500 தாத்தா, பாட்டிகள் வழக்கு


புதுடெல்லி, டிச.14: விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் சிக்கித் தவிக்கும் தங்களுடைய பேரக் குழந்தைகளை பார்க்கவும், கொஞ்சவும் உரிமை கோரி 500க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


வெளிநாட்டு கலாசாரமாக இருந்த விவாகரத்து, இப்போது இந்தியாவிலும் அதிகளவில் சாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் 40 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக சமீபத்தில் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் பிரிந்து வாழும் கணவன், மனைவிக்கு இடையே அவர்களின் குழந்தைககள் சிக்கித் தவிக்கின்றனர். 99 சதவீத விவாகரத்து வழக்குகளில் பிள்ளைகள் தாயிடமே ஒப்படைக்கப் படுகின்றனர். பிள்ளைகளை பார்க்க தந்தைக்கு ஒரு வாரம் முறையோ அல்லது மாதம் ஒரு முறைதான் அனுமதி அளிக்கப்படுகிறது.


இது ஒருபுறம் இருக்க, "கணவன் - மனைவி இடையே ஏற்படும் சண்டையால் பேரக் குழந்தைகளை பார்க்கவும், பேசவும் முடியாமல் எங்களின் உரிமை பறிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?" என்று டெல்லியில் 500க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனவே, விவாகரத்து செய்யும் பெற்றோரால் பாதிக்கப்படும் பிள்ளைகள், தாத்தா, பாட்டிகளுக்காக தனி வழிமுறை வகுக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். வயதான காலத்தில் எங்களுக்கு பேரக் குழந்தைகளிடம் பேசுவதும், கொஞ்சுவதையும் விட என்ன சுகம் இருக்கப் போகிறது. எனவே, விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் யாரிடம் பேரக்குழந்தைகள் இருந்தாலும் அவர்களை எந்த நேரத்திலும் சென்று பார்க்கவும், பேசி கொஞ்சவும் எங்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளின் உரிமை

"பிரிந்த பெற்றோரின் பிள்ளைகளின் உரிமை அமைப்பு" (Children's Right Initiative for Shared Parenting - CRISP) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமே, பாதிக்கப்பட்ட தாத்தா&பாட்டிகள் சார்பாக குரல் கொடுக்கிறது. இதன் தலைவர் குமார் ஜாகிர்தர் (இவர் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயின் மனைவியின் முந்தைய கணவர்) கூறுகையில், "விவாகரத்து பெறும் கணவனும் மனைவியும், தங்கள் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்பது பற்றி பல ஆண்டுகள் வழக்கு நடத்துகின்றனர். ஆனால், குழந்தைகளின் உரிமையைப் பற்றி யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. கணவன் & மனைவி இடையே ஏற்படும் சண்டையால் குழந்தைகளும், அவர்களின் தாத்தா&பாட்டிகளும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?" என்று கொதிக்கிறார்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

ஆண்கள் நல அமைச்சகம்: கணவன்கள் போர்க்கொடி
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=7033&cls=row3&ncat=IN
Dinamalar News

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு, அப்பாவி கணவன்கள் தண்டிக்கப்படுகின்றனர்; மனைவிகளிடம் சித்திரவதை படுகின்றனர். அவர்களின் நலனுக் காக, மத்தியில், பெண்கள் நல அமைச்சகம் போல, ஆண்களுக்கும் தனி அமைச்சகம் தேவை!'-டில்லியில் உள்ள "குடும்பத்தைக் காப்போம்' பவுண்டேஷன் அமைப்பு, இந்த வித்தியாசமான கோரிக்கையை வைத்துள்ளது.

இதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்வரூப் சர்க்கார் கூறியதாவது:வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் அம்சங்களைப் பயன்படுத்தி, கணவர்கள் பலரும் தவறே செய்யாமல் சிக்க வைக்கப்படுகின்றனர்; தண்டனையை அனுபவிக்கவும் நேரிடுகிறது. மனைவியர் சிலர், திட்டமிட்டு கணவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் புகார் செய்து, தண்டனை வாங்கித் தருகின்றனர். இது போல, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் பெண்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சில வீடுகளில் மனைவியர் திட்டமிட்டு, இந்த சட்டத்தைக் காட்டிக் காட்டியே கணவர்களை துன்புறுத்துகின்றனர். இது தொடர்பாக எங்களுக்கு பல புகார்கள் வந்துள்ளன.மனைவிகளின் சித்திரவதை தாங்காமல் பல ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர். இவற்றை எல்லாம் பரிசீலித்து, ஆண்களுக்கு தனி நல அமைச்சகம் அமைக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு சர்க்கார் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில், தற்கொலை செய்த திருமணமான ஆண்கள் எண்ணிக்கை 58 ஆயிரம்; பெண்கள் எண்ணிக்கை 30 ஆயிரம். திருமணமான பெண்களை விட, திருமணமான ஆண்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர். பாலின மனித உரிமை கமிட்டி தலைவர் சந்தீப் பார்ட்டியா, இன்னொரு கோரிக்கையை எழுப்பியுள்ளார். "பெண்களுக்கு தேசிய பெண்கள் நல கமிஷன் இருப்பது போல, தேசிய ஆண்கள் நல கமிஷன் அமைக்க வேண்டும். அப்போது தான், பெண்களின் மீதான புகார்களை சட்டப்படி நியாயமாக விசாரிக்க முடியும்' என்று கூறியுள்ளார். "பெண்கள் எல்லாம் இப்போது சிறிது துன்புறுத்தலுக்கு ஆளானாலும், சகிக்காமல் உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி விடுகின்றனர். ஆனால், ஆண்களோ, அமைதியாக சித்திரவதையை பொறுத்துக் கொள்கின்றனர். அவர்கள் நிலையைக் கருதி, அரசு கண்டிப்பாக தனி அமைப்பை நிறுவ வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

')) said...

வரவேற்க தக்க சட்டம் விரைவில் வர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.

')) said...

வரவேற்க தக்க சட்டம் விரைவில் வர வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.