கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவரை குத்திக்கொன்ற மனைவி

கொலையும் செய்வாள் பத்தினி!

சென்னை, டிச.19-2008: செய்தி: தினத்தந்தி

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு இளம்பெண் தப்பியோடிவிட்டார்.

சென்னை லாட்ஜில் நடந்த பரபரப்பான இந்த படுகொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 156-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும் பெரம்பூரை சேர்ந்த நிக்கோலஸ் (வயது 27) என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கோலஸ் ஆங்கிலோ-இந்திய பெண் ஆவார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆனது முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நிக்கோலசுக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பிரவீன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவீனை விட்டு நிக்கோலஸ் பிரிந்து சென்றுவிட்டார். மனைவியை சேர்த்து வைக்கும்படி பிரவீன், போலீஸ் கமிஷனிரிடம் மனு கொடுத்தார். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர்.

கடந்த 10 நாட்களாக பிரவீனும், நிக்கோலசும் வீட்டிற்குச் செல்லாமல் குழந்தைகளுடன் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தனர்.

ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கு இடையே இனிமையான வாழ்க்கை நடக்கவில்லை. தொடர்ந்து சண்டை போட்டபடியே இருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை நிக்கோலஸ் லாட்ஜ் அறையில் இருந்து பதறியபடி வெளியே கைகளில் ரத்தக்கறையோடு ஓடிவந்தார்.

இந்த காட்சியைப் பார்த்ததும் லாட்ஜ் மானேஜர் என்னவோ ஏதோ என்று பதறியபடி அறைக்கு ஓடினார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. பிரவீன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு படுக்கையில் பிணமாக கிடந்தார்.

அவரது நெஞ்சு கத்தியால் குத்தி பிளக்கப்பட்டிருந்தது. மூன்று குழந்தைகளும் அவரைச்சுற்றி அழுதபடி நின்றனர்.

தப்பியோட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பிரவீனின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கணவரை கொலை செய்துவிட்டு நிக்கோலஸ் தப்பியோடியது தெரிய வந்தது. அவரை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

தந்தையை இழந்து, தாயையும் கொலைகாரியாக பறிகொடுத்துவிட்டு மூன்று குழந்தைகளும் கதறி அழுதபடி இருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

------------

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ள இதுபற்றிய துண்டுச் செய்தி: “எங்கள் தாய்தான் எங்கள் அப்பாவைக் குத்திக் கொன்றுவிட்டாள்” என்று அந்தக் குழந்தைகள் கதறியவண்ணம் இருந்தன என்பதுதான்.

அதனால்தான் சொல்கிறேன், வேண்டாம் இந்தத் திருமணம் என்னும் பாம்புப் புற்று என்று!

1 மறுமொழி:

')) said...

இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள மெலதிகச் செய்தி:

சென்னை லாட்ஜில்
கணவரை குத்திக் கொன்ற ஆங்கிலோ இந்திய பெண்ணின் காதல் லீலைகள்
கள்ளக்காதலனுடன் தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு


சென்னை, டிச.20-

சென்னை லாட்ஜில் கணவரை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய ஆங்கிலோ இந்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆங்கிலோ-இந்திய பெண்

சென்னை டி.பி.சத்திரம் மெயின்ரோடு 756 பிளாக்கை சேர்ந்தவர் தணிக்கைராஜ் பிரவீன் (வயது 30). இவர் வாடகை கார் டிரைவராக இருந்ததுடன், எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் பணியாற்றினார்.

பிரவீனுக்கும் பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண்ணான நிக்கோலா (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. நிக்கோலா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.

விதி விளையாடியது

5 வருடங்களுக்கு முன்பு பெற்றோரிடம் சொல்லாமல் ரகசியமாக நிக்கோலாவும், பிரவீனும் திருமணம் செய்து கொண்டனர். கொடுங்கைனிர் கட்டபொம்மன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு அடுத்தடுத்த வருடங்களிலேயே பிரிட்னி, நிக்வின், ஆன்ரியா என்ற 3 குழந்தைகள் பிறந்தன.

ஆங்கிலோ இந்திய பெண்ணான நிக்கோலா ஆங்கிலேய கலாசாரத்திலேயே வாழ்ந்தார். தினமும் மது, சிகரெட் என்று உல்லாசத்தில் திளைத்தார்.

