தாலியே தேவை இல்லை - ஆனால் தம்பதிகள்

இந்த வாரக் குமுதம் இதழில் வெளிவந்துள்ள கவர் ஸ்டோரி இது:


சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.

லிவிங் டூகெதர். 'தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த 'ஜஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.

"லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. 'லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல. நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.

வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.

இப்படிப் போகிறது கதை. ஆனால் ஆண்களே, நீங்க ஜாலியா இருந்திடலாம்னு நெனைக்காதீங்க! பெண்கள் எப்படி வேணா இருக்கலாம். ஆனால் ஆண்கள் பாடு ஆபத்து. ஏன்னா கேட்கறீங்க? இதோ இன்றைக்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் படிங்க:


கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிப்பு: காதலன் உட்பட இருவர் கைது

சென்னை: கால் சென்டரில் பணிபுரிந்தவரை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, பெரம்பூர் பந்தர் கார்டனைச் சேர்ந்தவர் உமா. இவரது மகள் சந்திரா(25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) வேளச்சேரியில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் மாம்பாக்கத்தைச் சேர்ந்த அகமது (28) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு வருடமாக காதலித்து பல இடங்களுக்கும் சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராவுக்கு பிறந்த நாள்.

அகமது தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் மடிப் பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சந்திராவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது விருந்துடன் கேக் வெட்டி கொண்டாடினர். அன்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பியதும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்திரா கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்வதற்கு அகமது ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இது குறித்து உமா செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக அகமதுவையும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷையும் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எப்படி இருக்கிறது கதை. முழுதும் உடன்பட்டு உல்லாசமாக இருந்தாளாம். அது எப்படி கற்பழிப்பாகும் என்பது புரியவில்லை!

ஒரு ஆணை ஒரு பெண் தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி அழைத்தால், "எந்தவித எதிர்பார்ப்புமின்றி முழு சம்மதத்துடன்தான் இன்னாருடன் கலவியில் ஈடுபடுகிறேன்" என்று சாட்சிகள் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு, ஆடியோ, வீடியோ ரெகார்டு செய்துகொண்ட பின்னர் மேல் நடவடிக்கைகளி ஈடுபட்டால்தான் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது போலிருக்கிறது! இல்லாவிடில் அனைத்து ஆணெதிர்ப்புச் சட்டங்களும் ஆணின்மேல் பாயும் அபாயம் இருக்கிறது.

கற்பழிப்புச் சட்டம் அடிப்படையில் இப்படிச் சொல்கிறது:

As per Section.375 of IPC a man is said to commit the offence of rape with a woman under the following six circumstances:

1. Sexual intercourse against the victims will,

2. Without the victims consent,

3. With her consent, when her consent has been obtained by putting her or any person that she may be interested in fear of death or hurt,

4. With her consent, when the man knows that he is not her husband,

5. With her consent, when at the time of giving such consent she was intoxicated, or is suffering from unsoundness of mind and does not understand the nature and consequences of that to which she gives consent,

6. With or without her consent when she is under sixteen years of age.

ஆனால் அதை எப்படி வேண்டுமானாலும் கோர்ட்டுக்கள் விளக்கம் கொடுக்கலாம். ஆனால் பொதுவாக எல்லாம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இங்கு சென்று பாருங்கள்:

http://www.legalserviceindia.com/articles/rape_laws.htm

ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

5 மறுமொழிகள்:

')) said...

//ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. //

இந்த flow ல என்ன சொல்ல வாரீங்க?
:)

')) said...

நண்பரே,

ஆண்கள் சுபாவத்தில் வெளிப்படையானவர்கள். தன்னைத்தேடி ஒரு பெண் வருகிறாளே என்னும் இறுமாப்பில் தற்காப்பு ஏதுமின்றி அவள் வலையில் விழாமல் ஜாக்கிரதை உணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. ஏனெனில் பெண் என்ன சொல்கிறாளோ அதுதான் சட்டப்படி எடுபடும்.

