குழந்தைகள் நலனுக்கு தந்தையின் அன்பும் அடிப்படைத் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மனைவியினுடைய முன்னாள் கணவர் திரு. குமார் ஜாகீர்தார். இவருடைய குழந்தை முன்னாள் மனைவியிடம்தான் கோர்ட்டாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருக்கு தன் குழந்தையை “பார்க்கும்” உரிமைதான் தரப்பட்டது. ஆனால் அவருக்கு குழந்தையை காண்பிக்காமல் தங்களுடன் பல ஊர்களுக்குக் கொண்டு சென்று குமாரை தவிக்கவிடுகின்றார் அவருடைய முன்னாள் மனைவி. இதை எதிர்த்து, தனக்கு குழந்தைக் காண அனுமதிக்கப்பட்டிருக்கும் உரிமையைப் பெற்றுத்தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார், குமார் ஜாகீர்தார்.


அதோடு நில்லாமல் தன்னைப்போல் குழந்தையை அன்புடன் கொஞ்சி விளையாடி வளர்க்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, தன் பெற்ற குழந்தையையே காணக் கிடைக்காமல் ஏங்கித்தவிக்கும் தந்தையர்களின் உரிமைகளை நிலை நிறுத்த “இரு பெற்றோர்களுடனும் தான் வளர வேண்டும் எனக்கேட்கும் குழந்தைகளின் உரிமை இயக்கம்” (Child Rights Initiative for Shared Parenting - "CRISP”) என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கி குழந்தைகள், தந்தைகள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த CRISP இயக்கத்தின் சென்னைக் கிளை நேற்று துவங்கப்பட்டது. அது பற்றிய “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தியின் தமிழாக்கம் இது:

”ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் குழந்தைகள் மணமுறிவினால் பாதிக்கப்பட்டு ஒற்றைப் பெற்றோரால் (single parent) வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளின் மனநலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
விவாகாகரத்து பற்றி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், குழந்தைகளின் காப்புப் பொறுப்பை யாரிடம் அளிப்பது என்ற முடிவை கணவன், மனைவியினிடையே பரஸ்பரம் தொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் எடுக்காமல் அந்தக் குழந்தையின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீப்பளிக்க வேண்டும்” என்றார் திரு. குமார்.

”குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நினைக்காமல் ஒருதலைச் சார்புடன் (biased) முடிவெடுத்து நீதிபதிகள் பெண்கள் கையிலேயே குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்”

”இந்த முறையற்ற செய்கையினால் குழந்தைகள் தகப்பனின் அனபைப் பெறமுடியாமலேயே வளர்கிறார்கள். தங்கள் தந்தையிடமிருந்து முழுதுமாகப் பிரிக்கப்படுகிறார்கள்”

“இந்திய நகரங்களில் சுமார் 40% (ஐந்தில் இரண்டு) திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இதுபோன்ற குடும்ப விவகார வழக்குகள் நீதிமன்றங்களில் ஆமை வேகத்தில் நகர்ந்து குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்க ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது.
அதன் பின்னும் அளிக்கப்படும் தீர்ப்புகளில் தந்தை குழந்தையைக் காணும் உரிமை ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே கிட்டுகிறது. ஒரு டிவி சீரியலை விடக் குறைந்த நேரம் இது” என்று விசனப் படுகிறார் திரு. குமார்.

ஆனால் அந்தக் குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு பணம் கொடுப்பது என்னவோ அந்தத் தந்தைதான். இது ஒரு கொடுமையான முரண்நகை (irony)!

மேலும் இந்திய நீதிமன்றங்கள் தங்கள் மனத்தில் ”கணவன் என்றால் பொருளீட்டுபவன்; மனைவிதான் குழந்தைகளைக் கவனிப்பவள்” என்னும் பழையகால அனுமானத்திலேயே உழன்றுகொண்டு கனவன்மார்களுக்கு எதிராகவே தீப்பளித்துவருகின்றனர். இன்றைய மாறுபட்ட சமூகச் சூழலை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்றும் அங்கலாய்க்கிறார் திரு குமார் ஜாகீர்தார்.

2 மறுமொழிகள்:

')) said...

அனில் கும்ப்ளேக்கு கிடைத்த மனைவியைப் பாருங்கள். தேடி கண்டுபிடித்து எடுத்திருக்கிறhர் !

Anonymous said...

இதுபோல் பொய் வழக்கு போட்டு குடும்பத்தை சீர்குலைக்கும் பெண்களால் பெற்ற குழந்தைகளை எப்படி வளர்கமுடியும்?