அலறும் ஆண்கள்!

"ராணி" வார இதழ் (9-9-2007 தேதியிட்டது) 6-ம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்திக் கட்டுரை இது:-

------------------------------


"ஆபத்தான ஆயுதம்"

வரதட்சிணை கொடுமையை ஒழிப்பதற்காக 23 ஆண்டுகளுக்கு முன் இந்திய தண்டனைச் சட்டம் '498-ஏ' கொண்டுவரப்பட்டது. ஒருமுறை இந்தச் சட்டம் பற்றி உச்ச நீதிமன்றம், "இது சட்டபூர்வ பயங்கரவாதம்", "கொலையாளிகளின் கை ஆயுதம்" என கடுமையாக விமர்சித்தது.

வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும், மனைவியைச் சித்திரவதை செய்ததாகவும் ஆண்கள் கைது செய்யப்படுவது வாடிக்கை. ஆனால், இதற்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மை சில நேரங்களில் வேறுமாதியாக இருக்கிறது.

ஆமாம்! வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், சில அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறன.

மனைவிமார்களால் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் அத்தகைய ஆண்கள் சிலரைச் சந்தித்தோம்.

கண்ணீர்

கோவையைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். அவர் தாரை தாரையாக வழியும் கண்ணீருடன் பேசினார்:

"நான் சவூதி அரேபியாவில் வேலை பார்த்தபோது கல்யாணத்திற்குப் பெண் பார்த்திருப்பதாக ஊருக்கு அழைத்தனர். கல்யாணக் கனவுகளோடு வந்தேன்.

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தேன். ஆனால், முதலிரவே எனக்கு வேதனை இரவாக அமைந்துவிட்டது" என்றவர், சிறு அமைதிக்குப் பின் - '20 ஆயிரம் ரூபாயும், காரும் தந்தால்தான் என்னைத் தொட அனுமதிப்பேன்' என்றாள் என் மனைவி. எனக்கு பயங்கர அதிர்ச்சி!

'நாட்கள் போனால் மனம் மாறிவிடுவாள்' என நினைத்து மீண்டும் சவுதிக்குப் போய்விட்டேன். ஆனாலும் அவள் மாறவில்லை. ஊருக்கு வந்ததும், இஸ்லாமிய முறைப்படி அவளைப் பிரிந்தேன். அவளோ போலீஸில் புகார் செய்தாள்.

போலிசார் என்னைக் கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். வெளியில் வந்ததும், எங்கள் குடும்ப நிலத்தை எழுதித் தரும்படி கேட்டாள். நான் நிம்மதி இழந்து தற்கொலைக்கு முயன்றேன். சாவுகூட என்னைக் கைவிட்டுவிட்டது" என்றார் அவர்.

தண்டனை

அடுத்தவர் எதிராஜ்:-

"எனக்கு ஒரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது என் அம்மா, 'உங்களால் முடிந்த அளவுக்கு வரதட்சிணை செய்யுங்கள்' என்று சாதரணமாகச் சொன்னார். உடனே வரதட்சிணை கேட்டதாக புகார் செய்தனர்.

நீதிமன்றம் எனக்கும், என் வயதான பெற்றோருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. நான் வாழ்க்கையை இழந்துவிட்டேன். இதற்குக் காரணம் சட்டம்தான்", என்கிறார் அவர்.

உள்நோக்கம்

இந்திய குடும்பப் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாளர் சுரேஷ் கூறும்போது, "பெரும்பாலான வரதட்சணை வழக்குகள் பொய்யானவை; பழிவாங்கும் நோக்கத்தோடும், பணம் பறிக்கும் நோக்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

வரதட்சணை புகாரை எந்த விசாரணையும் செய்யாமல், இந்திய தண்டனைச் சட்டம் '498-ஏ' பிரிவில் வழக்குப் பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் தவறு செய்யாத அப்பாவி ஆண்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். வயதான தாயும், சகோதரியும் கூட கைது செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்.

வக்கீல் கருத்து:

வழக்கறிஞர் அருள் நிலவனிடம் கேட்டபோது, "பெண்களைப் பாதுகாப்பதற்குத்தான் இச்சட்டம் (498-ஏ) கொண்டுவரப்பட்டது. திருமணமான பெண்ணை மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ காயப்படுத்துவது கொடுமைப்படுத்துதல் ஆகும் என்றும், இது தண்டனைக்குறிய குற்றம் எனவும் இச்சட்டம் கருதுகிறது.

இதன்படி, பெண்ணைக் கொடுமைப் படுத்தும் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். இந்தச் சட்டம் பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது.

பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், புகார் கொடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டத்தில் வழியில்லை!

எனவே, பொய்ப் புகார் கொடுத்திருப்பது நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யவேண்டும். அப்படிச் செய்தாலே பொய் வழக்குகள் குறைந்துவிடும்.

அதுபோல், கணவர் மற்றும் அவருடைய குடுமப்த்தினரை மிரட்டுவதற்காக புகார் கொடுத்துவிட்டு, மீண்டும் கணவரோடு சேர்ந்துவிடலாம் என்று நினைத்தால், அதற்கு இதில் வழியில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் புகார் கொடுத்தால், அதை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து பெற முடியும்" என்றார் அவர்.

4 மறுமொழிகள்:

Anonymous said...

நடிகர் பிரசாந்தின் மனைவியும் இதே போல் ஒரு வரதட்சனை கொடுமை புகார் ஒன்றை பொலிஸில் பதிவு செய்துள்ளார்.

தான் முன்பே வேறொருவரை திருமணம் செய்தது தெரிய வந்ததும் பிரசாந்திற்க்கு இப்படி ஒரு புகாரை பதிவு செய்துள்ளார்.

')) said...

பெண்களை நம்பாதே,
கண்களே
பெண்களை நம்பாதே!

ஆழம் தெரியாம
காலை விட்டால்
அதோ கதிதான்!

இதுக்குதான், பெரியவங்க "ஆக்க தெரிஞ்சவளுக்கு அழிக்கவும் தெரியும்"னு சொல்லிட்டு போனாங்களா?

நம்பதான் கண்ணுல வெளக்கெண்ணைய விட்டுனு கவனமா நம்மையே கவனிச்சிக்கனும். ஏமாருகிறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்தற கும்பலு இருக்கத்தான செய்யும்!

என்ன எழவோ போங்க!

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

')) said...

நன்றி நண்பர்களே!

1. பிரசாந்த் விவகாரம் பற்றி ஒரு முழு நீள இடுகை பதிவு செய்கிறேன், சீக்கிறமே. விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

2. மாசிலா அவர்கள் சொல்வது முழுவதும் சரி. ஆண்கள் மிக்க விழிப்புடன் இருந்து முடிவுகளை எடுப்பது நல்லது. கண்ணசைப்பிலும், கண்ணீரிலும் கரைந்து போனால் பின்பு அதே கண்கள் உமிழப்போகும் அனலுக்குப் பலியாவோம் என்பது திண்ணம்!

தயை கூர்ந்து உங்கள் பதிவிலும் இது போன்ற (தங்களுக்குத் தெரிய வந்துள்ள) விவரங்களை, செய்திகளை பதிவு செய்யும்படி கோருகிறேன். ஆண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு தோன்ற உதவியாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை நன்றி!

')) said...

i fear that feminism smashes the humanism

vera enna solrathu..