கள்ளக் காதலன்

நிக்கோலா நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவார். இதனால் அவருக்கு சைதாப்பேட்டையில் உள்ள கால் சென்டரில் வேலை கிடைத்தது. மனைவி சைதாப்பேட்டைக்கு சென்று வருவதற்காக ஆட்டோ ஒன்றை மாதாந்திர வாடகைக்கு அமர்த்தினார். அமைதியாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் ஆட்டோ டிரைவர் மணிமாறன் (22) வடிவில் புயல் வீசத் தொடங்கியது.

மெல்ல மெல்ல நிக்கோலாவுக்கும், ஆட்டோ டிரைவர் மணிமாறனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்களின் கள்ளக்காதல் பிரவீனுக்கு தெரியவந்தது. நிக்கோலாவை அவர் கண்டித்தார்.

போலீசில் புகார்

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நிக்கோலா கோபித்துக்கொண்டு, குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு ஆட்டோ டிரைவர் மணிமாறனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து பிரவீன் தனது மனைவியை மீட்டுத்தரும்படி போலீசில் புகார் செய்தார். போலீசாரும் நிக்கோலாவை மீட்டு பிரவீனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பிரவீன், மனைவி குழந்தைகளுடன் டி.பி. சத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் குடியேறினார்.

கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிக்கோலா கள்ளக்காதலன் மணிமாறனுடன் மாதவரத்தில் குடும்பம் நடத்த தொடங்கினார்.

மீண்டும் சேர்ந்தார்

இதையடுத்து மனைவியை மீட்டுத் தரக்கோரி மீண்டும் டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பிரவீன் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு, நிக்கோலாவை அழைத்து பேசினர். இதில் சமாதானம் அடைந்த நிக்கோலா கணவர் பிரவீனுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நிக்கோலா, மீண்டும் பிரவீனுடன் சேர்ந்தார். டி.பி.சத்திரத்தில் உள்ள வீடு, வசதி குறைவாக இருந்ததால், வேறு வீடு கிடைக்கும் வரை லாட்ஜில் தங்கலாம் என்று நிக்கோலா, பிரவீனுக்கு யோசனை தெரிவித்தார். மனைவி சொல்லையே மந்திரமாக நினைத்த பிரவீனும் அதற்கு உடன்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரவீன், பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எண் 205-ல் தங்கினார்.

கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நிக்கோலா, லாட்ஜ் அறையில் இருந்து பதறியபடி வெளியே ஓடிவந்தார். அவரது கையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இந்த காட்சியைப் பார்த்ததும் லாட்ஜ் மானேஜர் என்னவோ ஏதோ என்று பதறியபடி அறைக்கு ஓடினார். அங்கு பிரவீன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு படுக்கையில் பிணமாக கிடந்தார். அவரது நெஞ்சில் உடைந்த கண்ணாடியால் குத்தப்பட்டிருந்தது.

மூன்று குழந்தைகளும் அவரைச்சுற்றி அழுதபடி நின்றனர். பெற்றோர், நண்பர்களின் பேச்சைக் கேட்காமல், எந்த மனைவி தன்னுடன் வாழ வேண்டும் என்று பிரவீன் ஆசைப்பட்டாரோ, அவரே நெஞ்சில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் சந்தேகம்

இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிரவீன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நிக்கோலா கையில் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில், நிக்கோலாவின் கள்ளக்காதலன் மணிமாறனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

2 தனிப்படை போலீஸ்

பிரவீனை கொலை செய்தபோது, அதை நேரில் பார்த்த அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஆட்டோ டிரைவர் மணிமாறன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு மணிமாறன் இல்லை. தலைமறைவாகிவிட்டார். அதைத் தொடர்ந்து மணிமாறனின் தாயார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிக்கோலாவின் தந்தை பிளாடியிடமும் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள நிக்கோலாவையும், மணிமாறனையும் பிடிக்க 2 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் நிக்கோலாவும், கள்ளக்காதலன் மணிமாறனும் பிடிபடுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் கைதாகும்பட்சத்தில் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்துடன் செய்தி:

http://www.dailythanthi.com/article.asp?NewsID=457571&disdate=12/20/2008