சென்னை, டிச.13-2008 : செய்தி - தினத்தந்தி
பட்டதாரி மனைவி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டை, சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் மெக்கானிக் வேலை பார்க்கிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் கல்பனா (25).
திருமணத்திற்கு பிறகு கல்பனா கணவரின் வீட்டில் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். மாமியார் திலகம், மைத்துனர் மகாலிங்கம், மைத்துனிகள் மீனாட்சி, மகாலட்சுமி ஆகியோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
3 மாதங்கள் இனிதாக கழிந்த இல்லற வாழ்க்கையில் புயல் வீசி முருகன்-கல்பனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். கல்பனா, கணவர் முருகனை விட்டு பிரிந்து பெருங்களத்தூரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டார்.
இந்த நிலையில், கல்பனா ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
"நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். திருமணத்தின்போது எனக்கு 25 சவரன் நகைகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் என் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். மேலும் 15 சவரன் நகைகள் வரதட்சணையாக வேண்டுமென்று எனது கணவர் வீட்டில் வற்புறுத்தி வந்தனர். நாங்கள் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்ததால் எனது கணவரோடு நான் சந்தோஷமாக வாழ முடியவில்லை. தனிகுடித்தனம் செல்வதற்கு என் கணவரும் விரும்பவில்லை.
"செக்ஸ்' குறும்பு"
எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், என் கொழுந்தன் மகாலிங்கம் `செக்ஸ்' சேட்டைகள் செய்வார். இடுப்பை பிடித்து கிள்ளுவார். நான் குளித்துவிட்டு ஆடை அணிவதை ரகசியமாக பார்த்து ரசிப்பார்.
இதுபற்றியெல்லாம் என் கணவரிடம் கூறியபோதும், அவர் கண்டுகொள்வதில்லை. எனது மாமியாரும், மைத்துனிகளும் எனக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தனர்.
இதனால் எனது கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். என் கணவரை மீண்டும் என்னோடு சேர்த்து வைத்து, தனி குடித்தனம் செல்லவும் உரிய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு கல்பனா புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டார்.
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார். முருகனையும், கல்பனாவையும் அழைத்து வந்து கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முருகன் தனி குடித்தனம் செல்ல விரும்பவில்லை என்றும், இதனால் கல்பனாவோடு சேர்ந்து வாழ முடியாது என்றும், ஜெயிலுக்கு போகவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
போலீசாரின் சமாதான முயற்சி பலிக்கவில்லை. இதனால் முருகன், அவரது தாயார், தம்பி மற்றும் தங்கைகள் இருவர் மீதும் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முருகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது
-------------
இவள் தன் மச்சினன் செக்ஸ் குறும்பு செய்தான் என்றாள். இன்னும் சில பெண்குல சிகரங்கள் 80 வயது மாமனாரும், 3 வயது குழந்தையும் செக்ஸ் தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் கொடுப்பார்கள். இன்னும் சில புதுமைப் பெண்கள், "கணவனும் அவனுடைய தாயாரும் செக்ஸ் விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். தட்டிக் கெட்ட என்னை அடித்தர்கள்" என்று புகார் கொடுத்த கேசுகள் உண்டு. இதுபோல் பல "டெம்பிளேட்டுக்களை" வக்கீல்கள் கைவசம் வைத்திருப்பார்கள். கணவன்மேல் பொய்க் கேசு போடச் செல்லும் பத்தினிப் பெண்கள் தங்களுக்குத் தேவையான பொய்க் குவியல்களைப் பொறுக்கிக் கொள்வார்கள்!
ஆண்களே, இந்தக் கொடுமை உங்களுக்கு நிகழ வேண்டுமா? உங்களைப் பெற்ற பாவத்திற்காக உங்கள் பெற்றோர்களும் உடன் பிறப்புக்களும் இத்துணை கொடுமைகளையும் சிறுமைகளையும் அனுபவிக்கவேண்டுமா?
சிந்தியுங்கள்!
தனிக்குடுத்தனம் வைக்கவில்லையா, போடு வரதட்சணை வழக்கு!
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, lust, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை, வெறி
Subscribe to:
Post Comments (Atom)
7 மறுமொழிகள்:
ennaththa solla? =(
நம்நாட்டில் மட்டும்தான் சட்டங்களை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.. இதனால் உண்மை குற்றவாளிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்... போடா சட்டதையே சுய நலத்திற்காகவும் பழிவாங்கவும் பயன்படுத்தியவர்கள்தானே.... பொறுப்பின்மையும், முறைகேடும் உள்ளவரை எதுவும் சொல்வதற்கில்லை
//பொறுப்பின்மையும், முறைகேடும் உள்ளவரை எதுவும் சொல்வதற்கில்லை//
This Kumuran will come out of Jail as a criminal. He will never get Justice. The advocates will exploit him.
We have an insesnsitive corrupt and unaccountable Judiciary. Common people are of the view that Judiciary is their last hope. But Judiciary is the breeding and training ground for the worst kind criminals. Common man does'nt approch Courts for relief as it is the Wrong Doers who gets the benifit from courts (by Sheer long Delay) Justice delayed is Injustice done.
படிக்கவே கூசுகிறது. இந்தியன் என்று சொல்ல அதை விட .......
மனித உறவுகளை கொச்சைப்படுத்தும் விதமாக திரு.சவுந்தர்ராஜன், 8வது வார்டு உறுப்பினர் பெருங்களத்தூர், அவர்களுடைய தவப்புதல்வி சுபஸ்ரீ அவர்கள் என்(ங்கள்) மீது போட்ட வரதட்சணை வழக்கு. சட்டங்களும் திட்டங்களும் சாதகமாக இருக்கலாம் இந்த வண்முறை கூட்டத்திற்க்கு ஆனால் காலசக்கரம் கதறவிடும் இந்த கூட்டத்தை...!!
18வயதுக்கு மேற்பட்டோர் இந்த முதல் தகவல் அறிக்கையை படித்துப்பார்க்கவும்!!
நான் இந்த கூட்டத்திலிருந்து தப்பித்துவிட்டேன் ஆனால் எனது குழந்தை எப்பொழுது????
மனித உறவுகளை கொச்சைப்படுத்தும் விதமாக திரு.சவுந்தர்ராஜன், 8வது வார்டு உறுப்பினர் பெருங்களத்தூர், அவர்களுடைய தவப்புதல்வி சுபஸ்ரீ அவர்கள் என்(ங்கள்) மீது போட்ட வரதட்சணை வழக்கு. சட்டங்களும் திட்டங்களும் சாதகமாக இருக்கலாம் இந்த வண்முறை கூட்டத்திற்க்கு ஆனால் காலசக்கரம் கதறவிடும் இந்த கூட்டத்தை...!!
18வயதுக்கு மேற்பட்டோர் இந்த முதல் தகவல் அறிக்கையை படித்துப்பார்க்கவும்!!
நான் இந்த கூட்டத்திலிருந்து தப்பித்துவிட்டேன் ஆனால் எனது குழந்தை எப்பொழுது????
இதில் கொடுமை என்னவென்றால் இத்தனை கொடுமைகளுக்கு பிறகும் இதுபோல் பெண்ணினத்திற்கே கேவலமான பெண்ணுடன் நான் சேர்ந்து வாழ வேண்டுமாம்...
வாய்மையே வெல்லும்...
தமிழ். சரவணன்
உங்கள் கருத்தைத் தெரிவிக்க