வெறி பிடித்த பெண்கள் - தனித்து வசிக்கும் ஆண்கள்

அப்பாவி கணவர்களையும் அவர்தம் பெற்றோரையும் கொடுங்கோன்மை சட்டங்கள் மூலம் பயங்கரவாதத்தினால் தாக்கும் பெண்கள் நிறைந்த நம் நாட்டில் இதன்கீழ் காணும் செய்தியில் குறிப்பிட்டுள்ள நிலை தொடங்க நீண்ட நாட்கள் இல்லை. இப்போதே படித்த இளைஞர்கள், குறிப்பாக மென்பொருள் துறையில் இருப்பவர்கள் திருமணமென்றாலே காத தூரம் ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெண்மை என்பதே ஒரு வக்கிரம் என்னும் நிலைப்பாட்டை நம் பாரம்பரிய "மனை மாட்சி"யின் அழிவினால் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இனி செய்தி:

லாஸ் ஏஞ்சலஸ்: திருமணத்துக்கு பிறகு மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும், வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் புதிய கலாசாரம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமியை சேர்ந்தவர் டாக்டர் டேனியல் கவுர். தனக்கு குழந்தை வேண்டும் என்பது இவரது நெடுநாளைய ஆசை. இவரது மருத்துவப் பள்ளி மற்றும் மருத்துவமனை மூலம் ஏகத்துக்கும் சம்பாத்தியம். வேலையை பார்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லை. மனைவி பிரிந்துசென்று விட்டார். இப்போது கவுருக்கு வயது 46. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, தனது நீண்ட கால கனவை செயல்படுத்த முடிவு செய்தார். வாடகைத் தாய் மூலம், தற்போது ஆண் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவரை, ஆண்களுடன் வாழப்பிடிக்காத பெண்கள் தான், செயற்கைக் கருவூட்டல் மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்போது, தனியே வசிக்கும் ஆண்களும், குழந்தை பெற்றுக் கொள்ளும் புதிய கலாசாரம் அறிமுகமாகி உள்ளது. தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு பிணைப்பு வேண்டும் என்று, தனித்து வாழும் ஆண்களும் விரும்புகின்றனர். இதனால், அவர்கள் வாடகைத் தாய் மூலம் தனது குழந்தையையே பெற்றுக் கொள்கின்றனர்.

கடந்த மாதம் பாப் பாடகர் ரிக்கி மார்ட்டின், வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டார். இப்போது தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், தனித்து வாழும் ஆண்கள், குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் துவங்கினர். இப்போது தங்களது குழந்தையையே பெற்றுக் கொள்ள துவங்கியுள்ளனர். தனித்து வாழும் ஆண்கள், பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ளனர். ஒழுக்கமாக வசிக்கும் ஆண்களும் உண்டு. இவர்கள் பெண்களை விரும்பாதவர்களாக உள்ளனர். மனைவி என்று ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாமல், அதே நேரம் குழந்தையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்ள இவர்கள் 40 லட்ச ரூபாய் செலவிடுகின்றனர்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

In india Law was made for divorce, not for the marriage. In fact, Marriage doesn't require a law. But still number of marriages is greater than divorces per day.
Relationship of male and female is "NATURE'S LAW" for the purpose of reproduction to keep alive the living species(human,animal,plants). To achieve the purpose nature has given '*xual instinct' as a perk to do the job (There is no marriage and divorce in nature's law).
During the time of civilization (in civics)/evolution (in science) human society developed series of moral codes for life and applied on human society on the name of religion and religious morals. Many religious myths were developed and preached by various monastries. This is actually like a sculpturing the nature's law. Parents passed these moral codes and taught the essence of life to thir children.

During the development of modern india human (indian) society missed (still missing ?) such a moral teachers to keep coating the nature's law with moral codes. So this society is going back to its original staus (wild, barbarian culture). Instead of doing the right job to keep alive the civilization, govt. implements laws like gender biased 498a and divorce laws. These are lethal destructive weapons against civilized society. No one has realized (?), this is a silent killer of the society. Almost all the the victims are well educated engineers, scientists, and educationists and other top professionals. This society will lose their invaluable role in the development of the society and country.

Solution: Parents and teachers are the powerful means to make new generation of people with good morals, marriages and keep the decorum of the human society. This is the way to save the marriages. Laws like 498a or DP never can do this, instead these laws destroy the culture and finally human being.

