வழக்கறிஞர் மற்றும் போலீசார் கருத்து

கணவர்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த பெண்களையும் பொய் வழக்கு போட்டு கொடுமைப் படுத்தும் மனைவிகளைப் பற்றி வழக்கறிஞரும் காவல் துறையினரும் உண்மையை உடைத்துச் சொல்கிறார்கள் பாருங்கள்.

நன்றி: அவள் விகடன் (ஒரு பெண்களுக்கான வார இதழ்) - படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசியுங்கள்.


2 மறுமொழிகள்:

Anonymous said...

இதை படிக்கும்போது நெஞ்சு கொதிக்கிறது, அத்தனையும் அப்பட்டமான உண்மை.

எனக்கெதிராக கொடுக்கப்பட்ட புகாரில் எனது 10 மாதக் குழந்தையை நானும் எனது வயதான தாயும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்ததாக எழுதப்பட்டிருக்கிறது.

மும்பை தீவிரவாதிகளை ஒடுக்கியது போல் இந்த தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவது எப்போது?

இன்னும் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ?

Anonymous said...

முடிந்தால் தயவு செய்து இதையும் உங்களுடைய "அவள் விகடன்" கட்டுரையுடன் இணைக்கவும் - நன்றி.

ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் சிக்கினார்
பணத்திற்காக சாப்ட்வேர் இன்ஜினியர்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் சிக்கினார்: உடந்தையாக இருந்த தாயும் கைது
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=6540&cls=row4&ncat=IN
நவம்பர் 27,2008,00:00 IST

நகரி: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருவரை திருமணம் செய்து தலைமறைவாகி விட்டு, மூன்றாவதாக இன்னொருவரை மணக்க நிச்சயதார்த்தம் முடித்துள்ள இளம்பெண்ணை திருப்பதி போலீசார் கைது செய்தனர். ஆண்கள் மட்டுமே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதை அறிந்துள்ளோம். இதற்கு நேர்மாறாக, ஆந்திர மாநிலம் குண்டூர் நகரை அடுத்த, பிராடிபேட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் பூர்ணவல்லி தம்பதியரின் மகளான தீப்தி(24)யும் செயல்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு, சத்யதீப்தி, சாய்தீப்தி என்ற பெயர்களும் உண்டு. இவரது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாய், மகள் இருவருமாக தனியாக வசித்து வந்தனர். மகளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்து வைக்க, பூர்ணவல்லிக்கு வசதி இல்லாததால், பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினர். இதற்கு பொறியியல் படித்த சாப்ட்வேர் இன்ஜினியர்களை திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண போர்வையில் அவர்களை பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டனர். இதன்படி, திருப்பதி மாதவநகரைச் சேர்ந்த கோதண்டராம நாயுடுவின் மகன் பாலசுப்பிரமணியம்(30) என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை தேர்ந்தெடுத்து, 2004ம் ஆண்டு இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணமான மூன்று தினங்களுக்கு பின் பிறந்த வீடான குண்டூருக்கு சென்று வருவதாக, கணவரிடம் கூறிச்சென்ற தீப்தி, மீண்டும் கணவரின் திருப்பதி வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் மனைவியை தேடிச் சென்று குண்டூரில் விசாரித்ததில், அவர் எங்கு உள்ளார் என்ற விவரம் கிடைக்காமல் திருப்பதிக்கு திரும்பி விட்டார். சில மாதங்கள் கழிந்தபின், பாலசுப்பிரமணியத்திற்கு போன் செய்து பேசிய தீப்தி, "என்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி போலீசில் புகார் செய்து கோர்ட்டுக்கு போவேன்' என, போன் மூலம் மிரட்டினார். அதன்பின், பாலசுப்பிரமணியத்திடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர், தீப்தி என்ற பெயரில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தனசேகர ரெட்டியை, இன்டர்நெட்டில் சாட்டிங் செய்து காதலில் விழ வைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரான பாலசுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்தது போலவே, தனசேகரிடமும் பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, திருமணம் நடந்த 2006ம் ஆண்டு குண்டூர் போலீசில் தனசேகர் புகார் செய்ததின் பேரில் தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பின்னும் மோசடியை தொடர முடிவு செய்த இந்த இளம்பெண், மீண்டும் தன் பெயரை சாய்தீப்தியாக மாற்றிக்கொண்டு மற்றொரு இளைஞரை தேடிப்பிடித்து அவரை திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்து கொண்ட திருப்பதியைச் சேர்ந்த முதல் கணவரான பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் திருப்பதி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் இருவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சொந்த வேலை காரணமாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பூர்ணவல்லி, அவரது மகள் தீப்தி இருவரையும் திருப்பதி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.