கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன் எரித்துக் கொலை - மனைவிக்கு ஆயுள் தணடனை

குடும்ப வன்முறைச் சட்டப்படி வன்முறை என்பது கணவனால் மட்டுமே செய்யப்படுவது. பாதிக்கப்பட்டவர் என்றால் மனைவிதான் என்று தீர்மானமாக அமைக்கப்பட்டுள்ளது.

கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டால்கூட அது மனரீதியான வன்முறையாகக் கருதப்படும். அதன்பேரில் மனைவி உடனே வழக்குத் தொடர்ந்து அந்தக் கணவனை அவனுக்குச் சொந்தமான தன் வீட்டிலிருந்தே வெளியேற்றலாம்! ஆமாம் ஐயா, இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. (திருமணம் இந்திய ஆண்களுக்கு ஒரு புதைமணலாக ஆகிவிட்டது!)

ஆனல் மனைவி எத்தகைய வன்முறையை செய்தாலும் - உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ - இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கணவனுக்கு எந்தவித பரிகாரமும் கிட்டாது. இது அநியாயமான சட்டமல்லவா?

பெண்கள் என்ன வன்முறையே செய்யாதா மெல்லியலாளர்களா?

இதோ இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

விழுப்புரம் : கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை எரித்து கொலை செய்த மனைவிக்கு, விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவரது மனைவி சுலோச்சனா(32), கூலி வேலை செய்கிறார்.

களமருதூர் சதாசிவம்(48) மேஸ்திரியாக உள்ளார். சதாசிவத்திடம் சுலோச்சனா வேலை செய்த போது, இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்ததால், கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ராஜேந்திரன் மீது சுலோச்சனா, சதாசிவம் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து சுலோச்சனா, சதாசிவத்தை கைது செய்து, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பா, குற்றம் சாட்டப்பட்ட சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

~ டிசம்பர் 06,2008 - தினமலர்