ஒரு முஸ்லிம் அன்பர் படும் பாடு!

முஸ்லிம்கள் பென்களை அடிமைப் படுத்துவதாக ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. அது எவ்வளவு பொய் என்பதை சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்!

-------------------------

மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி விவாகரத்து மற்றும் 15 லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் ஆம்பர்பேட் ஓமர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப் குரோஷி. இவரது மகன் காலித் குரோஷி (33). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில் கூறியிருப்பதாவது:-


நான் துபாயில் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனக்கும் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த நிகாத் சுல்தானா என்பவருக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஐதராபாத்தில் வசித்து வந்தோம். இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வாரங்கள் தங்குவதற்காக சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தேன். அங்கு கடந்த 15ம் தேதி இரவு பெண் போலீசார் வந்தனர். என்னையும் எனது பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சென்ற பிறகு தான் என் மனைவி கொடுத்த புகாரின்பேரில் தான் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிந்தது. அப்புகாரில் என் குடும்பத்தினர் மீது வரதட்சணை உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். அப்புகார் மனு மீது இன்ஸ்பெக்டர் கல்யாணி விசாரித்தார். இஸ்லாம் வழக்கப்படி விவாகரத்து செய்வதற்காக, மூன்று முறை சொல்லும் "தலாக்" என்பதை சொல்லச் சொல்லி போலீசார் என்னை வற்புறுத்தினர். என்னிடம் இருந்து ரூ.15 லட்சம் காசோலைகளாக பெற்றுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு காலித் குரோஷி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். அம்மனு திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தி: "தினமலர்"