கணவனைத் தற்கொலைக்குத் தள்ளிய காரிகை

”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு
முயன்றான் ஒரு அப்பாவிக் கணவன்.

இது 2008 டிசம்பர் 24-ம் நாள் சென்னை நீலாங்கரை காவல்நிலையம் முன்பு நிகழ்ந்தது. அந்த கணவனின் பெயர் மோஹன். வயது 38. வெட்டுவான்கனியைச் சேர்ந்தவர்.

ஆனால் அவr தன்மேல் தீயைப் பற்Raவைத்துக்கொள்ளுமுன் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்பட்டார். அதன்பின் அந்தக் கணவன் தற்கொலைக்கு முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டான்.

அவன் ஏன் தற்கொலைக்குத் துணிந்தான்?

அவனுடைய மனைவி, கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அவன்மேல் ஒரு பொய்ப் புகார் அளித்துள்ளாள். அந்தப் புகார் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமல் போலீசார் இந்தக் கணவனை கைது செய்ய அவனுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

”நான் தினக்கூலிக்காரன். என் சொல்ப ஊதியத்தில்தான் என் குடும்பம் நடக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்கே என் ஊதியம் போதாமல் கஷ்டப்படும் நிலை. ஆனால் திடீரென்று என் மனைவி ரூ.5000 கொடுத்து ஒரு செல்ஃபோன் வாங்கியிருக்கிறாள். அந்தப் பணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்டதற்காக நான் அவளைக் கொடுமை
செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள். இந்த நாட்டில் ஒரு பெண் என்ன சொல்கிற்றாளோ, அதுதான் உண்மையாக ஏற்கப்படுகிறது. ஆண்கள் என்றாலே அவர்கள் எல்லோரும் கயவர்கள், கிரிமினல்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த நிலையைக் கண்டு வெறுத்துப் போய்த்தான் நான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்” என்கிறார் அந்த மோகன்.

அது சரி, ஒரு மனைவி தற்கொலைக்கு முயற்சித்தால் என்றால்உடனே அவளுடைய கணவனை வளுடைய தற்கொலைக்குத் தூண்டினான் என்று கூறி கைத்து செய்துவிடுகிறார்களே. ஏன் அந்த மனைவியை இந்தக் கேசில் கைது செய்யவில்லை?

நல்ல மனம் படைத்த நண்பர்களே, நீங்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷன்ருக்கு, போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ, உடனே அந்தப் பெண்ணை கைது செய்யும்படி கோருங்கள்!

சென்னை போலீஸ் கமிஷனர் ஃபோன் நம்பர்: 044-044 - 28511003
ஈமெயில் : cop(@)vsnl.net

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் : 044 - 23452549
ஈமெயில் : copmount(@)hotmail.com

J2
அடையாறு 044-24913552

செய்தி - மைநேஷன்

மூலம்: டெக்கன் கிராணிகிள்

2 மறுமொழிகள்:

Anonymous said...

இந்தியாவில் ஆண்கள் வாழவும் முடியாது சாகவும் முடியாது. வாழ்ந்தால் மனைவியை தற்கொலைக்குத் தூண்டினான் என்று 498A கேஸ் போடுவார்கள். இதிலிருந்து தப்பித்து தன்னுயிரை விடத் துணிந்தால் தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்று கேஸ் போடுவார்கள். மொத்தத்தில் காட்டு மிராண்டிகளின் கூடாரமாக இந்தியா மாறிவருகிறது.

')) said...

காவல்துறையிடம் கொடுக்கும் COMPLAINTS எல்லாம் செவிடர் காதில் உதிய சங்குபோல்! உடனடி நடவடிக்கைதான் (??)