எதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்கு

டில்லியில் காவல்துறையினரும் உளவியல் நிபுணர்களும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தாய்வின்படி, டில்லியில் பதியப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு கேசுகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை என்று கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் எதிரிகளை பழிதீர்க்க இத்தகைய கற்பழிப்பு வழக்குகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. சில கேசுகளில் குடும்ப சச்சரவுகளில்கூட வேண்டாதவர்களை துன்புறுத்த ஒரு இளம் பெண்ணை “ஐயோ, கற்பழித்து விட்டானே!” என்று கூச்சலிடச் செய்த நிகழ்வுகளைக் கண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

இன்னும் 15% வழக்குகளில் சில இளம் பெண்கள் தன் இச்சைப்பட்டு செக்ஸில் ஈடுபட்டபின், அதன் பின் விளைவுகளை நினைத்து பயப்பட்டு, சம்பத்தப்பட்ட ஆண்கள்மேல் கற்பழிப்பு புகார்களை அளித்துள்ளார்கள் என்பதும் வெளிவந்துள்ளது.

ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீங்கள் நினைக்கலாம், அவர்கள் வேறு வகை வழக்குகளை பதிவு செய்து எதிரிகளோடு சண்டையிட்டிருக்கலாமே, ஏன் கற்பழிப்பு வழக்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், என்று.

இங்குதான் நம் சட்டமியற்றுபவர்களின் முட்டாள்தனம் தெளிவாகிறது. எந்தவித சாட்சியமும் தேவையில்லை, சாட்சியச் சட்டம் (Evidence act) இதில் அமுல் செய்யப்படமாட்டாது. ஒரு பெண்ணோ அவருடைய பெற்றோரோ புகார் கொடுத்தால் போதும், முழுமையாக கூற்றம் நிரூபிக்கப்படக்கூட அவசியமில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு (கவனியுங்கள், ஆணுக்கு மட்டும்!) தணடனை என்று சட்டமியற்றினால் அது துர்பிரயோகம் (தவறான பயன்பாடு) செய்யப்படாமல் இருக்குமா?

கற்பழிப்பு, வரதட்சணை சாவு, வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், மனைவியை தற்கொலைக்குத் தூண்டுதல் (கனவனை மனைவி தூண்டினால் இந்தச் சட்டம் பாயாது) இதுபோன்ற சட்டங்கள் இத்தகைய வகையைச் சார்ந்தவை. இவை அநேகமாக பொய் வழக்குகள்தான். இத்தகைய வழக்கு நடைமுறையில் நிறைய பணம் விளையாடுகிறது.

அசத்தியமேவ ஜயதே!

1 மறுமொழி:

Anonymous said...

இந்தியப் பெண்கள் என்றhலே ஏதோ கொடூரமான பயங்கரவாதிகள் என்று சர்வதேசநாடுகள் நினைக்கும் காலம் வந்து விட்டது. நான் எனது வெளி நாட்டு நண்பரிடம் எனக்கும் என் மனைவிக்கும் குடும்பப் பிரச்சினை அதனால் அவள் போலீஸில் புகார் செய்திருக்கிறhள் என்றவுடன் அந்த வெளிநாட்டவர் என்னை கேட்ட கேள்வி என்ன தெரியுமா? டவுரி கேஸh என்று கேட்டார். நான் ஆச்சரியம் அடைந்தேன். டவுரி பற்றி எப்படி தெரியும் என்று கேட்டேன் அதற்கு அவர் உன்னைப் போல மற்றெhரு இந்திய நண்பரும் இதே போன்ற கேஸில் மாட்டியிருக்கிறhர். இந்தியப் பெண்கள் ஏன் இது போல கணவர் மீது பொய் கேஸ்கள் கொடுக்கிறhர்கள், வீட்டுப்பிச்சினையில் ஏன் போலீஸ் தலையிட்டு கணவர்களை கிரிமினல் போல நடத்துகிறhர்கள், நீங்கள் எப்படிப் பட்டவர் என்று உடன் பணிபுரியும் எங்களுக்குத் தெரிகிறது கூடவே இருந்து குழந்தைப் பெற்ற உங்கள் மனைவிக்குத் தெரியவில்லையா என்று கேட்டார். அயல்நாடு உங்களைப்பற்றி நன்கு ஆராய்ந்து, உங்களை நம்பி பெரிய பொறுப்புள்ள பதவிகளைத் தந்திருக்கிறது உங்களுடைய தாய் நாடு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடத்துகிறது என்று பரிதாபம் கலந்த ஏளனத்துடன் கேட்டார். இந்தக் கேள்விக்கு வெட்கப்படுவதா அல்லது வேதனைப்படுவதா?