வில்லங்க மனைவிகள் - அபாயத்தில் ஆண்கள்!


(நன்றி: குமுதம்)திருமணமான முதல் வாரத்திலேயே பணத்துக்காக கணவனால் விரட்டியடிக்கப்படும் பெண்கள். தினமும் குடித்துவிட்டு வருகிற கணவனிடம் அடிவாங்கும் அபலைகள். கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தால் திட்டம்போட்டு தீர்த்துக் கட்டப்படும் மனைவிகள். இவர்களைப் போன்ற துரதிர்ஷ்டக்காரப் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டவைதான் குடும்ப வன்முறைச் சட்டமும் வரதட்சணை தடுப்புச் சட்டமும். இந்தச் சட்டங்களால் பல பெண்களின் வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்திருக்கின்றது. ஆனால் இன்று வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன. பல பெண்கள் தங்கள் அப்பாவிக் கணவர்களைப் பழிவாங்குவதற்குத்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். உதாரணத்துக்கு ஒரு சின்ன தகவல். 2005-ம் ஆண்டு மட்டும் இந்த சட்டங்களின் கீழ் ஐம்பத்தைந்தாயிரம் ஆண்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் இருபத்தைந்து சதவிகித கேஸ்கள் முதல் கட்ட விசாரணையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. யோசித்துப் பாருங்கள், அந்தப் பரிதாப ஆண்களின் நிலைமையை. போலீஸ், கோர்ட், கேஸ், அலைச்சல், அவமானம், பின்பு நிரபராதி என்ற பட்டம்.


``வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுறதை தவிர்ப்பதற்காக ஒரு வருடத்தில் சென்னை ஹைகோர்ட்டில் மட்டும் சுமார் 2500 பேர் முன்ஜாமீன் எடுக்குறாங்க. இதில் ஒரு சதவிகிதத் துக்கும் குறைவான வழக்குகளில்தான் புகார் உண்மைனு நிரூபணமாகி, குற்றம் நிரூபிக்கப்படுது. மற்றது எல்லாமே பொய்ப்புகார்களால் போடப்பட்ட வழக்குகள்'' என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர்.

மனைவி கொடுத்த பொய்யான புகாரால் இன்று வாழ்க்கையையே தொலைத்த ஜெயபாலனின் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கதை ஓர் உதாரணம். ஈரோட்டைச் சேர்ந்த ஜெயபாலனுக்கு 2002-ல் திருமணம் நடந்தது. மனைவியுடன் தொடக்கத்திலிருந்தே பிரச்னைதான். ``என் மனைவி புகுந்த வீட்டுல கொஞ்சம் சிரிச்சுப் பேசினாலும், அவளோட தலைக்குமேல் ஏறிடுவாங்கனு நெனைக்கிற டைப் என் மனைவி. ஏதாவது வீட்டு வேலை செய்யச் சொன்னா, எங்க குடும்பமே சேர்ந்து கொடுமைப்படுத்துற மாதிரி பேசுவா. எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சுது. ஆடி மாசத்துக்கு பிறந்த வீட்டுக்குப் போன என் மனைவி திரும்பி வரவே இல்லை'' என விரக்தியுடன் சொல்கிறார் ஜெயபாலன்.

கணவரை விட்டுப் பிரிந்த ஒரு வருடத்துக்குப் பிறகு ஆற அமர யோசித்து, ஜெயபாலனின் மனைவி போலீஸில் வரதட்சணைப் புகார் அளித்த சம்பவம் பெருங்கொடுமை. ``என் குடும்பத்துல மிச்சமிருந்த நிம்மதியும் மொத்தமா போயிடுச்சு. ஏதோ பணத்தாசை பிடிச்சு அலையுற கும்பல் மாதிரி எங்களை எல்லோரும் பார்த்தாங்க. உண்மையில், என் பிரச்னைக்கும் வரதட்சணைக்கும் தொடர்பே கிடையாது. இது என் மனைவியோட குடும்பம் என்னைப் ழிவாங்குறதுக்காகக் கொடுத்த பொய்ப்புகார்னு நிரூபணம் ஆக நாலு வருஷம் கோர்ட்டுக்கு அலைய வேண்டியிருந்தது. நான் வேலை பார்க்குற பெங்களூரிலிருந்து, வழக்கு நடக்குற கோயம்புத்தூர் கோர்ட்டுக்கு இதுவரைக்கும் ஐம்பது முறையாவது வந்திருப்பேன்'' என்று சொல்லும் ஜெயபாலன், தற்போது விவாகரத்து வழக்குக்காக அலைந்துகொண்டிருக்கிறார்.
கணவருடன் பிரச்னை தோன்றி விட்டால், அவரது அம்மா, அப்பா உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையே நீதிமன்றத்துக்கு இழுத்தால்தான் சில பெண்களுக்குத் திருப்தி.


