இன்னொரு கணவனைக் கொன்ற காரிகை

விவசாயி மீது காரை ஏற்றி படுகொலை செய்த மனைவி

பழனிசெட்டிபட்டி, டிச.20- 2008

தேனி அருகே விவசாயி மீது காரை ஏற்றி படுகொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியை அடுத்துள்ள திருச்செந்தூர் கிராமத்தினை சேர்ந்தவர் பாண்டி(வயது65), விவசாயி. இவருக்கும் இவரது மருமகன்களான ஜெயபிரபு(29), ரமேஷ் ஆகியோருக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் தேனி- போடி சாலையில் பாண்டி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பாண்டி சம்பவ இடத்தி லேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து பாண்டியின் உறவினர் வல்லவன் (42), பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாண்டி விபத்தில் இறக்கவில்லை என்பதும், சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது உறவினர்களே கொலை செய்ததும் தெரிய வந்தது.

அவரை அவரது மனைவியான பாக்கியலட்சுமி, மருமகன்கள் ஜெயப்பிரபு, ரமேஷ் மற்றும் உறவினரான அனுமந்தன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் காரை ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.இதனை அடுத்து பாண்டியை காரை ஏற்றி கொன்றதாக அவரது மனைவி பாக்கியலட்சுமி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.