மனைவியிடம் அறை வாங்கும் கணவன்!

விளம்பர வீடியோ படம் எடுப்பவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்தவர்கள். இதன் கீழ் நீங்கள் காணும் "கிட்பிளை" பிளைவுட் விளம்பரத்தில் ஒரு அம்மாஞ்சி கணவனை புது மணப்பெண் முதலிரவின்போது "ஏன் கிட்பிளை வாங்கிப் பொருத்தவில்லை" என்று கோபமாகக் கேட்டு ஓங்கி ஒரு அறை வைக்கிறாள். இத்தோடு விட்டாளே! அடுத்த விளம்பரத்தில் அவள் தன் காலால் மிதிமிதியென்று மிதிப்பதுபோல் காண்பிக்ககூட செய்வார்கள்! எதிர்த்துப் பேசினால் 498A, குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து புருஷணை அழித்து விடுவாளே!


8 மறுமொழிகள்:

Anonymous said...

SC judges giving their judgement based on TV ads.What a shame!!!

I wonder in howmany false 498a cases these honest judges have given this type of punishment to the lady?

http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=1542&cls=row4&ncat=IN

புதுடில்லி : "வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய கணவன், தனது மனைவியிடம் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், மனைவிக்கு ரூ. 40 லட்சம் வழங்க வேண்டும்'என சுப்ரீம் கோர்ட் வரதட்சணை வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது.அபினவ் என்பவருக்கு, ஷில்பா என்ற பெண்ணுடன் கடந்தாண்டு திருமணம் நடந்தது. கார் வாங்குவதற்கும், மற்ற செலவுகளுக்காகவும் பெண் வீட்டார், அபினவ் குடும்பத்தினருக்கு ரூ. 18 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணம் முடிந்ததும், பிரச்னை துவங்கியது. மேலும் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி, ஷில்பாவை அபினவ் கொடுமைப் படுத்தியுள்ளார். அபினவின் குடும்பத்தினரும் ஷில்பாவை கொடுமைப் படுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, ஷில்பா போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே, விவகாரத்து கோரி அபினவ், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் லோக் அதாளத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:வரதட்சணை கேட்டு அபினவ் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஷில்பா பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார். இதற்காக, அபினவும், அவரது தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் பொது இடத்தில் (அகர்வால் சபா) ஆஜராகி ஷில்பாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் ஷில்பாவிற்கு ரூ. 40 லட்சம் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் நிறைவேறிய பின், விவகாரத்து அளிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

')) said...

இதென்ன சுப்ரீம் கோர்ட்டா, மரத்தடி நாட்டாமையின் கட்டைப் பஞ்சாயத்தா!

அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வரதட்சிணை புகார் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் இதேபோன்ற தீர்ப்பை மனைவிக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் கொடுஅப்பார்களா! ஆனால் ஆண்கள் படும் கொடுமைக்கு எதிராக ஒரு சட்டம்கூட இல்லையே!

இந்திய ஆண்களுக்கு என்றுதான் சுரணை வரப்போகிறதோ!

')) said...

ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல ??!!!

இது ஒரு விதமான மனநோய்னு நினைக்கிறேன்...

நீங்க ஒரு மருத்துவரை சந்தித்தல் நலம்...

அதே நேரம் வீக் எண்டுகளில் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு அப்படீன்னு ஏதாவது ஒரு ஹில் ஸ்டேஷன் போங்க, மனசுக்கு நிம்மதி கிடைக்கும்...

')) said...

உங்களுக்காக நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன், வந்து வாசிக்கவும்...

tvpravi.blogspot.com

')) said...

//ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல ??!!!
இது ஒரு விதமான மனநோய்னு நினைக்கிறேன்...
நீங்க ஒரு மருத்துவரை சந்தித்தல் நலம்...
//

ரவி அவர்களே,

நான் உண்மையான நிகழ்வுகளைத்தான் எடுத்து இட்டிருக்கிறேன். நிலைமை மிக மோசமாக இருக்கிறது. நீங்கள் தயவு செய்து உங்களுக்கு அறிமுகமான வக்கீல் யாரேனும் இருந்தால் அவரிடம் விசாரித்துப் பாருங்கள். நிலவரத்தின் தீவிரம் புரியும். அல்லது ஒரு முறை சென்னையிலுள்ள குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்று பாருங்கள் - "ஜேஜே"-யென்று குழுமியிருக்கும் சல்வார் சூட்டுக்களையும் சூடிதார்களையும் காணலாம். கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கமுடிந்தால், "எப்படியாவது அவிங்களை கொஞ்சநாள் உள்ள வைக்கணும். அதுக்கு ஏதாவது பண்ணுங்கள்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அந்த மெல்லியலாள்கள் பேசுவதைக் காணலாம்.

பெரும்பாலும் இதுபோன்ற கேசு போடுபவர்கள் மென்பொருள், பிபிஓ போன்ற துறைகளில் கைநிறைய சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். பிராமணப் பெண்கள் இதில் அதிகம். இப்போது சில முஸ்லிம் பெண்களும் இதில் இறங்கியிருக்கிறார்கள்.

சிலர் சொல்கிறார்கள் - மேலை நாடுகள் நம் பாரம்பரிய குடும்ப கட்டுக்கோப்பு முறையைத் தகர்க்க முடிவு செய்து சில பெண்களின் இயக்கங்களுக்கு நிறைய பணம் கொடுத்து அவர்கள் மூலம் அரசுக்கு பிரஷர் கொடுத்து இப்படி தகாத சட்டங்களை இயற்றவைக்கிறார்கள் என்று.

எது எப்படியோ, ஆனால் கணவன்மார்கள் கலங்கி நிற்பது என்னவோ நிச்சயம்!

நன்றி.

')) said...

இங்கு சென்று பாருங்கள்:

http://498a.org/

Anonymous said...

Dear Senthazhal Ravi,

If you want to know about Mr.IPC498a blogger's mental disease, you have to experience the pain - in your circle if any aged mother or unmarried sisters remanded for false 498a in the police station in the "WEEK END" then you will know which hill station is good to go in the week end - Ooty or Erkadu.

Get this experience and suggest good doctor to Mr.IPC498a blogger. To get this mentality you dont need lot of experience,just "ONCE" is enough.

But I pray this experience should not happen even for enemy!

')) said...

in the video you have posted.. did you notice the 3rd video among the related videos... oru ponukaaga.. ithana ambalainga yenna yedhunu theriyama parinjikitu varavaraikum yevanum urupadaporadhila :-))