சென்னை அருகே நடந்த இளம்பெண் கொலையில் கள்ளக் காதலன் கைது பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்
செங்குன்றம், ஜன.13- 2009 : செய்தி: தினத்தந்தி
சென்னை அருகே நடந்த இளம்பெண் கொலையில் அவளது கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டார். அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள புழல் கதிர்வேடு ஊராட்சி வீரராகவன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). இவரது மனைவி மீனாட்சி (26) இவர்களுக்கு சாருலதா (7), ரூபஸ்ரீ (3) என்ற மகள்கள் உள்ளனர். 5-ந் தேதி காலை சந்திரசேகர் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த மீனாட்சியும், அவரது மாமியார் கல்யாணியும் மார்க்கெட்டுக்கு கிளம்பினார்கள். அப்போது மீனாட்சிக்கு செல்போனில் அழைப்பு வரவே, கல்யாணியை மட்டும் மார்க்கெட்டுக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, மீனாட்சி வீடு திரும்பினார்.
கல்யாணி வீடு திரும்பிய போது மீனாட்சி வீட்டுக்குள் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாதவரம் துணை கமிஷனர் ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஹரி, பழனி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் முதலில் மீனாட்சி நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது கணவரே கொலை செய்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு துலங்காததால், மீனாட்சி கடைசியாக செல்போனில் பேசிய நபரை தொடர்பு கொண்டனர்.
அவர் ஓட்டேரி சத்தியப்பா நகரை சேர்ந்த வடிவேல் மகன் சரவணன் (32) என்பது தெரியவந்தது. இவர் சென்னை டாணா தெருவில் அலங்கார மீன்கள் கடை வைத்திருக்கிறார். அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், மீனாட்சியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து சரவணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
“எனக்கும், மீனாட்சிக்கும் படிக்கும் போதே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். ஆனாலும் எங்கள் பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்தது. அவளது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம். வேறு சிலருடனும் தொடர்பு சமீப காலமாக அவளுக்கு வேறு சிலருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதோடு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தாள். சம்பவத்தன்றும் அவள் என்னுடன் செல்போனில் பேசினாள். நானும் அவளது வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தேன். ஆனால் அவள் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தாள்.
இதன் காரணமாகவும், வேறு சிலருடன் அவளுக்கு தொடர்பு ஏற்பட்டதாலும் ஆத்திரம் அடைந்து அவளை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.”
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார். கைது இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை திருவொற்றினிர் மாஜிஸ்திரேட்டு கண்ணன் முன்பு ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்
பெண்ணியவாதிகளே இதற்கு யார் காரணம்?
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க