மனைவி தற்கொலை கேசுகள்

மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு கணவனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று அந்த மனைவியின் பெற்றோரோ அல்லது உறவினரோ, மரணத்திற்குப் பின் புகார் கொடுத்தால், அவர்கள் உடனே கைது செய்து விடுவார்கள். "வழக்குதான் நடக்குமே, வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுத்தானே தண்டனை வழங்கப்படுகிறது" என்று நீங்கள் கேட்கலாம். அது நியாயமான கேள்வி. ஆனால் பலர் அறியாத ஒன்று என்னவென்றால், இதுபோன்ற மனவி தற்கொலை கேசுகளுக்காக தனிச் சட்டங்கள் உள்ளன. பொதுவான சட்டங்களான, சாட்சிகள் சட்டம் (Evidence Act) போன்றவை இவற்றிற்குப் பொருந்தா. மேலும் குற்றம் முழுதும் நிரூபிக்கப்படவேண்டாம். வெறும் சந்தேகம் மட்டும் இருந்தால் போதும் என்கிறது இந்தச் சட்டங்கள்.

ஆகையால்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், இந்தியாவில் இந்தியப் பெண்களை மணந்துகொள்வது இந்திய ஆண்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மிகவும் ஆபத்தானது. ஜாக்கிறதை!

இப்போது செய்திகளை வாசியுங்கள்:

1.மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சாவூர் அருகே மனைவியை வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசம் வடுகத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (26). இவர் பாபநாசத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கபிஸ்தலம் தென்சறுக்கை கீதா மகள் ஜெயசுதா (20). இவர் பாபநாசத்தில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது சக்திவேலுக்கும், ஜெயசுதாவுக்கு காதல் மலர்ந்து, இருவரும் 2006ம் ஆண்டு ஆக., மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் சக்திவேல் வரதட்சணைக்கேட்டு ஜெயசுதாவை அடிக்கடி துன்புறுத்தி வந்தார். 2007ம் ஆண்டு ஏப்., 26ம் தேதி பிரசவ செலவுக்காக ஜெயசுதா வங்கியில் இருந்து ரூ.ஆயிரத்தை எடுத்து வந்தார். அந்த பணத்தை தருமாறு சக்திவேல், ஜெயசுதாவை அடித்து துன்புறுத்தினார்.

இதனால், மனமுடைந்த ஜெயசுதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த ஜெயசுதா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 2007ம் ஆண்டு அக்., ஏழாம் தேதி இறந்தார்.

இதுகுறித்து, ஜெயசுதாவின் தாயார் கீதா கொடுத்தப்புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சதீஸ்குமார் வழக்கை விசாரித்து சக்திவேலுக்கு வரதட்சணைக்கேட்டு துன்புறுத்தியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.ஐநூறு அபராதமும், தற்கொலைக்கு தூண்டியதுக்காக ஆறாண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
===========

2. பெண் தற்கொலை முயற்சி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் கைது

கோவையில் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அம்மன் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் விவேகானந்தன் (வயது 32). இவருக்கும் கோவை நீலிக்கோணம்பாளையம் ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த சத்தியநாராயன் மகள் கிரிஜாவுக்கும் (24) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிரிஜாவிடம் அவரது கணவர் விவேகானந்தன் உனது அண்ணன் ரமேஷ்குமாரிடம் சென்று ரூ.11/2 லட்சம் வாங்கி வரும்படி சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்தது.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி சம்பவத்தன்று விவேகானந்தன் விஷபாட்டிலை கையில் வைத்துக்கொண்டு பணம் வாங்கிவராவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று விவேகானந்தன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது கிரிஜா அந்த விஷபாட்டிலை வாங்கி விஷத்தை குடித்துவிட்டார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கிரிஜாவின் அண்ணன் ரமேஷ்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிராபேகம் வழக்குப்பதிவு செய்து, கிரிஜாவின் கணவன் விவேகானந்தனை கைது செய்தனர். விவேகானந்தன் மீது வரதட்சணை கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் சித்ரவதைக்கு உடந்தையாக இருந்த விவேகானந்தனின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
===========

3. பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்கணவன் உள்பட 3 பேருக்கு ஜெயில்தண்டனைசேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஜெயில்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

மேச்சேரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கொட்டனூர்புதுரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் புஷ்பா என்கிற கிருஷ்ணவேணி (வயது20). இவருக்கும், மேச்சேரி அருகே உள்ள ஆண்டினிர் கொப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 6 பவுன்தங்க நகை, மாப்பிள்ளைக்கு மோதிரம் என புஷ்பாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். புஷ்பா தனது மாமியார் லட்சுமி (45), மாமனார் குப்புசாமி(52) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

வீட்டில் புஷ்பாவுக்கு சரியாக சமைக்க தெரியவில்லை என்றும், கழி எப்படி கிண்டுவது என தெரியவில்லை என்றும் கூறி அடிக்கடி கணவன், மாமியார் மற்றும் மாமனார் கிண்டல் செய்து சித்ரவதை செய்தனர்.

இந்த மனவேதனையால் புஷ்பா அருகில் உள்ள காட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த 16.2.2005 அன்று நடந்தது. இது குறித்து மேச்சேரி போலீசார் புஷ்பாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் அசோகன், மாமியார் லட்சுமி, மாமனார் குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி கோபால் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினார்.

3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அசோகனுக்கு 7 ஆண்டு ஜெயில்தண்டனையும், ரூ.1000 அபராதமும், குப்புசாமி அவரது மனைவி லட்சுமி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.