நூதன வாடகைத்தாய் கலாசாரம்

சென்னையில் பரவும் நூதன வாடகைத்தாய் கலாசாரம் - ரூ.5 லட்சம் கொடுத்தால், சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் - செல்போனில் பேசி அழைக்கிறார்கள்

சென்னை, டிச.8- செய்தி: தினமலர்

சென்னையில் பணம் வாங்கிக்கொண்டு, சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்று கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பணம் வாங்கிக் கொண்டு குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்த கலாசாரம் இந்தியாவிலும் வட மாநிலங்களிலும் உள்ளது. தற்போது சென்னை நகரிலும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது செல்போனில் மர்ம பெண் ஒருவர் பேசி `வாடகைத்தாய் வேண்டுமா? அழகான பெண்கள் 5 பேர் உள்ளனர். ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒரு வருடம் உங்களுடன் தங்கி இருப்பார்கள். உங்கள் உயிர் அணுவையும், உங்கள் மனைவியின் கரு முட்டையையும் செயற்கை முறையில் சேர்த்து கரு உண்டாக்கி அந்த கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்று கொடுக்கவும் தயார். அல்லது நீங்கள் குழந்தை பெற தகுதி உடையவராக இருந்தால், உங்கள் மனைவி சம்மதத்தோடு உங்களோடு உல்லாசமாக இருந்து, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்' என்று சொல்கிறார்.

சென்னை கே.கே.நகரில் வாடகைத்தாய் சங்கம் வைத்துள்ளதாகவும், அந்த பெண்மணி சொல்கிறார். இந்த தகவல் சென்னை போலீசாருக்கும் தெரிய வந்துள்ளது.

உடல் உறவு மூலம் குழந்தை பெற்று கொடுப்பது சட்டப்படி தவறானது என்றும், அது வாடகைத்தாய் முறையில் வராது என்றும், அது நூதனமான விபசாரம் என்றும், போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது பற்றி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---------------

ஆனால் நம்நாட்டு சட்டங்கள், நீதிபதிகள், ஊடகங்கள், சமுதாயத்திலுள்ள பெரிய மனிதர்கள் ஆகியோர் ஆண்கள்தான் கெட்டு அலைகிறார்கள் என்று ஓலமிடுகின்றனர்!