சென்னை: "இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக இந்தியாவில் கள்ளத் தொடர்புகளும், அதன் காரணமாக கொலைகளும் அரங்கேறி வருகின்றன.
இந்தச் சமூக அவலத்தில் தவறு செய்யும் கணவன்,மனைவி மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவர்களது குழந்தைகள் அனாதைகளாகி விடுகின்றனர். இது இந்திய கலாசாரத்திற்கு முற்றிலும் விரோதமானது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்தியத் தண்டனைச் சட்டம் 497ல் சில திருத்தம் கொண்டுவர முடிவு செய்து, மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளது.
இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 497ல், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். பெண்களுக்கு விதி விலக்களித்து, பாதிக்கப்பட்டவராக பாவித்து விடுவித்ததன் விளைவாக, இன்று இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. "சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்களை குறைக்க முடியும்' என்பதை கருத்தில் கொண்டும் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கவும், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண் - பெண் இருவரும் தண்டனைக்கு உட்பட்டவர்கள் தான் என்கிற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசும், மத்திய அரசும் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
3 மறுமொழிகள்:
//இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 497ல், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். பெண்களுக்கு விதி விலக்களித்து,...//
என்ன இது? கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும் அல்லது ஆண்களுக்கும் பெண்களுக்கும் விதி விலக்களிக்க வேண்டும் அது தானே நியாயம்.
// தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது//correct aana aaludhan :)
contact details of தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம். Plese mail be at rani_kala28@yahoo.com
உங்கள் கருத்தைத் தெரிவிக்க