ஓசூரில் வசித்து வந்த ஷ்யாம் முகர்ஜிக்கும் அவரது மனைவி லீலாவுக்கும் இடையே பத்து வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு. ஷ்யாமை விட்டுப் பிரிந்து சென்ற லீலா திடீரென ஒருநாள் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் புகார் செய்தார். லீலா புகாரில் சேர்த்திருந்த ஷ்யாமின் அம்மாவுக்கு வயது 80. அப்பா தொண்ணூறை நெருங்கிக்கொண்டிருப்பவர். ``ஓசூரில் எங்கூட வாழ்ந்த லீலாவை கொல்கத்தாவிலுள்ள எங்க அம்மா, அப்பா எப்படி துன்புறுத்த முடியும்? அவங்க எழுந்து நடக்குறதுக்கே மத்தவங்க துணை தேவை. என் தங்கையின் கணவருக்கு இதில் என்ன சம்பந்தம்? குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் இந்தியாவிலுள்ள எந்த இடத்திலும் புகார் பண்ணலாம். இதைப் பயன்படுத்தி, லீலா தற்சமயம் வசிக்குற புனேயிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துருக்கா. இப்போ வழக்கு விசாரணைக்கு உட்படும்போதெல்லாம் நான் ஓசூரிலிருந்தும், என்னோட பேரண்ட்ஸ் கொல்கத்தாவிலிருந்தும் புனே கோர்ட்டுக்குப் போகணும்'' என முடிக்கும் ஷ்யாமின் குரலில் வேதனை ஒலிக்கிறது.

சட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கணவர்களை டார்ச்சர் பண்ணுகிற சில பெண்களுக்கும் நம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இடையே அப்படியொரு `அண்டர்ஸ்டேண்டிங்!' பல கேஸ்களில் போலீஸாரே நேரடியாகத் தலையிட்டு `கட்டப்பஞ்சாயத்து' செய்வதும், வசூல்வேட்டை நடத்துவதும் சர்வ சாதாரணமாகி விட்டன. அதுவும் பெண் பெரிய இடம் என்றால் கணவர் காலி. பெரும்பாலான பெண்கள் கணவருடன் மீண்டும் சேர்வதற்கோ பிரச்னையின்றிப் பிரிவதற்கோ உதவும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் தங்கள் புகாரைப் பதிவு செய்வதில்லை. கணவரைக் கம்பி எண்ண வைக்க மட்டுமே வழிகாட்டும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 498 (ஏ) பிரிவின் கீழ்தான் புகார் கொடுக்கிறார்கள்.

அதென்ன 498(ஏ)?

``கணவன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினாலும், உடல், மன ரீதியாக சித்திரவதை செய்தாலும் மனைவி ஐ.பி.சி. 498(ஏ)யின் கீழ் போலீஸில் நேரடியாக புகார் செய்ய முடியும். வாரன்ட் இல்லாமலேயே கணவரைக் கைது செய்ய முடியும்ங்கிறதால, பழி வாங்க நினைக்கும் பல பெண்களின் ஒரே சாய்ஸ் இதுதான். பல புகார்களில் போலீஸ் எஃப்.ஐ. ஆர். போடறதில்லை. கணவரைக் கைது செஞ்சா, 24 மணி நேரத்துல மாஜிஸ்திரேட் முன்னாடி நிறுத்தியாகணும். அதனால் போலீஸ் அவரைக் கைது செய்யாமலேயே, அதிரடியா ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, கட்டப்பஞ்சாயத்துல இறங்கிடுறாங்க'' என ஆதங்கத்துடன் சொல்கிறார் வழக்கறிஞர் மோகன்.

குடும்ப வன்முறைச் சட்டத்தையும் 498(ஏ)யையும் தவறாகப் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் விடுத்த எச்சரிக்கை இது, ``புலி வருது, புலி வருது என உங்கள் இஷ்டத்துக்குப் பொய் சொல்லி, உண்மையிலேயே புலி வந்து நிற்கும் போது, உதவிக்கு யாரும் வராமல் செய்துவிடாதீர்கள்!''

