் ஒவ்வொருவரையும் தீண்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது எனபதை நினைவில் வையுங்கள். இன்றைக்கு 498A - யில் மாட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்துகொண்டிருக்கும் பாவப்பட்ட ஜன்மங்களில் பெரும்பான்மையோர் உங்களைப்போல் ஒரு காலத்தில் பேசிக்கொண்டிருந்தவர்கள்தான்! இதில் பலர் தன் பெண் திருமணத்தின்போது, இதுபோல் தூக்கி எரிந்து பேசிவிட்டு இப்போது பையன் திருமணம் முடிந்து ஒரிரு மாதத்திற்குள் 498A-யில் கைது செய்யப்பட்டு, இப்போதுதான் ஞானோதயம் வந்து பிதற்றிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது!

')) said...

திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பியுடைய நண்பருடைய தாயார் கைது செய்யப்பட்டு 5 ந்து நாள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனக்கு ஏற்பட்ட கொடுமைபோல் நாட்டில் பல லட்சம் வயதான தாய்தந்தையர் சகோதரிகள் கர்பிணி பெண்கள் இச்சட்டத்தால் பாதிக்பபட்டுள்ளனர்... வலிவந்தவனுக்குதான் அதன் அருமைதெரியும்....

')) said...

தினமலரில் வார இதழ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி உங்கள் பார்வைக்கு.....


http://www.dinamalar.com/weeklys/vmalarnewsdetail.asp?News_id=326&dt=02-01-09

இதில் நடிகவேள் M.R. ராதா அவர்களுடைய செய்தியை காணவும்

')) said...

பெண்உருவில் இருக்கும் பேய்கள் துண்டுப்பேப்பரில் மஞ்சள் பத்திரிக்கையை போல் கதைகளை எழுதிகொடுத்துவிட்டு(IPC 498A COMPLAINT) என் தாய்தந்தையர்களை அப்பாவி சகோதர சகோதரிகளை சிறையில் அடைத்துவிட்டு பிறகு பேரம் பேசி பெருந்தொகை புடுங்குவதும்... பிறகு வாழ்தால் உங்களோடுதான் என்று தே_____ வேசம் போடுவதும் கொடுமையிலூம் கொடுமை.... ஒரு நாள் காவல்நிலையமோ நீதிமன்றமோ சென்று பாருங்கள்... மனிதனை மனிதன் மனிதத்தன்மை யில்லாமல் நடத்துவதும் கேவலப்படுத்துவதும் அமில வார்த்தைவிசுவதும் சர்வசாதரணமாக நடக்கும்......

எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை போல் யாருக்கும் ஏற்படாமல் இருக்கு இறைவனை பிராத்திக்கிறோம்....

கடைசியில் நாயாய் பேயாய் பல வருசம் "நான் வரதட்சணை வாங்கலைங்கோ"ன்னு உண்மை வெளிவருவதற்குள் உருகலைந்துவிடுவோம்


காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதியைவிடக் கொடுமையானது.

')) said...

நாஞ்சில் பிரதாப், நீங்கள் ஊரில் இல்லாததால் தப்பித்திருக்கிறீர்கள். ஊரில் இருந்திருந்தால் பொய் குற்றம் சாட்டப்பட்டவரின் ஊரில் வசிப்பதால் உங்களுக்கும் குற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்று கைது செய்திருப்பார்கள். இது தான் IPC 498A.
**************************
செந்தழல் ரவி பாவம். அவர் இந்திய வம்சவழியைச் சேர்ந்த வேறுநாட்டு குடிமகன் என்று நினைக்கிறேன். விஷயம் தெரியாமல் கூவிக்கொண்டிருக்கிறhர்.

செய்தியை நன்றhக படியுங்கள், திருமணம் நடந்தது ஆகஸ்ட் 2008. திருமணம் நடந்த 40 நாட்களில் சம்பவம் நடந்ததாக புகார். கைது செய்தி வந்திருப்பது ஜனவரி 2009.
****************************//Anonymous said... வரதட்சணை ஓர் ஆயுதமாக கையாள்பவர்களும் இருக்கிறார்கள் ....ஆனால் எத்தனை சதவீதம் அவ்வாறு உள்ளார்கள் என்பதை எண்ணி பார்க்கவும் ...//

நண்பர் Anonymous...

இந்திய நாட்டு ஜனாதிபதியும், இந்திய நாட்டு தலைமை நீதிபதியும் வரதட்சணை சட்டம் தவறhக பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டும் இழி நிலையில் இந்த எண்ணிக்கை இருக்கிறது. மேலும் சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு செல்ல நினைக்கும் தங்கள் குடிமகன்களுக்கு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு இந்தி ய சட்டங்கள் தவறhக பயன்படுத்தப்படுகிறது.

CHECK THESE NEWS:
*********************************
PRESIDEND PRATIBHA PATIL WARNS AGAINST GENDER LAW MISUSE

http://www.telegraphindia.com/1081228/jsp/nation/story_10309933.jsp

President Pratibha Patil has cautioned against the misuse of pro-women laws such as IPC Section 498A that deals with dowry harassment and sought better implementation of others to create a gender-just society.

“Instances exist whereby protective legal provisions for the benefit of women have been subjected to distortion and misuse to wreak petty vengeance and to settle scores. It is unfortunate if laws meant to protect women get abused as instruments of oppression,” she said.

*********************************
CHIEF JUSTICE OF INDIA BALAKRISHNAN ADMITS TO MISUSE OF DOWRY LAWS

http://timesofindia.indiatimes.com/CJI_Balakrishnan_admits_to_misuse_of_dowry_laws/articleshow/4057825.cms

Chief Justice of India K G Balakrishnan on Saturday said that in some cases this section -- that deals with matrimonial cruelty -- was being `grossly misused'.

Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.
**********************************
US GOVERNMENT WARNING:

http://travel.state.gov/travel/cis_pa_tw/cis/cis_1139.html#criminal_penalties

"since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature), the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, ESTRANGED SPOUSES, or other persons."
**********************************

Anonymous said...

//செய்தியை நன்றhக படியுங்கள், திருமணம் நடந்தது ஆகஸ்ட் 2008. திருமணம் நடந்த 40 நாட்களில் சம்பவம் நடந்ததாக புகார். கைது செய்தி வந்திருப்பது ஜனவரி 2009.
//
நீங்களும் செய்தியை கொஞ்சம் நன்றாக படியுங்கள் :
நாகர்கோவில்: திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

உடனே வழக்கம் போல் தாம் தூம் என்று மறுப்புரை எழுதி உணர்ச்சி வசப்படாமல் இருங்கள் ...

Anonymous said...

One of my friend out of his broad-mindedness, denied dowry from his in-laws. They just gave jewels to their daughter and not even a single gram to him. After marriage the situation turned bad. His in-laws started to take money, dress and ornaments from him and his wife and he is unable to ask anything. If he asks, his wife shouts like anything. Finally he broke his relationship with his in-laws and living with his wife.