ஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்

மதுரை: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே வாலிபரை தற்கொலை செய்ய மனைவி தூண்டிய புகார் குறித்து பதிலளிக்கும்படி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை பசும்பொன்நகரை சேர்ந்த வேணி தாக்கல் செய்த மனு: என் மகன் பூவைராஜா(23) மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் உமாமகேஸ்வரிக்கும் (31) காதல் ஏற்பட்டது.

உமாமகேஸ்வரி மதுரை கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர்கள் 2008 ஜூலை 21ல் திருமணம் செய்து கொண்டு சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். பிறகு உமாமகேஸ்வரி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை தேடி சென்ற என் மகனை உமா மகேஸ்வரியின் தந்தை, தாய், சகோதரியின் கணவர் சிவக்குமார், மற்றும் சகோதரர் மிரட்டியுள்ளனர்.

ஜன., 8ம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு அருகில் என் மகன் விஷம் குடித்து இறந்தார். ஓடைப்பட்டி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தற்கொலைசெய்ய தூண்டிதாக உமாமகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிய கோரி ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது. சிவக்குமார் போலீஸ் துறையில் பணிபுரிவதால் நடவடிக்கை இல்லை.

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில் பாபுராஜேந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார், "இதற்கு பதிலளிக்கும்படி தேனி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப' உத்தரவிட்டார்.

1 மறுமொழி:

')) said...

இதே அந்த பொண்ணு இன்னேரம் உயிர உட்டுருந்தா எல்லாரையும் புடிச்சி உள்ள போட்டுருப்பாங்க..
அந்த பொண்ணு இவர் கூட் எல்லா எடமும் சத்திடிச்சி கடைசில கலட்டி உட்டுடிச்சி.. ஆனா கடைசில பறிபோனது ஒரு உயிர்...