கணவன்-மனைவி பிரச்னை - லஞ்ச பெண் எஸ்.ஐ. கைது

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் “கட்டப் பஞ்சாயத்து” நிலையங்களாக மாறிவருகின்றன. இதற்கு முன்பே ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்ச ஊழலில் கைதானார்.

முழுதும் தவறான பயன்படுத்தலுக்காகவே ஒரு சட்டத்தை (Sec 498A of IPC) இயற்றிவிட்டு, அதை அமுல்படுத்தும் துறையினர் யோக்கியர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலுமா?

மிரட்டி காசு பிடுங்கும் கூட்டுக் களவாணித்தனத்திற்காகவே இந்தச் சட்டம் பயன்படுகிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

டிசம்பர் 24,2008 - தினமலர்

சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
----------

தொடர்பான பதிவுகள்:-

1. கட்டப்பஞ்சாயத்து போலீஸ்
2. பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!
3. வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

2 மறுமொழிகள்:

Anonymous said...

500 ருபாய்க்காக அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்கும் பாதகர்கள் போலீசும், வழக்கறிஞரும் மட்டுமே. அதுவும் இந்தியாவில் மட்டும் தான்.இதென்ன மானங்கெட்ட பிழைப்பு? இதற்கு பதிலாக "அந்த தொழில்" செய்து காசு சம்பாதிக்க வேண்டியது தானே.

')) said...

இதுபோல் லஞ்சப்பெருச்சாளிகளை ஒழிக்காமல் விட்டால் இன்னும் சில காலங்களல்

மகளிர் காவல்நிலையத்தில வெளியில் தொங்கவிடப்பட்டிருக்கும் விளம்பரப்பலகை இதுபோல் இருக்கும்

1. xxx/= ரூாய்க்கு 498A பொய்வழக்கு போடப்படும் அனைவரையும் கைது செய்து புழல் சிறையை சுற்றகாட்டப்படும்
2. xxx/= ரூபாய்க்கு கணவனை கூப்பிட்டு மிரட்டிவிடப்படும்
3. xxx/= ரூபாய்க்கு மாமியார் மாமனாரை மற்றும் நாத்தனர்களை மிரட்டிவிடப்படும்
4. xxx/= ரூபாயக்கு கணவனின் நண்பர்களை அடித்து மிரட்டிவிடப்படும்


இதில் ஆடித்தள்ளுபடி 20% உண்டு மற்றும் முன்பணம் கட்டினால் சிறப்பு சலுகையாக வீட்டினில் முன் வந்து கணவன் குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி நாரடிப்போம் (stock உள்ள வரை மட்டுமே)

வாழ்க ஜனநாயம்!! வாழ்க மனிதநேயம்