ஆண்மைக் குறைவு என்னும் ஆயுதம்

ஒரு பெண் தன் கணவனைத் தாக்குவதற்கு எவ்வித ஆயுதம் கையில் கிடைத்தாலும் விடமாட்டாள். சமூகமும் சட்டங்களும் அவள் சொல்வதைத்தான் கேட்கும். "ஐயோ, பாவம், பெண்ணல்லவா" என்று உருகுவார்கள். அவர்கள் மனத்தை இளகச் செய்ய பெண்ணானவள் தன் கண்களிலிருந்து கண்ணீரை பொலபொலவென்று கேட்ட மாத்திரத்தில் கொட்டுவாள். போதாதற்கு பெண்கள் நலம் காக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பல NGO இயக்கங்கள் கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெளி நாட்டிலிருந்து டாலர்களைப் பெற்றுக்கொண்டு நம் பாரம்பரிய குடும்ப முறையை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

செய்தித்தாள்களும் வெகுஜன ஊடகங்களும் கூட பெண்கள் கொடுக்கும் பொய்ப் புரட்டுப் புகார்களை மட்டும் விலாவாரியாக வெளியிடுகின்றனவேயன்றி ஆண்கள் பக்க நியாயத்தைப் பற்றி மூச்சு விடுவதில்லை. ஏனெனில் அது பரபரப்பாக இருக்காது.

இதன் கீழ் நீங்கள் காணும் செய்தி இன்றைய தினத்தந்தியில் வெளிவந்தது. அதை ஊன்றிப் படித்தீர்களானல் அந்தப் பெண்ணின் கூற்றினுள் புதைந்திருக்கும் முரண்பாடுகள் தெரியவரும். எப்படியிருந்தால் என்ன, மனைவி சொன்னால் கணவன் குற்றவாளிதானே. அவனை கைது செய்து சிறையில் அடைத்தாகி விட்டது.

இந்திய ஆண்களே, வேண்டாம் இந்த விபரீதத் திருமணம் என்னும் புதைகுழி. ஜாக்கிரதை!

-------------------------------------
குழந்தை பிறக்காததால் குட்டு உடைந்தது. ஆண்மைக் குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

தினத்தந்தி - சென்னை, செப்.18-9-2008

ஆண்மை குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த கணவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). பி.காம். பட்டதாரியான இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் விஜயா (30). இவர், போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக இனிய இல்லற வாழ்க்கை நடத்திய விஜயா-பார்த்தசாரதி தம்பதியிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், விஜயா, சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் முத்துசாமியை சந்தித்து கணவர் பார்த்தசாரதி மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆண்மை குறைவு

பார்த்தசாரதிக்கும், எனக்கும் ஊரறிய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது பெற்றோர் நல்லமுறையில் வரதட்சணை, சீர்வரிசை கொடுத்து திருமணத்தை நடத்தினார்கள். எங்கள் குடும்ப வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நல்லபடியாக இல்லை.

என் கணவர் என்னோடு உறவு வைத்துக்கொள்வதற்கு தயங்கினார். 6 மாதம் வரையில் எங்களுக்கிடையே `செக்ஸ்' உறவு சரியாக நடக்கவில்லை. நானும் அதை பெரிதுபடுத்தவில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் (அப்படிப் போடு!) என்ற பழமொழியை மனதில் வைத்து வாழ்ந்து வந்தேன். ஆனால், எனது கணவருக்கு ஆண்மை குறைவு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டேன். இருந்தாலும் அதுபற்றி அவரிடம் வெளிப்படையாக பேசமுடியவில்லை.

ஆனால், ஒரு நாள் என் கணவரே அவருக்கு ஆண்மை குறைவு இருப்பதை ஒப்புக்கொண்டார். விஷயத்தை வெளியில் சொல்லி அவமானப்படுத்த வேண்டாம் என்றும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இதனால் விஷயத்தை வெளியில் சொல்லாமல் நான் அவரோடு கடந்த 2 ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி வந்தேன். ஆண்மை குறைவு இல்லாதது மட்டுமல்லாமல், அவரால் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாது என்பதும் எனக்கு தெரிய வந்தது. ஆண்மை இல்லாததை மறைத்து அவர், என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். டாக்டரிடம் சிகிச்சை பெற்று ஆண்மை குறைவை சரிசெய்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு எனது கணவர் தயங்கினார்.

சித்ரவதை

`டெஸ்ட் டினிப்' முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஏதாவது குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று எனது கணவர் ஆலோசனை கூறினார். ஆனால், அவரது கருத்தை நான் ஏற்கவில்லை. `டெஸ்ட் டினிப்' குழந்தையை எனது வயிற்றில் சுமக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டேன். நாளடைவில் ஆண்மை இல்லாத பிரச்சினை வெளியில் தெரிந்துவிடுமோ என்று எனது கணவர் அச்சப்பட்டார்.

அந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக என்னிடம் குறை இருப்பதுபோல எனது கணவர் வெளியில் பேச ஆரம்பித்தார். என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தார். நடத்தையிலும் சந்தேகப்பட்டார். இதனால் அவரோடு இனிமேல் சந்தோஷமாக வாழமுடியாது என்று முடிவு செய்து அவரை பிரிந்துவிட்டேன்.

நான் ஆசிரியை தொழில் செய்து சம்பாதித்த பணத்தில்தான் எனது கணவர் வீடு கட்டிய கடனை அடைத்தார். இனிமேல் அவரோடு வாழமுடியாது என்பதால் அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னை ஏமாற்றி திருமணம் செய்ததற்காக தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்து.

கைதானார்

இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி வடபழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ரமாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

2 மறுமொழிகள்:

')) said...

அந்தப்பெண் கூறும் குற்றசாட்டு உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அவர் கணவர் தண்டனைக்குரியவரே!

Anonymous said...

If the lady is falsely accusing her husband, what punishment she will get???????

Nothing. Because in india legal system is slaves for crooked women. It will not help innocent women and men.