பெருகிவரும் விவாகரத்துக்கள்

தினமலர் செய்தி:

*ஒத்துவரலையா வெட்டி விடு; அடுத்த கல்யாணம் பண்ணிக்கோ! *

* முதலிடத்துக்கு முந்துகிறது சென்னை *

"திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால், விவாகரத்து பெறுங்கள்; மீண்டும் திருமணம் செய்யுங்கள்" - இது தான் இந்தியாவின் புதிய திருமண மந்திரம். அந்த அளவுக்கு விவாகரத்து வழக்குகளும் அதிகரித்துள்ளன. விவாகரத்து பெறுபவர்கள் மறுமணம் புரிய முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

"விவாகரத்து" என்பது கடந்த காலங்களில் ஒரு சாபக்கேடாக இருந்து வந்தது. தற்போது, அந்த நிலை மாறி விட்டது. எனவே, விவாகரத்து பெற்றவர்களுக்காக, "செகண்ட்ஷாதி.காம்" என்ற இணைய தள முகவரி துவக்கப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. துவக்கப்பட்ட மூன்று மாதங்களில் 10 ஆயிரம் பேர், தங்கள் விவரங்களை இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து இரண்டாவது திருமணத்துக்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். மாதத்துக்கு ஐந்தாயிரம் பேர் என்ற அளவில் இந்த இணைய தள முகவரியில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு குறித்து இந்த இணைய தள முகவரி ஒரு ஆய்வை நடத்தியது. 1990ம் ஆண்டுகளில் டில்லியில் ஆண்டுக்கு ஆயிரம் விவாகரத்து வழக்குகள் என்ற நிலை காணப்பட்டது. தற்போது, இது ஆண்டுக்கு ஒன்பதாயிரம் வழக்குகள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே போல, சென்னை மற்றும் கோல்கட்டா நகரங்களில் இது 200 சதவீதமாக அதிகரித்துள்ளது. மறுமணத்துக்காக, "செகண்ட்ஷாதி.காம்" இணைய தள முகவரியில் பதிவு செய்துள்ளவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள். கடந்த காலங்களை போல அல்லாது மறுமணம் செய்வதில் இருந்த தயக்கம் பெண்களிடம் நீங்கி வருகிறது என்பதே இதன் உட்பொருளாக உள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியர் அருணா புரூடா கூறுகையில், "சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக பெண்கள் வலிமை பெற்று வருகின்றனர். விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். பெண்களின் நிலை மாறி விட்டது. உயர் கல்வி பெறும் வசதியை பெண்கள் பெற்றுள்ளனர். வெளியில் செல்வதும் சொந்த காலில் நிற்பதும் தற்போது சாத்தியமாகியுள்ளது. ஆண்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு தற்போது இல்லை. இதன் காரணமாக ஏற்படும் மோதல்களே விவாகரத்துக்கு காரணமாகி விடுகிறது" என்றார். இணைய தள முகவரியில் பதிவு செய்துள்ளவர்களில் 80 சதவீதம் பேர் 30 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 30 சதவீதம் பேர் திருமணமாகாமல் முதிர்ந்த வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள். விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதால், விவாகரத்துக்கு ஏற்றவாறு சட்டம் வளைந்து கொடுக்க தொடங்கி விட்டதா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து சுப்ரீம் கோர்ட் வக்கீல் அஜய் குப்தா கூறுகையில், ""பழைய சட்டம் தான் இன்னும் இருக்கிறது. மனம் ஒட்டாத கணவன், மனைவியை தொடர்ந்து சேர்த்து வைப்பதில் எந்த லாபமும் இல்லை என்பதை கோர்ட் புரிந்து கொண்டுள்ளது. எனவே, ஆறு மாத கவுன்சிலிங் காலத்திலேயே விவாகரத்து வழக்குகள் இப்போது முடிவுக்கு வந்து விடுகின்றன. கணவன், மனைவி இரண்டு பேரும் ஒப்புதல் அளித்தால், 15 நாட்களில் கூட விவாகரத்து வழங்கப்பட்டு விடுகிறது,'' என்றார்.

இணைய தள முகவரியில் பதிவு செய்துள்ள சந்தீப் குமார் பாட்டியா என்பவர் கூறுகையில், ""எனக்கு 35 வயதாகிறது. விவாகரத்து பெற்றவன். வாழ்க்கையில் எனது உணர்வுகளை யாராவது புரிந்து கொள்ள மாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உறவுகள் தோல்வி அடைந்தால் ஏற்படும் மனவேதனையை நரகத்துக்கு செல்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு அது மிகவும் கொடுமையானது,'' என்றார்.

====================

சில தாவரங்களில் உள்ளதுபோல் "தன் மகரந்தச் சேர்க்கை" சாத்தியமானால் இந்தப் பெண்கள் "ஆண்களே தேவையில்லை" என்று அறைகூவல் விடுவார்கள் போலிருக்கிறது!

அல்லது "என்ஞாய் பண்ணுவோம்; ஆனால் குழந்தை பெறமாட்டோம்" என்றும் சொல்லலாம்!

3 மறுமொழிகள்:

')) said...

குழந்தை இல்லாத தம்பதிகள் விவாகரத்து செய்துகொண்டால் அது அவர்கள் பிரச்சனை,அதுவே குழந்தை இருந்தால்?
குழந்தை வாழ்வும் பிரச்சனையாகும்.

')) said...

உண்மைதான் வடுவூர் குமார்.

ஆனால் அன்புக்கு இலக்கணமாக நாம் கருதும் தாய்க்குலங்கள் இப்போதெல்லாம் தன் குழந்தைகளின் உணர்வுகள், எதிர்காலம் எதனையும் கருத்தில் கொள்ளாமல், தான், தன் சுகம், தன் அகங்காரம் என்கிற போக்கில் விவாகரத்துக்கும், கணவன் மற்றும் குடும்பத்தார் மீது பொய் வழக்கை ஏவிவிட்டு துன்புறுத்துவது போன்ற எதிர்மறைச் செயல்களில்தான் முனைப்பாக இருக்கின்றனரே!

நம் சமுதாயம் எங்கே செல்கிறது! :(

')) said...

தயவு செய்து இந்த பக்கத்தை பார்க்கவும்