கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்ட வாலிபர் - போலீஸ் தேடுகிறது
செய்தி: தினமலர்
ராயபுரம், செப்.24-
கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய் மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்ட வாலிபரை போலீஸ் தேடுகிறது.
கள்ள தொடர்பு
சென்னை தண்டையார் பேட்டை திலகர் நகரில் வசித்து வருபவர், லட்சுமி (வயது 41). இவரது மகன் வெற்றி (22). லட்சுமியின் கணவர் ஸ்ரீதர், 15 ஆண்டுகளுக்கு முன் அவளை பிரிந்து சென்று விட்டார்.
அதன் பின் லட்சுமிக்கு அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர்பை விட்டு விடும் படி, லட்சுமியிடம், வெற்றி கூறினார். ஆனால் லட்சுமி மறுத்தார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி, லட்சுமியின் மீது வெற்றி போட்டார்.
இதனால் கால் முறிந்த லட்சுமி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்ல முத்து வழக்கு பதிவு செய்து, வெற்றியை தேடி வருகிறார்.
கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய்
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
முதலில் 22 வயதான வெற்றி தாய் வீட்டை விட்டு காலி செய்து தனியாக பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். தனியாக இருக்கும் தாயை அன்பு பாசம் என்கிற பெயரில் தனக்கு அடிமையாக வைத்திருக்க வெற்றி நினைத்திருப்பார் போலும். 41 வயதான பெண்ணுக்கு மற்ற பெண்களைப் போல் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதை இந்த சமுதாயம் என்றுதான் ஏற்றுக் கொள்ளுமோ! ஒருவேளை, தனது நண்பர்கள் இடையே ஏதும் ஏளனத்திற்கு பயந்தோ வெற்றி இப்படி நடந்திருப்பார். எல்லாவற்றிற்கும் ஆணாதிக்க திமிர்தான் அடிப்படை காரணம்.
தாய் செய்ததில் எந்த தவறும் இல்லை.
Hi,
What's wrong in that lady's activity? Our society has to improve. It’s her personal decision and no one has rights to interferer in it. Even to her son.
kannan.
இதே ஒரு ஆம்பிளை பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த்தால்
அவனுடைய மகள் கல்லைத் தூக்கிப் போட முடியுமா? போடுவாளா?
உங்கள் கருத்தைத் தெரிவிக்க