குடும்பத்தில் பிரச்னையா, போடு வரதட்சணை வழக்கு!

சமீபத்தில் "இப்படிக்கு ரோஸ்" என்னும் டி.வி நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அஜிதா என்பவர் (இவர் ஒரு பெண்ணியவாதி) ஒரு திடுக்கிடும் உணமையை வெளிப்படுத்தினார். அதாவது ஒரு மணமான பெண் தன் குடும்பத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அதனால் மனக்கசப்பு தோன்றி, அதை எப்படித் தீர்த்து வைப்பது என்று இவர் போன்ற வக்கீல்களை அணுகினால், இவர்கள் அந்தப் பெண்களுக்கு உடனே சர்வ சாதாரணமாகக் கொடுக்கும் அறிவுரை, "IPC SEc. 498A-யில் (வரதட்சணைக் கொடுமைச் சட்டம்) கேசு போடலாம்" என்பதுதான்!

ஏனெனில் இதச் சட்டத்தின்படியான புகாரில் என்ன வேண்டுமானலும் எழுதலாம். சட்டம் மிகக் கடுமை என்பதால் கணவனையும் அவருடைய பெற்றோரையும் உடனே கைது செய்ய வைக்கலாம். வக்கீலுக்கும் சிரமப்பட்டு சட்ட நுணுக்கங்களுடன் வாதாடி வழக்கு நடத்த வேண்டிய தேவை இல்லை.

இது போன்ற புகாருக்கென்றே ஒரு template வைத்திருப்பார்கள். அதில் முதல் பாகத்தில் திருமணத்தின்போது இவ்வளவு நகை போட்டோம், இவ்வளவு பணம் கொடுத்தோம் என்றெல்லாம். இருக்கும். பின்னர் மேலும் பணம், நகை கேட்டு என்னைத் துன்புறுத்தினார் என்று எழுதப்படும்."துன்புறுத்தினார்(கள்)" என்பது மிக முக்கிய வாசகம். அது இல்லையென்றால் இந்த் 498A சட்டத்தை சேர்க்க முடியாது.

இதோ இன்றைய தினத்தந்தியில் வெளி வந்துள்ள செய்தியை காணுங்கள்.

திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது. இரண்டாவது குழந்தை இறந்து பிறந்த பிறகு ஒரு மனக்கசப்பு தோன்றியிருக்கிறது. அதற்குத் தீர்வு? போடு, 498A வழக்கு!
-----------

தேவகோட்டை அருகே நகை, பணம் கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவகோட்டை அருகே உள்ள சாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 34). இவருக்கும் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் நைனாவயல் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 24 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட்டது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் 2-வது குழந்தை பிறந்து இறந்தது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டது.

இதற்கிடையில் பாலசுப்பிர மணியன் வரட்சணையாக மேலும் தனக்கு பணம்-நகை தரவேண்டும் என தமிழ் செல்வியை கொடுமைப் படுத்தினாராம். இது குறித்து தமிழ் செல்வி தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் அமலராணி, சப்- இன்ஸ் பெக்டர் அனுராதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------
கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்து கொடுமைப் படுத்தி, ஆண்களை "வேண்டாமையா திருமணம் என்னும் புதைகுழி" என்று ஓடவைத்து, இந்திய நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையே நாசம் செய்து முடிப்பதாக கங்கணம் கட்டிக் கொண்டு இது போன்ற கொடுங்கோல் சட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.

நீங்கள் நினைக்கலாம், "அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ சிலர் இந்தச் சட்டத்தை தவறாக பயன் படுத்துவார்களாக இருக்கும்; இதைப் போய் இந்த ஆள் பெரிது படுத்தி ஒரு வலைப்பதிவில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறானே" என்று!

உண்மையில் இந்தப் பிரச்னையின் பயங்கரம் உங்களுக்குத் தெரியுமா? மத்திய அரசு ஆண்டு தோறும் குற்றங்கள் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது. அது "தேசிய குற்றத் தரவு மையம்" (National Crime Records Bureau) என்னும் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. அதனை http://ncrb.nic.in/ என்னும் வலைத்தளத்தில் காணலாம். அதில் கண்டுள்ளபடி 2007-ஆம் ஆண்டில் மட்டும் இந்த 498A சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் 75,930 ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 20.3% அதிகம். இந்தச் சட்டத்தினால் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்தச் சட்ட துஷ்பிரயோகம், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரையாவது பாதிக்கப்பட்டவராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.

ஆண்கள் ஜாக்கிறதை!

3 மறுமொழிகள்:

')) said...

மறுமொழி இடுவதில் சிரமம் இருந்தது. அதனால்தான் நண்பர்கள் எவரும் இங்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இயலவில்லை. தற்போது சரியாகி விட்டது.

அன்பர்கள் தங்கள் மேலான மறுமொழிகளை இங்கு பதிவு செய்யும்படி வேண்டுகிறேன்.

நன்றி.

')) said...

நான் குறிப்பிட்டுள்ள "இப்படிக்கு ரோஸ்" நிகழ்ச்சியின் பகுதிகளை கீழ்க்கண்ட வலைத்தளத்தில் காணலாம்:

http://tinyurl.com/dowry-harassment

நன்றி.

Anonymous said...

ஆகா நல்ல யோசனை. எனக்கெதிராக கொடுக்கபட்ட புகாரின் நகல் என்னிடம் இருக்கிறது. ஒரு "CRIMINAL" lawyer தான் அதை எழுதிக் கொடுத்திருக்கிறன். இந்த டெம்ப்ளேட்டை வைத்து நானும் ஒரு பெட்டிக்கடை ஆரம்பித்தால் 498A வியாபாரம் நன்றக நடத்தலாம் போலிருக்கிறதே!

என்ன செய்வது படித்து நன்றhக சம்பாதிக்கும் வயதில் இது போன்ற பொய் வழக்குகளில் சிக்க வைத்த நாட்டில் இது போன்று பிழைப்பு நடத்தினால் தான் வாழமுடியும்.