மகன் செத்தாலும் பரவாயில்லை, புருஷன் மேல் போட்ட வழக்குதான் முக்கியம்!

சென்னை: மூளை செயலிழந்த சேலம் சிறுவனின் உடலுறுப்புகளை தானம் கொடுப்பதில் தந்தை கையெழுத்திட மறுத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகன் நாஞ்சில் வளவன் (8). கடந்த திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாக கீதாவிற்கு தகவல் வந்தது. நாஞ்சில் வளவனின் மூளை செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாஞ்சில் வளவனின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக கீதா கூறினார். சிறுவன், நேற்று அதிகாலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான்.
டாக்டர்கள் செய்தது என்ன? : பரிசோதித்த டாக்டர்கள், நாஞ்சில் வளவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம் என்றும், சிறுநீரகத்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 வயது பெண்ணுக்கு பொருத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

உடலுறுப்பு தானம் பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்டவரின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். அது போல் நாஞ்சில் வளவனின் பெற்றோரிடம் கையெழுத்தை டாக்டர்கள் கேட்டனர். தாய் கீதா மட்டும் கையெழுத்து போட்டார். தந்தை வரவில்லை எனக் கூறினர்.டாக்டர்கள், "தந்தையின் ஒப்புதல் கையெழுத்து இருந்தால் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்; அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இல்லையேல் சட்டசிக்கல் ஏற்படும்' என்று கூறினர்.

மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், நாஞ்சில் வளவனின் தந்தை இளங்கோவிடம் டெலிபோனில் பேசினர்.இளங்கோ, தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய பேச்சளவில் சம்மதம் தெரிவித்தார். எழுத்துப் பூர்வமாக கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு ஆண்டு சிறை எதற்கு?

இளங்கோவிற்கும், கீதாவிற்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இளங்கோ, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கீதா, போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.வரதட்சணை கொடுமை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இளங்கோவிற்கு இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோ இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாக தெரிகிறது. கீதாவும் இளங்கோவிற்கு தண்டனையை அதிகரிக்கக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்கினால் வந்து கையெழுத்திடுவதாக இளங்கோ கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கீதாவும், உறவினர்களும், "நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது" என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், "மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவன் உடலுறுப்புகளை தானம் பெற்றே தீரவேண்டும்' எனக் கூறி கீதா, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கூச்சலிட்டு, அழுது புரண்டார். அப்போது போலீசார் வந்து கீதாவை சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
மறுபடியும் டாக்டர்கள் மற்றும் போலீசார், இளங்கோவிடம் பேசினர். அவர்கள், இளங்கோவை அழைத்து வர சேலம் போலீசார் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.இளங்கோ வருவாரா வரமாட்டாரா என புரியாத நிலையில், உறுப்பு தானம் பெற ஓர் உயிரும், தானம் அளிக்க போராடிவரும் ஓர் உயிரும் காத்துக் கொண்டிருக்கின்றன.

12 மறுமொழிகள்:

')) said...

அடப்பாவமே

')) said...

அதற்காக தந்தை இளங்கோ செய்வது எப்படி நியாயம் ஆகும்? வழக்கு விசாரணையை வாபஸ் வாங்கினால்தான் கையெழுத்து போடுவேன் என மிரட்டுவது , ப்ளாக் மெயில் ஆகாதா?! அவர் மீது உண்மையிலேயே தவறு இல்லை எனில் இந்த வாபஸ் கோரிக்கையை அவர் வைத்திருக்க கூடாது.

')) said...

இது தினகரன் சேதி ;
-------------------
மூளை செயலிழந்த சிறுவனின் உடலை தானம் அளிப்பதில் சிக்கல்

பிரிந்து வாழும் தந்தையால் பிரச்னை

சேலம், டிச.26: சேலம் அருகே மூளை செயலிழந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் செய்வதறியாமல் சென்னையில் பரிதவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் கீதா. கணவர் இளங்கோவன். இருவரும் 8 ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் நாஞ்சில்வளவன்(8), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்தான். கடந்த 22ம் தேதி, சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவனது தாய்க்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்தது.
அவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் அடித்ததால்தான் தன் மகனுக்கு இந்த கதி ஏற்பட்டதாக கீதா, போலீசில் புகார் அளித்தார். பின்னர், சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தார்.
இதையடுத்து, சிறுவன் சேலத்திலிருந்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டான். Ôசிறுவனின் உறுப்புகளை தானம் அளிக்க தந்தை ஒப்புதல் இல்லையெனில், மீண்டும் சேலத்துக்கே கொண்டு செல்லுங்கள்’ என மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இதனால், அவனது தாய் மற்றும் உறவினர்கள் சென்னையில் பரிதவிக்கின்றனர்.
Ôதினகரன்Õ நிருபரிடம் கீதா கூறுகையில், ‘‘என் கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடுத்தேன். இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இந்நிலையில், நாஞ்சில்வளவனின் உடலை தானம் செய்ய கணவரிடம் ஒப்புதல் கேட்ட போது, வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்றும், சொத்தில் பங்கு கேட்கக் கூடாதென்றும் பல நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றும், அவர் சென்னைக்கு வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம்’’ என்றார்.
சென்னை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ வளர்மதி கூறுகையில், ‘‘நேரம் செல்லச், செல்ல நாஞ்சில்வளவனின் நாடித்துடிப்பு குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால், சிறுவன் இறக்கும் சூழ்நிலை ஏற்படும். சிறுவனின் தந்தையின் பிரச்னையால் உடல் உறுப்புகள் யாருக்கும் கிடைக்காமல் போய்விடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

')) said...

