498A சட்டத்தில் இனிமேல் கைது செய்ய முடியாது!

பகல் கொள்ளை நிறுத்தப்படும்!

தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்ட குற்றவியல் நடைமுறைக் கோட்பாடுகளில் செய்யப்படும் (Criminal Procedure Code - CrPC) மாற்றங்களின் அடிப்படையில் 7 ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவாக தண்டனை குறிப்பிடப்பட்ட சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் இனிமேல் போலீசார் கைது செய்யக்கூடாது. விசாரிக்கவேண்டுமானால் நேரில் ஆஜராகும்படி ஒரு தாக்கீது அனுப்பினால் போதும்.

இந்த மாற்றப்பட்ட விதிமுறைக்குள் இபிகோ 498A பிரிவும் அடங்கும்.

இதற்கு முன்னமையே உச்சநீதிமன்றத்தால் ”சட்டபூர்வ பயங்கரவாதம்” (Legal Terrorism) என்று இச்சட்டம் வர்ணிக்கப்பட்டதும், குடியரசுத் தலைவரே இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டதும், இதுபற்றி ஊடகங்களும், பல பத்திரிக்கைகளும், குடும்பநல பாதுகாப்பு இயக்கங்களும் குரல் கொடுத்து வந்ததும் நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இந்த சட்ட மாற்றத்தை எதிர்த்து “குய்யோ, முறையோ” என்று கைகால்களை உதைத்துக்கொண்டு அழுவாச்சி செய்து அடம்பிடிப்பவர்கள் யார் தெரியுமா?

அங்குதான் இருக்கிறது சூட்சுமம்! வக்கீல்களய்யா, வக்கீல்கள்!

அவர்களுக்கு ஏன் திடீரென்று மக்கள்மேல், சமுதாயத்தின் மேல், மனைவிமார்கள் மேல் ஏகப்பட்ட கரிசனம் பொங்கி வழிகிறது தெரியுமா?

கைது செய்யப்பட்ட கணவர்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்களை ஜாமீனில் எடுப்பது, முன் ஜாமீன் பெறுவது, பிறகு கேஸ் நடத்துவது, வாய்தா வாங்குவது, கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்து “செட்டில்” பண்ணுவது போன்ற வகைகளில் அடித்து வந்த பகல் கொள்ளை இனிமேல் நின்றுவிடும். அதனால்தான் அவர்கள் கிரீச் என்று கூச்சலிடுகிறார்கள்!

இன்னொரு சாத்தியமும் உள்ளது. இப்போது இந்த சட்டத்தில் உடனே கைது என்னும் பூதம் இருப்பதால்தான் பல கொடுமைக்கார ராட்சசப் பெண்கள் இதைக் கையிலெடுத்து “என்னிடம் ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்டார்கள். 80 வயது மாமனார் கையைப் பிடித்து இழுத்து கற்பைச் சூறையாடினார். அதற்கு என் நாத்தனாரின் இரண்டு வயதுக் குழந்தையும் துணை செய்தது” என்றெல்லாம் கற்பனைப் புகார் கொடுத்து அவர்களைக் கைது செய்ய வைத்து, பிறகு ”10 லட்சம் கொடு, 20 லட்சம் கொடு, வழக்கை வாபஸ் பெறுகிறேன்” என்று பணம் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கைதுக்கு பயந்துகொண்டுதான் பல கணவர்கள் பணத்தை வக்கீல்களிடமும், இந்த நாசகாரப் பெண்பேய்களிடமும் அழுதுகொண்டிருக்கின்றனர். அதுவும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மென்பொருளாளர்கள் பாடு மிகவும் பரிதாபம். சொந்த ஊரில் இருக்கும் பெற்றோர்களுக்கு என்ன ஆகுமோ என்று பயந்து செத்துக் கொண்டிருப்பவர்களும், அவர்களைப் பார்ப்பதற்காக ஊருக்கு வரும்போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுபவர்களும் ஏராளம். எந்த மென்பொருளாளரய்யா வரதட்சணைக் கொடுமை செய்கிறார்? ஆனால் அவர்கள்மேல்தான் 75% கேசுகள்!! விவரங்கள் வேண்டுமா, கேளுங்கள் தருகிறேன்.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 3600 கோடி ரூபாய் கைமாறுகிறது. ஆனால் கைது இல்லையானால் இனிமெல் பருப்பு வேகாது என்று இந்தவகை புகார்களே குறைந்துபோகும்! வேறு ஆயுதம் ஏதேனும் கிடைக்குமா என்று பார்ப்பார்கள்!

குடும்பம் என்றால் மனத்தாங்கல்கள், மனமாச்சறியங்கள் இருந்தே தீரும். அவற்றிற்கெல்லாம், போலீசும், கோர்ட்டுமா தீர்வு?

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை வாசியுங்கள்.

3 மறுமொழிகள்:

')) said...

குடும்பம் என்றால் மனத்தாங்கல்கள், மனமாச்சறியங்கள் இருந்தே தீரும். அவற்றிற்கெல்லாம், போலீசும், கோர்ட்டுமா தீர்வு?

நீங்கள் சொல்வது சரி

')) said...

அப்பாவிகளுக்கு அருமையாண செய்தி ஆனால் காவல்நிலையத்தில் உள்ள கடமைவிரர்கள் இதை நடமுறைபடுத்துமா?
ஐயோ வருமானம் போச்சே -- புலம்புவது கேட்கிறது

')) said...

498a பொய்வழக்கினால் எவ்வளவு மனவலி, வேதணை, உயிரிலப்பு, பணம்பரிப்பு...
பல பாதிக்கப்பட்ட மனங்களின் பிரத்தனைகள் வீண்போகவில்லை
இனிமேலாவது இதுபோல் காமபிசாசுகள் திருந்துமா?

இளைஞர்களே திருமணம் செய்யும் முன் கோடிதடவை பெண்வீட்டாரையும் பெண்ணைப்பற்றியும் விசாரித்து திருமணம் செய்யுங்கள்...

திருமணத்திற்கு செய்யும் செலவுக்கு பதிலாக பெண்வீட்டாரை பற்றி விசாரிப்பதற்கு பயன்படுத்துங்கள்... இல்லாவிடில் சில பிசாசுகள் குடும்பத்தை குலைத்து சுறையாடி நடுத்தெருவில் நிருந்திவிடுவார்கள்... பொய்வழக்கு போடுகிறேன் என்று மச்சள் பத்திரிக்கை எழுதி வயதான நமது தாய்தந்தையர்களை நம்ம சகோதர சகோதரிகளை.. பச்சிளம் குழந்தைகளை சிறையில் அடைத்து சின்னாப்பின்ன படுத்திவிடுவார்கள்....

நோந்து நூடுல்ஸ்ஆனவன்...

எல்லாம் அனுபவம் பேசுதப்பா பேசுதப்பா....