வரதட்சணை கொடுத்த மணப்பெண் மீது வழக்கு


புதுடில்லி: மணக்கப்போகும் மணமகனுக்கு வரதட்சணை தந்ததாக மணப்பெண், அவரின் தாய், சகோதரர் மீது டில்லி பெருநகர கோர்ட்டில் போலீஸ் வழக்கு போட்டுள்ளது.


வரதட்சணை வாங்கியதாகத்தான், இதுவரை குற்றம்சாட்டி, போலீஸ் வழக்கு போட்டுள்ளது; தண்டனையும் வாங்கித் தந்துள்ளது; ஆனால், வரதட்சணை கொடுத்ததாக வழக்கு போட்டுள்ளது இதுவே முதன் முறை.


டில்லி நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹரி; இவர் மனைவி சரிதா திடீரென தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். "என்னை இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார் கணவர். அவருக்கு நாங்கள் கொடுத்த வரதட்சணை பணம் 12 லட்சம், காரை பறித்து எனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்" என்று போலீசில் புகார் செய்தார் சரிதா.


இதையடுத்து, ஹரியை அழைத்து சிறையில் அடைத்த போலீசார், அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு (IPC Sec 498A) பதிவு செய்தனர்.


"மிக அதிகமாக வரதட்சணை தந்ததாக கூறும் அவர்கள் பொருளாதார நிலையை போலீசார் ஆராய்ந்து, அதன்பின், என் மீது வழக்கு போட வேண்டும். நான் நிரபராதி' என்று கூறிய ஹரி, மனைவி சரிதா மீது பதிலுக்கு புகார் தந்தார்.ஆனால், போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் படி மனு செய்த அவருக்கு சாதகமான பதில் தகவல் கமிஷனரிடம் இருந்து வந்தது."என் மீது என் மனைவி கொடுத்த புகாரில் ஆதாரம் இல்லை; போலீசார் எந்த வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்று தெரிய வேண்டும் என்று மனுவில் கேட்டிருந்தார் ஹரி."மனைவியின் வாய்வழி வாக்குமூலத்தின் ஆதராத்தின் பேரில்தான் ஹரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது" என்று தகவல் உரிமை சட்டப்படி, அவருக்கு பதில் வந்தது.


இதையடுத்து, கோர்ட் டில் பதில் மனு தாக்கல் செய்தார் ஹரி. "என் மீது திட்டமிட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், வரதட்சணை தடை சட்டத்தின் கீழ், என் மனைவி மீது நான் கொடுத்த புகாரை நிராகரித்து விட்டனர்" என்று மனுவில் கூறியிருந்தார்.அவர் கோரிக்கையை ஏற்ற பெருநகர கோர்ட் மாஜிஸ்திரேட், "வரதட்சணை கொடுத்தாலும் சட்டப்படி குற்றம். இந்த வகையில் மோசடி செய்த குற்றத்துடன், இந்த வழக்கையும், சரிதா, அவர் தாய், சகோதரர் மீது போலீஸ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

(செய்தி: தினமலர்)

=================


இந்த நேர்மையற்ற சமூகத்தில் ஒரு ஆண்மகன் தன் உரிமையை நிலைநாட்ட, தனக்கு நேரும் அநியாயத்தை எதிர்த்து எப்படிப் போராடவேண்டியுள்ளது பார்த்தீர்களா?


ஆனால் திருமணம் என்ற புதைகுழியைத் தவிர்த்தால் ஆண்கள் நிம்மதியாக வாழலாம்.

1 மறுமொழி:

Anonymous said...

பிரச்சினைகளுக்குக் காரணம் திருமணங்கள் அல்ல.
இவை தான் குற்றங்கள்:
1. இந்தியனாக இருப்பது
2. தவறhன சட்டங்களுள்ள நாட்டில் வாழ்வது
3. சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நேர்மையாக வாழ்வது
4. தவறhன ஆட்சியாளர்களின் காலத்தில் இந்தியாவில் வாழ்வது

சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் நேர்மையான சராசரி இந்தியனுக்கு இந்தியா ஒரு சொர்க்க பூமி - நடுநிலையற்ற சட்டங்கள் எனும் சாக்கடை தீண்டாதவரை, காவல் நிலையம், நீதி மன்றம் என்னும் பாழ் கிணற்றுக்குள் தள்ளப்படாதவரை, பணத்திற்காக நீதியை விற்கும் சில கயவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகாதவரை. இவையணைத்தும் ஒரு முறை நம்மை தீண்டிவிட்டால் போதும் நரகத்தை விட கொடிய அனுபவங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்,........

வெளியிலிருந்து பார்ப்பவருக்கு அதன் வலி தெரியாது. பொய்யான 498A, DP,DV யில் சிக்கியவரின் நிலை ஒரு செய்தித்தாளில் படிக்கும் கதை போலத் தான் இருக்கும்.

உதாரணத்திற்கு கற்றது தமிழ் எம்,ஏ, என்ற திரைப்படத்தைப் பாருங்கள்.......ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கை சில கயவர்களின் சதியால் சட்டம் எனும் சகதியில் சிக்கிய கதை.