If one wants to marry for:
*ex - other means available
Child - lots of orphanages are out there, and recently surrogate mothers available http://www.surromomsonline.com/ (This day is not far, it will come soon in inidia)
Supporting companion - find good friends and go to religious places 'sathsang'
Family - take care of your aged parents and help poor.
Then why do marriage? - read from the top.

Anonymous said...

Good Start in India - 498a Revolution
சில்லரை விற்பனையில் விந்தணு: மும்பையில் முதல் வங்கி
http://www.dinamalar.com//pothunewsdetail.asp?print=1&News_id=6673&cls=row3&ncat=IN
மும்பை : இனி ஒருவர் 75 குழந்தைகளுக்கு கூட தந்தையாகலாம். அதன்மூலம், கணிசமாக பணம் சம்பாதிக்கலாம். இந்தியர்களின் ஆண்மை தன்மை மற்றும் வீரியம் இனி, கவர்ச்சிகரமான வர்த்தகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விந்தணுக்களை சில்லரையில் விற்பனை செய்யும், விந்தணு வங்கி மும்பையில் துவக்கப்படுகிறது. டென்மார்க்கை சேர்ந்த விந்தணு வங்கியான, "கிரையோஸ் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம், ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் விந்தணு வங்கிகளை அமைத்து, விந்தணுக்களை சில்லரையில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் மும்பையிலும் தங்களின் விந்தணு வங்கியை விரைவில் துவக்க உள்ளது.

குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு விந்தணுக்களை சப்ளை செய்ய உள்ளது. இருந்தாலும், இந்த வங்கி நேரடியாக விந்தணு விற்பனையில் ஈடுபடாது. கிளினிக்குகள் மற்றும் டாக்டர்கள் மூலமாக மட்டுமே ஈடுபடும். விந்தணு வங்கிகள் மற்றும் "அசிஸ்டட் ரீபுரடக்டிவ் டெக்னிக்' என அழைக்கப்படும் ஏ.ஆர்.டி., கிளினிக்குகளை முறைப்படுத்த இந்தியாவில் சட்டம் எதுவும் இல்லையென்றாலும், விரைவில் இதுதொடர்பான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விந்தணு வங்கி துவக்குவது தொடர்பாக, "கிரையோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓலே ஸ்கவ் கூறியதாவது: இந்தியாவில் ஒரு நபர் 90 நாட்களில் 10 முறை விந்தணு சாம்பிள்களை வழங்க முடியும். இவற்றின் மூலம் 75 பேரை கர்ப்பம் அடைய செய்ய முடியும். விந்தணுக்களை வழங்குவோருக்கு அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில், 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதன்மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களிலும், தேவையானவர்களுக்கு விந்தணுக்களை நாங்கள் சப்ளை செய்ய முடியும். விந்தணுக்களை வழங்க முன்வோருக்கு கல்வி மற்றும் பண வசதி அடிப்படையில் தடை போடுவது மற்றும் முன்னுரிமை வழங்குவது போன்றவை எல்லாம் நடைபெறாது. இந்திய வம்சாவளியினரின் விந்தணுக்களுக்கு உலக அளவில் அதிக அளவில் தேவை இருக்கலாம் என நம்புகிறோம். இவ்வாறு ஓலே ஸ்கவ் கூறினார்.

Anonymous said...

வாடகை தாய்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரிப்பு
http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=6701&cls=row4&ncat=IN
செப்டம்பர் 25,2008,00:00 IST


மும்பை : இந்தியாவில் வாடகை தாயாக இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2006ம் ஆண்டில், 290 பெண்கள் வாடகைத் தாயாக இருந்து மற்ற தம்பதிக்கு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். கடந்த 2005ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 158 ஆகவும், 2004ம் ஆண்டில் 50 ஆகவும் இருந்தது. மொத்தம் 116 குழந்தை பிறப்பு மையங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுதொடர்பான ஆய்வை, இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோய்கள் மருத்துவக்கலை சங்க சம்மேளனம் உட்பட சில அமைப்புகள் மேற்கொண்டன. அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர்கள் மேலும் கூறியதாவது: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் மற்ற வெளிநாட்டவர்களும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இந்தியா வருவது அதிகரித்துள்ளது. வாடகைத் தாய் முறையை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், அவற்றை முறைப்படுத்தவும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான சட்டங் களை கொண்டுவர வேண்டியது அவசியம். வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 2006ம் ஆண்டில் 110 பேர் வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் வாடகைத் தாயாக இருப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.