கட்டளையிட்ட அமைச்சர் - ரேணுகா சவுத்திரி. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்!!
அவர் அளித்துள்ள அக்கட்டளை யாருக்கு? - இளம் பெண்களுக்கு!
“பப் பரோ ஆந்தோளன்” (Pub bharao Andolan) என்று ஒன்றைக் கடைப்பிடித்து கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள இளம் பெண்களை சாராயக் கடைக்குப் போய் (இதை ஸ்டைலாக “Pub" என்று அழைப்பார்கள்) இஷ்டத்திற்கு தண்ணி போட்டு கூத்தடியுங்கள்.” இத்தகைய அறைகூவலை விடுத்துள்ளார் ரேணுகா சவுத்திரி!
இப்போது நாட்டிற்கு இதுதான் தலையாய பிரச்னையா? இந்த முன்னேற்றம்தான் காந்தி கண்ட ராமராஜ்யமா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக அவருடைய அமைச்சகத்திற்கு சிலவு செய்யும் மக்கள் வரிப்பணம் ஆண்டு ஒன்றுக்கு 7200 கோடி ரூபாய்!
அதை வைத்துக்கொண்டு இவரும் NCW மற்றும் AIDWA உறுப்பினர்களும் மற்ற பிரச்னைகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மங்களூர் சாராயக் கடையில் பெண்கள் குடித்துக் கூத்தடிக்கும் உரிமையை நிலை நாட்டுவதிலேயே தங்கள் நேரம் மற்றும் மக்கள் பனத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் ஒரு விசாரணக் குழு அனுப்பினார். அப்போது வந்த அம்மையார் பாவம் எழுதிக் கொடுத்ததை படிக்காமல் கொஞ்சம் நடுநிலையாகப் பேசி தனி ஆவர்த்தனம் வாசித்துவிட்டார். அதனால் குதித்தெழுந்த இந்த ரேணுகா சவுத்திரி இன்னொரு விசாரணக் குழுவை அனுப்பியிருக்கிறார். யார் அப்பன் வீட்டுப் பணம்? இதுதான் இப்போது முக்கியமா?
அங்கே மருத்துவ மனையின் இங்குபேட்டரில் பச்சிளம் குழந்தைகள் கருகிச் செத்திருக்கின்றன.
யு.பி.யில் ஆறு வயது தலித் பெண்ணை காவல் துறையினர் சித்தரவதை செய்திருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
அதெல்லாம் பிரச்னையாகத் தெரியவில்லை, இந்த அமைச்சருக்கு. மங்களூரில் பெண்கள் தண்ணி போடுவதுதான் நாட்டிற்குத் தலைபோகிற பிரச்னையா? அந்தப் பெண்களே பதுங்கி விட்டார்கள். இவர் சாமியாடுகிறார்.
அந்த ரேணுகா அம்மையாரின் கைவண்ணம் என்ன தெரியுமா?
498A சட்டத்தில் இதுவரை 1,23,000 பெண்கள் - அதுவும் வயதான தாய்மார்கள் விசாரணையின்றி கைதாகி சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இவருடைய பிடிவாதத்தால்!
4 வயது சிறுவன் கைதாகி சிறையிலடைக்கப்பட்டான் -அவன் வரதட்சணைக் கொடுமை செய்தானாம்!
வெட்கக்கேடு!
2 மறுமொழிகள்:
Dear All,
please read below dinamalar article...
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2939&cls=row4
அப்படியே மேலை நாடுகளில் இருப்பது போல நிர்வாண நடன கிளப்புகளுக்கும் (Strip Clubs) ரேணுகா சவுத்ரி ஏற்பாடு செய்தால் நாட்டில் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். ***குறிப்பு: நான் பெண் விடுதலைக்கு எதிரி அல்ல அதனால் ஆண் பெண் இருவருக்கும் சமமாக தனித் தனி கிளப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது பெண்கள் நல அமைச்சருக்கு என் வேண்டுகோள்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க