இப்போதே பல ஆண்கள், அதுவும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள் 29-30 வயதாகி, குடும்பத்தினர் வற்புறுத்தியும்கூட, திருமணம் செய்துகொள்ள பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை அப்படியிருக்கிறது அன்பரே. அதனால்தான் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளை ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி "சட்டபூர்வமான பயங்கரவாதம்" என்று வர்ணித்திருக்கிறார்.

நன்றி சுபாஷ்.

')) said...

குமுதத்தில் வந்த அக்கட்டுரையை நானும் வாசித்தேன். இந்த தலைமுறையை சாடி எழுதழயிருந்தார்கள். எனக்கென்னமோ அதில் கூறிய அளவுக்கு அது பிழையென தோணவில்லை. இது எனது கருத்து.

நீங்கள் சொல்வதும் சரிதான். பெண்கள் கோர்ட்லோ றோட்டிலோ என்ன சொன்னாலும் எடுபடுகிறது. இற்த விடயத்தில் ஆண்கள் கவனமாக இல்லைதான் நண்பரே.

பெண்கள் நட்பாக பழகினாலும் சரி, அந்தரங்க உறவோடு பழகழனாலும் சரி, அந்த ஆணைப்பற்றி முழுவதும் தெரிந்துகொண்ட பின்னர்தான் மூவ் பண்ணுவார்கள். நம்பிக்கையான ஆளா இல்ல நடுவுல அறுத்துடுவானோ என்று.

ஆனால் ஆண்கள் பெண்களைப்பற்றி இம்மாதிரி யோசித்து முடிவெடுப்பதில்லை. ஒரு பெண் தன்னிடம் வருகிறாளேன்றால் கர்வப்படுவானொளிய ஏனென சிந்திப்பதில்லை.
இதுதான் பிரச்சனை.

மற்றயது திருமணம் செய்ய ஆண்கள் ஏன் பயப்படுகிறார்களென நீங்கள் சொன்னது ஏனென விளங்கவில்லை.

')) said...

சுபாஷ்,

"இம்" என்றால் சிறைவாசம் என்று படித்திருப்பீர்களே அதுதான் இன்று இந்தியாவில் மணமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நடந்துகொண்டிருக்கிறது.

புருஷன் பேசினாலும் குற்றம். பேசாவிட்டாலும் குற்றம். தலையைத் திருப்பிக்கொண்டான், அதனால் என் மனம் பாதிக்கப்பட்டது என்று ஒரு பெண் புகார் கொடுத்தால் அவன்மேல் "குடும்ப வன்முறைச் சட்டம்" பாயும். இது இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

மேலும் இ.பீ.கோ 498A படி எந்த மணமான பெண்ணும் அவளுடைய பெற்றோரும் எப்போது வேண்டுமானாலும் கணவன் குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று ஒரு பஸ் டிக்கெட் பின்னால் கூட கிறுக்கி காவல் நிலையத்திற்கு அனுப்பினால் போதும். ஒரு விசாரணையுமின்றி அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அச்சரபாக்கத்திலிருக்கும் ஒரு பெண் தன் கணவருடன் கூட மன்மோஹன் சிங்கும் சேர்ந்து என்னிடம் வரதட்சிணை கேட்டு துன்புத்தினார் என்று புகார் கொடுத்தால் போதும்! அவர்மேலும் கேசு போட்டுவிடுவார்கள். (அர்ஜுன் சிங் வரைதான் இதுவரை பாய்ந்துள்ளது. மன்மோஹன் சிங்கின் முறை இன்னும் வரவில்லை!). இது தான் இன்றைய நிலை.

http://www.498a.org/ சென்று பாருங்கள், இதுபோன்ற பெண்களின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் வாழவை இழந்துள்ள அப்பாவி இளைஞர்களின் சோகக்கதைகளை.

Anonymous said...

Idharku theervae kidayatha? pengal van kodumai paoi.... ippodhu arasangamae angalai van kodumai seigirathae, entha visaaranaiyum illaamal..... naanum baathikapattavanae..... appaviyaai irukakoodathenbadhu matum purigiradhu... :(

Sureshkumar.K