//வழக்கு விசாரணையை வாபஸ் வாங்கினால்தான் கையெழுத்து போடுவேன் என மிரட்டுவது , ப்ளாக் மெயில் ஆகாதா?! அவர் மீது உண்மையிலேயே தவறு இல்லை எனில் இந்த வாபஸ் கோரிக்கையை அவர் வைத்திருக்க கூடாது.
//

பிரியன் ஐயா,

உங்களுக்கு இந்த 498A வழக்குகள் எப்படி வேலை செய்கின்றன என்பது தெரியாது போலிருக்கிறது.

அந்தக் கணவன் படும் பட்டப் பற்றி அறியவேண்டுமானால் உங்கள்மீது ஒரு 498A கேசு பாய்ந்தால்தான் புரியும்.

இளங்கோவின் நிலைமை ஒரு desperate and helpless வகையைச் சார்ந்தது.

Anonymous said...

ஐயா ப்ரியன் அவர்களே,

கணவன் மனைவியிடையே இருக்கும் சொந்த குடும்பப் பிரச்சனைக்காக குழந்தை இறந்த செய்தியைக் கூட அதன் தந்தைக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்யும் தாய் என்று சொல்லிக் கொள்ளும் பேய்களும் இந்த நாட்டில் வாழ்கின்றன. விஷயம் தெரிந்து மயானத்தில் அஞ்சலி செலுத்த வந்த தந்தையை போலிஸை அழைத்துச் சென்று கைது செய்து பணத்திற்காக பேரம் பேசும் பேயுள்ளம் கொண்ட பிசாசுகளும் இந்த நாட்டில் வாழ்கின்றன.

')) said...

தலைப்பு தவறாக உள்ளதே.. !

நாஞ்சில் வளவன் ஏற்கனவே மூளை சாவு அடைந்துவிட்டான், அவன் உறுப்பு தானத்துக்கு மட்டுமே அவன் தந்தையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தான் செய்தியின் சாரம் உள்ளது... தலைப்பை படித்தால், தந்தை மீது வழக்கு வாபஸ் பெறப்பட்டு அவர் வந்து கையெழுத்திட்டால், வளவன் பிழைத்துவிடுவான் என்ற அர்த்தத்தில் உள்ளது..

//"நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது" என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், "மருத்துவமனை //

இந்த செய்தி எந்த பத்திரிக்கையில் வந்தது? ஒன்று அந்த குடும்பத்தின உண்ர்ச்சி மிகுதியில் சொல்லியிருக்க வேண்டும் , அல்லது இப்போதெல்லாம் நம் பத்திரிக்கைகள் செய்வது போல், அவர்களாகவே கேள்வி ஞானத்தில் சில வரிகளை எழுதியிருக்கவேண்டு.ம்..

எப்படியோ.. செய்தியின் சாராம்சமும், அந்த குறிப்பிட்ட வரியும் ஒத்து போகவில்லை

')) said...

ஐயா முத்து அவர்களே,

தினமலரில் வெளிவந்துள்ள செய்தியை இந்த சுட்டியில் காணுங்கள்:

http://tinyurl.com/8oap2r

அதில் கடைசிக்கு முதல் பாராவில் வந்துள்ள செய்தி இது:

//வரதட்சணை கொடுமை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இளங்கோவிற்கு இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோ இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாக தெரிகிறது. கீதாவும் இளங்கோவிற்கு தண்டனையை அதிகரிக்கக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்கினால் வந்து கையெழுத்திடுவதாக இளங்கோ கூறியுள்ளார். அதைக் கேட்ட கீதாவும், உறவினர்களும், "நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது' என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.//

அந்தப் பெண்குலத் திலகத்தின் கூற்றின் ஒரு பகுதியைத்தான் தலைப்பில் இட்டுள்ளேன்.

வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி, அன்பரே.

')) said...

498A என்னும் நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள புற்றுநோயைப் பற்றி பல நண்பர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை... இச்சட்டத்தை தவறாகப்பயன்படுத்தும் கயவர்கள் தீவிரவாதிகளை விட கொடியவர்கள்... மகன் உயிர்பிரிந்த நிலையில் உறுதியாய் இருக்கும் LEGAL TERRIESTக் வாழத்துக்கள் அவருடைய உள்ளம் (??) உறுதிக்கு

சுரண்டிப்பிழைக்கும் அரசியல்வாதிகளும் அதிகார துஷ்பிரயோம் செய்யும் லஞ்சப்பெருச்சாளிகள் ஒழிக்காத வரையில் இன்னும் சில ஆண்டுகளில் காசுக்காக மனிதனை மனிதன் அடித்து திங்கும் நிலமை நம் நாட்டில் ஏற்படும்,

Anonymous said...

since this guy has already been sentenced, he is probably a criminal. his negotiation in this situation is more horrible,

stupid post.
-aathirai

')) said...

since this guy has already been sentenced, he is probably a criminal.
=======================

It is yet to be decided by the appealette court.

If you are an informed person, you would know well about convictions and acquittals in Indian courts.

==================

stupid post.
-aathirai
===============

Aathirai,

You are probably a feminist. But definitely not pro-women, since the 498A law is affecting women and children predominantly.

God bless you!

Anonymous said...

Hi,

Any way the child is half dead.


//"நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது" என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், "மருத்துவமனை //

What is the value for the above statement. She wants to donate thats great. The father wants to bargain even now.so for sure the father is wrong.

')) said...

//She wants to donate thats great. The father wants to bargain even now.so for sure the father is wrong.//

You are approaching it in a myopic way.

Do not compartmentalize the issue. Do we know the father's point of view? What he has gone through? The real motives of the woman?

There may be more than meets the eye, and what gets reported.

Unfortunately the press have no time for the husband and father in all such cases. You get only the one-sided version.

May be thigs will change if the men and the parents of men open their eyes and understand the vested interests of faminists and their cohorts.