கேபிள் டி.வி. சரியாகத் தெரியா விட்டால்கூட, கணவன் மீது சித்திரவதை புகார் கொடுக்கிற வில்லங்க மனைவிகள் திருந்துவார்களா?.

-ஆனந்த் செல்லையா

ஆண்கள் உரிமைக்கு ஒரு சங்கம்

பெண்களின் போலியான புகார்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காகவே 2007-ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட "ஆண்கள்உரிமை பாதுகாப்பு இயக்க"த்துக்கு இளைஞர்களிடையே அமோக வரவேற்பு. தமிழகம் முழுதும் ஏறக்குறைய 4 லட்சம் பேர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பை நிறுவியவர் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் டீன் ஆகப் பணிபுரிந்தவரும், பிரபல தோல் மருத்துவ நிபுணருமான டாக்டர் இளங்கோவன். ``குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தி, கணவர் மேல் போலியான புகார்கள் கொடுக்குற பெண்களுக்கு நம் சட்டங்களில் எந்தத் தண்டனையும் இல்லை. பொய் சொன்ன பெண்களுக்கு தீர்ப்பில் ரெண்டு நிமிஷம் அட்வைஸ் செஞ்சிட்டு விட்டுடுறாங்க. குற்றம் சாட்டப்பட்ட கணவரை ஐந்தாறு வருஷம் கழிச்சு நிரபராதினு நிரூபிச்சு, என்ன பிரயோஜனம்? அவர் இழந்த நிம்மதி திரும்பக் கிடைக்குமா? வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை புகார்களைத் தீர விசாரிக்க தனி கமிட்டி அமைக்கணும். பொய் சொன்ன பெண்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிச்சால்தான் இவங்க திருந்துவாங்க'' என வலியுறுத்துகிறார் இவர்.
குடும்பப் பாதுகாப்புக்கு அதிகாரி!


மனைவியிடமிருந்து வரும் கணவனுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதில், தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே தலைகீழான வித்தியாசம். மற்ற மாநிலங்களில் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய புகார்களை ஒரு பெண் `குடும்பப் பாதுகாப்பு அலுவலர்" என்ற சமூகநலத்துறையைச் சேர்ந்த அதிகாரியிடம்தான் கொடுக்க முடியும். பிரச்னையைப் பாதுகாப்பு அலுவலர் இரு நாட்களுக்குள் விசாரித்து, மாஜிஸ்டிரேட்டிடம் அறிக்கை கொடுத்துவிட வேண்டும். போலீஸ் கெடுபிடிகளுக்கு இந்த முறையில் வாய்ப்பு இல்லை. பெண்ணின் புகார் பொய்யாக இருக்கும் பட்சத்தில், ஆரம்பத்திலேயே போலிவழக்குகள்இதன் மூலம் தடுக்கப்பட முடியும். ஆனால் தமிழகத்தில் இந்த முறை இல்லை. எடுத்ததுமே போலீசிடம் சென்று விடுகிறார்கள். ``குடும்பப் பாதுகாப்பு அலுவலர்கள் தமிழகத்திலும் நியமிக்கப்பட வேண்டும். ஏனென்றால் முதலில் போலீசிடம் புகார் போகும்போது, அவர்கள் கட்டப் பஞ்சாயத்தில் இறங்க வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த "ஆண்கள் உரிமை பாதுகாப்பு இயக்க" உறுப்பினர்

5 மறுமொழிகள்:

Anonymous said...

Thanks for the post.

Good time starts now for thousand of innocent families in tamilnadu. Thanks for Kumudam and Junior Vikadan for bringing this social problem to create awareness to the public. If people see any dowry related news, usually they think husbands and their familes are the problem. Now they will know who is the real culprits.

Anonymous said...

In india 498a prostitution business is running very well with the blessings of government. Dedicated shameless workers in this business are lawyers, lower court majistrates, and police.

TN prosecutor nabbed for graft

S. Nagarajan, an assistant public prosecutor handling the rosecution of N. Durai charged with harassing his wife Sabitha for dowry, reportedly demanded a bribe of Rs.100,000 from the victim's father R. Rajagopalan to ensure conviction

Coimbatore: Anti-corruption officials arrested a government prosecutor for allegedly demanding a bribe to ensure the conviction of a dowry offender, the Tamil Nadu police said.

According to police, S. Nagarajan, an assistant public prosecutor handling the prosecution of N.

