ஒரு பொய் வழக்கின் பாதிப்பு

இபிகோ 498A பிரிவின்கீழ் போடப்படும் பொய் வழக்குகளில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாகச் சேர்த்துவிடலாம். கணவன், அவனுடைய வயதான பெற்றோர்கள், அவனுடைய உடன்பிறந்த பெண்கள், அவர்களுடைய 2, 3 வயதுக் குழந்தைகள், அண்டை வீட்டுக்காரர்கள், அவர்களுடைய நண்பர்கள், மேலும் (கற்பனையில் ஜோடிக்கப்பட்ட) வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய நிகழ்வின்போது, உடனிருந்து அதற்குத் துணை போனதாக தங்களுக்கு வேண்டாதவர்கள் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தச் சட்டத்திற்குத்தான் விசாரணையே கிடையாதே! புகார் கொடுத்தவுடனேயே, அந்தப் புகாரில் பட்டியலிடப்பட்ட அனைவரையும் - அது 85 வயது மூதாட்டியாக இருந்தாலும் சரி, 3 வயது குழந்தையாக இருந்தாலும் சரி - கைது செய்து லாக்கப்பில் போட்டு விடுவார்கள். அதுவும் வெள்ளியன்று இரவு. அவர்கள் திங்கட்கிழமை கோர்ட்டு திறந்த பிறகுதான் ஜாமீனுக்கு மனு கொடுக்கமுடியும். அங்கும் சென்று அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடுமையாக வாதிடுவார்கள்.

இந்த 498A வழக்குகளின் பரிமாணத்தை ஒரு கற்பனை உதாரணத்தின் மூலம் விளக்க முற்படுகிறேன்.

இதுபோல் 498A வழக்குப் போடும் ஒரு மனைவி எல்லா தமிழ் வலைப் பதிவுகளையும் விடாமல் படிப்பவர். “கோண்டு மாமா” என்னும் வலைப்பதிவர் ’தன் “கார்”தான் ஒசத்திக் கார்’ என்று கூவிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர்மேல் மிகுந்த கோபம். அவர்மேல் பழி வாங்க இதுதான் தக்க தருணம் என்று முடிவு செய்து அந்தப் பெண்குலத் திலகம், தன் புகாரில் ’பலான “கோண்டு” என்பவர் தன் கணவனின் நண்பர். அவரும் சேர்ந்துதான் என்னைக் கொடுமைப் படுத்தினார்’ என்று சேர்த்து விட்டார்.

அவ்வளவுதான். அவரும் கைது செய்யப்பட்டார். பாவம், அப்போதுதான் அவர் ஒரு வலைப்பதிவர் சந்திப்பில், மைசூர் போண்டாவைப் பிய்த்து சாம்பாரில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டு, போண்டாவுக்கு ஸ்காண்டினேவியா மொழியில் என்ன பெயர் என்று விளக்கிக் கொண்டிருந்தார்!

அவரைக் கைது செய்யப் போவதாகக் கூறியவுடன் பாவம் கோண்டு மாமா திகைத்துப் போய்விட்டார். ஆனாலும் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, “கைது செய்வதுதான் செய்கிறீர்கள். எப்படியும் நான் சீக்கிறமே ஜாமீன் வாங்கிவிடுவேன். ஆனால் என் வலைப்பதிவுக்குச் சென்று இரண்டு பின்னூட்டம் போட்டு விட்டுச் செல்லுங்கள்” என்று அந்த காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டதாக ஒரு செய்திச் சிதறல்!

(மேலே குறிப்பிடப்பட்ட கதை முழுதும் கற்பனையே)

3 மறுமொழிகள்:

Anonymous said...

நல்ல கற்பனை அல்ல! அத்தனையும் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அப்பட்டமான அராஜகம்.

')) said...

என்னுடைய 498A வழக்கில் என்னுடைய திருமணத்திற்ககு வந்த பாவத்திற்காக எனது தம்பியுடைய நண்பருடைய அம்மா கைதிசெய்யப்பட்டு 5ந்து நாள் புழல் சிறையில் அடைக்கப்பட்டடார். இதில் கொடுமை என்னவேன்றால் அவருடைய பெயரை நான் FIRயை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்...

வாழ்க 498A வளர்க இந்தியா...

இன்னும் சில ஆண்டுகளில் திருமணமே செய்யாத இளைஞர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா அறிவிக்கப்படும், எல்லப்புகழும் 498Aவிற்க்கே

Anonymous said...

”கோண்டு மாமா“ = “டோண்டு மாமா”

அவருதான் பின்னூட்டம் பின்னாடி அலையுவாரு!