தந்தைமை

இந்தியாவிலுள்ள நீதிபதிகளில் பெரும்பான்மையோர், தம்பதிகள் விவாகரத்தினால் பிரியும்போது, குழந்தைகளின் காப்புப் பொறுப்பை மனைவிகள் கையில்தான் ஒப்படைக்கிறார்கள். கணவனை ஒரு குற்றமும் இழைக்காதவனாகவும், பண்பும், பாசமும் உள்ளவனாகவும் அந்த நீதிபதி ஒப்புக் கொண்டாலும்கூட குழந்தையை மட்டும் பெண்கள் வசம்தான் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மனத்தில் பெண்கள்தான் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள், தந்தை ஒரு பொறுப்பற்றவன் என்னும் எண்ணக் கட்டமைப்பு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.


இது எவ்வளவு தவறான கருத்தியல் என்பதை பல பெண்கள் மீண்டும் மீண்டும் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றும், பொறுப்பற்ற முரையில் வெறி கொண்டு பிற ஆண்களுடன் தவறன உறவு கொண்டும், தன்னலமே பெரிதாகக் கொண்டு குழந்தைகளைக் கவனிக்காமலிருந்தும் செவ்வெனே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனலும் குழந்தைகளை தந்தை வசம் நீதிபதிகள் ஒப்படைப்பதில்லை. சமீபத்தில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி குழந்தையின் விருப்பத்தைக் கேட்டபோது அது தெள்ளத் தெளிவாக தன் தந்தையிடம்தான் வளருவேன் என்று கூறி அழுதும்கூட அந்த நீதி(!)பதி குழந்தையை மனைவியிடம்தான் ஒப்படைத்தார்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், தகப்பனுக்கு வாரத்திற்கு ஒரு முறை "எட்டிப் பார்க்கும் உரிமை" (visiting right) மட்டும்தான் கொடுக்கப்படும். அதுவும் பலமுறை அது அவனுக்குக் கிட்டுவதில்லை. அந்த நாள் பார்த்து அந்தப் பெண்மணி குழந்தையை எடுத்துக் கொண்டு வேறு ஊர் சென்று விடுவாள். இதுபோல் நடந்தால் இதற்கு நிவாரணம் பெற கணவன்தான் தன் கைக்காசு சிலவு செய்து கோர்ட்டில் contempt of court கேசு போடவேண்டும். அது வாய்தா மேல் வாய்தாவாக இழுக்கும். அதற்குள் குழந்தை பெரிதாக ஆகிவிடும். அதற்கு தந்தையே நினைவிருக்காது. மேலும் தந்தையைப் பற்றி ஒரு தவறான கருத்தாக்கம் அந்தப் பிஞ்சு மனத்தில் பதிக்கப்படும்.

ஆனால், இப்போது நன்றாகக் கவனியுங்கள்.
இப்போது நான் சொல்லப்போவதுதான் கொடுமையிலும் கொடுமை, ஒலிம்பிக் கொடுமை. அந்தக் குழந்தையைக் கண்ணால் காணக்கூட உரிமையில்லாத அந்தக் கணவன்தான், குழந்தையின் பராமரிப்பு, படிப்பு முதலிய அனைத்து சிலவுகளுக்கும் மாதா மாதம் பணம் கொடுக்கவேண்டும். அதுவும் அந்தப் பெண்ணின் கையில். அப்படித்தான் தீர்ப்புக்கள் வழங்கப் படுகின்றன. Can there be a worse irony in this world!
அவள், குழந்தையின் நலனுக்கு அதைச் சிலவு செய்யாமல் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எந்தவித ஜல்ஸா செய்தாலும் கேள்வி கேட்க முடியாது.

என்ன சட்டமோ, என்ன கோர்ட்டோ, என்ன நீதியோ. அநியாயமய்யா இது!

சரி. இந்தத் தந்தைமார்கள் குழந்தைகளின் நலனுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா? ஒருமுறை டிரெயினில் செல்லும்போது பார்த்தேன். மேல் இருக்கையில் படுத்திருந்த கணவன் ஒவ்வொரு முறையும் இறங்கி வந்து குழந்தைக்கு டயபர் மாற்றுவது, ஃபீடிங் பாட்டிலில் பால் ஊற்றி குழந்தைக்கு ஊட்டுவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். அந்த மகாராணி ஒய்யாரமாக தனக்கு ஒன்றுமே முடியவில்லை என்று முனகிக் கொண்டிருந்தாள். ஆனால் அடிக்கு ஒருதரம் விருத்துப் போண்டிருந்த தலைமுடியை ஸ்டைலாகக் கோதி விட்டுக் கொள்வதில் மட்டும் குறைவில்லை!

பெரும்பாலான குடும்பங்களில் இந்தக் கதைதான்.

சரி. இங்கே பாருங்கள். இரவு முழுதும் கியூ வரிசையில் நின்று காத்துக் கிடக்கிறார்களே, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்கவேண்டுமென்று, அவர்கள் யார்?