Durai charged with harassing his wife Sabitha for dowry since their marriage four years ago, reportedly demanded a bribe of Rs.100,000 from the victim's father and industrialist R. Rajagopalan to ensure punishment.

"Repeated pressure from Nagarajan added insult to injury. Upon being pressed for an advance 'fee' of Rs.15,000 today (Tuesday) I tipped off the Anti-Corruption Bureau. The lawyer was trapped and caught with marked currency," Rajagopalan told reporters.

Besides additional cash, Durai allegedly demanded various luxury items from his in-laws. Failure to provide those resulted in repeated beatings and threats to divorce, prosecution sources added.

Dowry harassments are common in the districts of Coimbatore, Erode and Salem, situated within a 600 km radius of Chennai.
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=1666254

Anonymous said...

feminism smahes the humanism


vera ennatha solla ?

Anonymous said...

Only in India this happens!

Police and judges can do any grave error or human rihghts violation, and simply say sorry. If accused person simply say sorry, will the court release them from the case?????????

In india justice means =
In which shop it will available? How much?, How it look like??????????

வரதட்சணை வழக்கில் பெண்ணை சிறை வைத்த இன்ஸ்பெக்டர் மன்னிப்பு
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு மாறாக லாக்-அப்பில் பெண்ணை சிறை வைத்த இன்ஸ்பெக்டர் மன்னிப்பு : ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி
http://www.dinamalar.com/kutramnewsdeta ... w3&ncat=TN
மதுரை : ராமநாதபுரத்தில் வரதட்சணை வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு மாறாக 12 மணி நேரம் லாக்-அப்பில் வைத்ததற்காக ஐகோர்ட் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் வசந்தா மன்னிப்பு கோரினார்.ராமநாதபுரத்தை சேர்ந்த முகபத்பீவீ தாக்கல் செய்த ரிட் மனு: வரதட்சணை வழக்கில் அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் 12 போலீசார் கடந்தாண்டு செப்., 23ல் அதிகாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்தனர். தொழுகையில் ஈடுபட்ட என்னை புடவை கூட கட்ட விடாமல் கைலியுடன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கைது நமுனாவை என் குடும்பத்தினரிடம் வழங்கவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு மாலை 6.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். நான் உடல்நிலை சரியில்லை என கூறினேன். கோர்ட் உத்தரவின்படி இரவு 7 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். என் கைது நமுனாவை சகோதரர் லியாகத் அலியிடம் பகல் 2 மணிக்கு வழங்கினர். அதில் காலை 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக குறிப்பிட்டனர். போலீஸ் நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு புறம்பானவை. எனவே கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரினார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் 3 பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஆவணங்களை பார்க்கையில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை இன்ஸ் பெக்டர் மீறியுள்ளது தெரிகிறது. அவர் போட்ட பதில் மனுக்களில் அந்த மீறல்களை மறைக்க முயன்றுள்ளார். மனுதாரரை காலை 11.30 மணிக்கு கைது செய்ததாக ஒரு வாக்குமூலத்திலும், மற்றொன்றில் காலை 4.30 மணிக்கும் என குறிப்பிட்டுள்ளார். கோர்ட் அவமதிப்பு செய்ததுடன் பொய் ஆவணங் களையும் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ளார். இன்ஸ்பெக்டருக்கு 51வயது எனவும், கோர்ட் தண்டனை வழங்கினால் பதவி உயர்வு பாதிக்கும் என அவரதுவக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் தவறு செய்த இன்ஸ்பெக்டரை விடவும் முடியாது. இன்ஸ்பெக்டரை தண்டிப்பதன் மூலம் மனதளவில் பாதிப்புக்குள்ளான மனுதாரரை சமாதானப்படுத்த இயலும். இன்ஸ்பெக்டர் மனுதாரர் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்புகோர வேண்டும். மனுதாரர் அவரை மன்னித்தால் இன்ஸ்பெக்டர் கோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்ப இயலும். இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் முகபத்பீவீ வீட்டிற்கு சென்று மன்னிப்பு கோரினார். அதனை முகபத்பீவீயும் ஏற்றார். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்ட விவரத்தை அவரது வக்கீல் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மன்னிப்பை ஏற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து எச்சரித்து நீதிபதி கே.சந்துரு விடுவித்தார்

Anonymous said...

I don't know where from you got the data. But, I know many women who suffer due to dowry harassment. In small towns and villages, women are still harassed and tortured by men. Women don't go and complain because going to police station and court is not usual thing to do. All the laws have been misused and this may not be an exceptions.