ஐ.பி.எஸ். அதிகாரிக்கு 83 வயதில் விவாகரத்து

டிசம்பர் 28,2008 - நன்றி: தினமலர்

புதுடில்லி: மனைவியை விட்டு பிரிந்து 40 ஆண்டாக தனியாக வாழும் ஐ.பி.எஸ்.,அதிகாரிக்கு 83 வயதில் இப்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

டில்லியில் வசிப்பவர் கிஷன் பலானி; ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மனைவி விமலா; கருத்துவேறுபாடு காரணமாக நாற்பதாண்டாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார் கிஷன்.

இதை விசாரித்த கோர்ட்,"இருவரும் பல ஆண்டாக பிரிந்து வாழ்வதால், இவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை' என்று முடிவுக்கு வந்து, ஆதாரங்கள் அடிப்படையில் கிஷனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் செய்தார். இதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, "எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. இதற்கு என் கணவர், கருத்து வேறுபாடு காரணமாக, மருத்துவ சிகிச்சை அளிக்காமல் மறுத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விமலா காலம் தாழ்த்தி, தொடர்ந்து கணவர் மீது புகார் கூறி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஐகோர்ட்டில் அப்பீல் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின், கிஷனுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து அளித்த குடும்ப நல கோர்ட் உத்தரவை உறுதி செய்தது.

நீதிபதி குப்தா தன் தீர்ப்பில்,"நாற்பதாண்டாக கணவன் - மனைவி என்று எந்த வகையிலும் இருவரும் சேர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத போது, அவருக்கு சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கணவன் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது சரியல்ல. நாற்பதாண்டாக, தனிமையில் தவிப்பதையும், மன வேதனை அடைந்திருப்பதையும் கணவன் சொல்வதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. அவருக்கு விவாகரத்து அளிப்பது சரிதான் என்றும் முடிவு செய்கிறது' என்று தெரிவித்தார்.
----------------------
நம் நாட்டில் திருமண சட்டங்கள் எவ்வளவு அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கின்றன தெரியுமா!

4 மறுமொழிகள்:

')) said...

ஒரு நல்ல மனநல மருத்துவரை உடனே பார்க்கவும்...!!!!

')) said...

செந்தழல் ரவி அவர்களே,

உங்களைப் போல்தான் நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நிகழும் அநியாயங்களைப் பற்றிய தகவல் எனக்குக் கிட்டும் வரையில்!

ஆனால், இன்றைய சமுதாயத்தில் நம் பாரம்பரிய கட்டுப்பாடுகள் அனைத்தும் தவறானவை, தன் மனம்போனபடி நடப்பதுதான் பெண்ணுரிமை, அதுதான் பெண் விடுதலை என்று ஓயாமல் பெண்ணியவாதிகள் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் செய்யும் போதனைகளின் தாக்கத்தால், மற்றும் சினிமா, டிவி போன்ற வெகுஜன ஊடங்களினால் பரப்பப்படும் கருத்தாக்கங்களால், இன்றைய தினம் நம் நாட்டில் குடும்ப வாழ்வு என்பதே சிதைந்துகொண்டு வருகிறது.

அத்தகைய வக்ர சிந்தனைகளுக்குத் துணை போகின்றன பல ஆணெதிர்ப்பு மற்றும் ஆணழிப்பு சட்டங்கள். இபிகோ 498A, குடும்ப வன்முறைச் சட்டம் போன்றவை தவிர, கற்பழிப்புச் சட்டங்கள், பெண் தற்கொலை பற்றிய சட்டங்கள், வரதட்சணை எதிர்ப்புச் சட்டம், இந்து திருமனச் சட்டம் இன்னும் பல முழுமையான முட்டாள்தனமான வரைமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு சில துளிகள்:

1)CrPC Sec 125 படி விவாகரத்து ஆனபின்னும் பழைய மனைவிக்கு பராமரிப்புக்கான பணம் கொடுக்கவேண்டும், குழந்தைகள் இல்லாவிட்டாலும்

2) 498A சட்டப்படி ஒரு பெண் பொய்ப் புகார் கொடுத்து அது நிரூபிக்கப்பட்டால் கூட அவள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. (இத்தகைய விலக்களிப்பை பணியிட பெண் துன்புறுத்தல் பற்றிய சட்டத்திலும் கொண்டுவரப் போகிறார்கள். இனிமேல் மேலதிகாரி ஏதாவது கடிந்து சொன்னால், என்னைக் கையைப் பிடித்து இழுத்தான் என்று முறையிடலாம். ஆதாரம் ஏதும் தேவையில்லை.)

3)இந்து திருமணச் சட்டப்படி விவாகரத்து கிடைக்கவே கிடைக்காது, எவ்வளவு ஆண்டானும் சரி. ஒருமுறை குடும்ப நிதிமன்றங்களுக்குச் சென்று பாருங்கள் - 10, 20 வருடங்களாக நடையாய் நடந்துகொண்டிருப்பவர்களைக் காணலாம். விவாகரத்து பெற ஒரே வழி இருவரும் உடன்பட்டு விண்ணப்பித்தல்தான். ஆனால் அதற்கு கணவன் லட்சக்கணக்காக மனைவிக்கு பணம் கொடுக்கவேண்டும்.

இதுபோல் அடுக்கிக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு உண்மையிலேயே சமூகப் பிரக்ஜை இருந்தால் ஒரு வக்கீலிடம் சென்று நான் கூறியுள்ள அநியாய சட்டங்களின் செயல்பாடு பற்றிக் கேட்டுப் பாருங்கள். தெளிவு பெறுவீர்கள்.

உங்கள் மீதும் உங்கள் பெற்றோர் மீதும் 498A சட்டம் பாயாமல் இருக்க என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

செந்தழல் ரவி அவர்களுக்கு திருமணமாகவில்லை என்றhல் மிக விரைவில் திருமணம் நடந்து இந்திய அரசின் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் IPC 498A, DP, DV சட்டங்களின் கீழ் பொய் வழக்கு பதியப்படும் வரை அவருக்கு அடுத்தவரின் வலியை உணர முடியாது. கூடிய விரைவில் இந்தியாவில் உள்ள இதுபோல பேசிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு இந்த கொடிய விஷம் கொடுக்கப்பட வேண்டும் என்று ..........

தனி மனிதனுக்கு உணவு இல்லையென்றhல் ஜகத்தினையே அழிக்க வேண்டும் என்று கவிஞர் பாரதியார் பாடியிருக்கிறhர். அது போல இப்போது அப்பாவி ஆண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றhல் அனைத்து ஆண்களும் இந்த படுகுழியில் தள்ளப்படவேண்டும். அது வரை சிலர் இப்படித்தான் உண்மை நிலை தெரியாமல் வேடிக்கை வார்த்தைகளை கூறிக்கொண்டிருப்பார்கள்.

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறhர்கள்?

')) said...

அன்பு நண்பர் ரவி அவர்களுக்கு,

என்னுடைய blogspotக்கு சென்று என்னுடைய மனைவி(??) என் மீது கொடுத்துள்ள புகாரை படித்துபார்க்கவும்... ஒரு புதிய காமக்கதையை படித்த நிறைவு ஏற்படும்...

தாங்கள் மீதும் தாங்கள் குடும்பத்தார் மீதும் நமது நாட்டின் 498a என்னும் குடும்பப்புற்று நோய் தாக்காம் இருக்கப் பிராத்திக்கிறேன்