ஆண் உயிர் தாழ்ந்ததா!

நம் நாட்டின் சட்டங்களின்படி ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே அதற்கு அவளுடைய கணவன்தான் காரணம் என்று முடிவு செய்து அவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அந்த கணவன் மனையின் நடத்தை காரணமாக தற்கொலை செய்துகொண்டால், மனைவிக்கு ஒரு கொசுகூட கடிக்காது. இது போன்று பல விசித்திரங்கள் கொண்ட நாடு நம்முடையது!

இதோ, இன்றைய செய்தியை படியுங்கள்:-

திருமணமான ஏழு மாதத்தில் சோகம் : மனைவி கண்டிப்பு, கணவன் தற்கொலை

மீஞ்சூர்: குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி மனைவி கண்டித்ததால், மனமுடைந்த கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பிமகன் செந்தில்குமார் (24). கொத்தனார். இவர் வேலைக்குச் சென்று திரும்பும்போது, அன்றைய கூலி தொகையில் பெரும் பகுதியை மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இதை அவரது மனைவி ஹேமாவதி கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 27ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த செந்தில்குமாரை கண்டதும் அவரது மனைவி ஹேமாவதி கோபத்தில் கண்டித்துள்ளார்.


இதனால் மனமுடைந்த செந்தில் குமார் வீட்டில் இருந்த மண்ணெண் ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர்சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

5 மறுமொழிகள்:

')) said...

நன்பரே.. இதுல பல விடயம் இருக்கு..
முதல்ல.. செந்தில்குமார்(என்ன கொடுமை சார்.. என் பெயர் வச்சிகிட்டு இப்படியா), மது அருந்தும் வழக்கம் உள்ளவர். தினமும் குடித்துவிட்டு வருவதால் வீட்டில் மனைவியுடன் சண்டை.

மனைவி குடிபழக்கத்தைக் கைவிடுமாறு கூறியதால் நம்ம தலைவர் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.. அருமை.. அருமை.. என்ன ஒரு பொருப்புள்ள கணவன்.. அவனுக்கு நீங்க வக்களத்து.. அதுக்கு ஒரு பதிவு..

ஏழு மாதமே ஆன நிலையில் இப்படி ஒரு துயரம் நடந்துள்ளது வருத்தமளிக்கிறது. இனி ஹேமாவதியின் நிலை என்ன??
அது பற்றி கவலை படாமல், இப்படி ஒரு குடிகார கணவனுக்கு பரிந்துரைத்து பதிவு எழுத வேண்டாம். அதுவே ஆண்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி..

')) said...

தலைப்புக்கும் செய்திக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கா???

')) said...

ஐயா,

நாளிதழில் வெளிவந்துள்ள காரணத்தை மட்டும் பார்க்கிறீர்கள். உண்மையில் அவனுடைய தற்கொலைக்குக் காரணம் என்ன என்பதை யாரும் ஆராய்ந்து அதனை வெளியிடமாட்டார்கள். ஏனெனில் பெண் தற்கொலைதான் பரபரப்பான செய்தி. உடனே உங்களைப் போன்ற இளகிய மனம் படித்தவர்கள் "ஐயகோ, பெண்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்களே" என்று கூச்சலிடுவார்கள். ஆனால் உளவியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு ஆண் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்பவனல்ல.

நான் கூறுவதெலாம், நம் சட்டங்களும், சமூகத்தின் அணுகுமுறையும், ஊடகங்களின் செய்தி வெளியிடும் தன்மையும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான நோக்கில் அமைய வேண்டும் என்பதுதான்.

இந்தக் கூற்றில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.

நன்றி.

Anonymous said...

In India,

If a man died within 7 MONTHS of his marriage, it is SUICIDE.

If a woman died within 7 YEARS of her marriage, it is DOWRY DEATH, murder!!!!!!!!

ONLY IN INDIA ONLY!!!!

')) said...

இதோ இன்றைய தினமலர் செய்தியை வாசியுங்கள்-

மனைவி, குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஏழு ஆண்டு சிறை

அக்டோபர் 01,2008,00:00 IST

விருத்தாசலம் : வரதட்சணை கொடுமையால் மனைவி மற்றும் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வடகுத்து கிராமத்தைச்சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). அவரது மனைவி திலகவதி(25). இவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது. திலகவதியின் பெற்றோர் ரூ. 40 ஆயிரம், 10 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர்.

மேலும் ரூ. 10 ஆயிரம் மற்றும் 10 பவுன் நகை வாங்கி வருமாறு திலகவதியை ஜெயக்குமார் கொடுமைப்படுத்தினார். இதற்கிடையே திலகவதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. மீண்டும் ஜெயக்குமார் திலகவதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். திலகவதி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிந்தனர். திலகவதி தனது குழந்தைகள் சிவராமன் (2), வைஷாலி (2 மாத குழந்தை) ஆகியோருடன் தாய் வீட்டிற்கு சென்றார்.

ஜெயக்குமார் தான் வசிக்கும் பகுதியில் உள்ள செந்தாமரைக்கண்ணன் மகள் சுதாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் திலகவதிக்கும் ஜெயக்குமாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயக்குமார் திலகவதியிடம்," நீயும், குழந்தைகளும் இறந்தால் தான் நான் நிம்மதியாக வாழ முடியும்' எனக்கூறி திட்டினார். மனமுடைந்த திலகவதி 2004ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி மகளிர் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து விருத்தாசலம் கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வெற்றிச்செல்வி, குற்றவாளி ஜெயக்குமாருக்கு மனைவி, இரு குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பழனிவேல் ஆஜரானார்.
====================

கணவனின் வாக்குமூலம் என்ன?
அவன் சார்பில் யார் ஆஜர் ஆனார் (யாராவது ஆஜர் ஆனார்களா?)
ஆழ்ந்து நோக்கினால் இந்த செய்திக் கோர்வையில் உள்ள இடைவெளிகள் புலனாகும்

யாரேனும் RTI சட்டப்படி இந்த வழக்கின் மேல்விவரங்களைப் பெற்று மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.