பெண்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கா?

தினமலரில் சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி இது:

சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜூடி. இவரது கணவர் மனோஜ் டேவிட். இவர்களது மகன் ஜோஸ்வா மனோஜ்(8), மகள் ஷெரில் மனோஜ்(4). கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். மனோஜ் டேவிட் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது சகோதரி, பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் உள்ள "ஸ்கொயர் அப்பார்ட்மென்ட்"டில் வசித்து வருகிறார். சகோதரியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் மனோஜ் டேவிட் வசித்து வருகிறார். ஒன்றரை ஆண்டாக குழந்தைகள் இருவரும் பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

சென்னையில் வசித்து வரும் ஜூடி திடீரென்று ஒருநாள், "எனது குழந்தைகள் இருவரையும் என் கணவர் பெங்களூரு அழைத்து சென்று விட்டார். கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர்" என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். பெங்களூரு சென்ற சென்னை போலீசார், "நாங்கள் சென்னையில் இருந்து வருகிறோம். குழந்தைகளை கட்டாயப்படுத்தி பெங்களூரில் தங்க வைத்திருப்பதாக, இவர்களது தாய் சென்னையில் புகார் கொடுத்தார்" என்று கூறி, குழந்தைகள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர். உண்மையான நிலை என்ன என்று ஏதும் விசாரணை நடத்தவில்லை.

இதன் பின்னர் சென்னை வந்த மனோஜ் டேவிட், போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அளித்த புகாரில்,"எனது மனைவியின் தந்தை சேவியர் முத்து பாப்பா தமிழக அரசில் இணை செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஈ.வெ.ரா., சம்பத் மாளிகையில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஆலோசகராக உள்ளார். எனது குழந்தைகளை பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. குழந்தைகள் யாரிடம் வளர வேண்டும் என்பதை கோர்ட் தான் முடிவு செய்ய முடியும். பெங்களூரு வந்த சென்னை போலீசார் எனது குழந்தைகளை மிரட்டி சென்னை தூக்கி வந்து விட்டனர். குழந்தைகளை பெங்களூரிலிருந்து மிரட்டி அழைத்து வந்த விவகாரத்தில் சேவியர் முத்து பாப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது. எனது குழந்தைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அண்ணாநகர் உதவி கமிஷனர் ராமதாசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து தெளிவாகப் புரிவது என்னவென்றால் "ஒரு பெண் என்ன சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஆண்கள் எல்லோரும் வில்லன்கள்" என்னும் நிலைப்பாட்டை நம் சமூகம் கண்ணை மூடிக்கொண்டு எடுத்துக் கொள்கிறது என்பதுதான்.

ஏன், பெண்கள் பொய்யே சொல்லமாட்டார்களா? அவர்கள் அனைவரும் உன்னத குணமுடையவர்களா? ஆண்கள் அனைவரும் கொடுமைக் காரர்களா?

சரித்திரத்தைப் பிரட்டிப் பாருங்கள் எத்துணை சாம்ராஜ்யங்கள் பெண்களின் சாகசங்களின் காரணமாக மண்ணோடு மண்ணாகிப் போயினவென்று! இரரமாணயக் கதையின் மையக் கருவே ஒரு பெண்ணின் தான்தோன்றித்தனமான சுயநலம்தானே!

4 மறுமொழிகள்:

Anonymous said...

You are right! unfortunately the present legal system supports only women. In the process, many men are being harassed for no fault of them. I do not say that all men are innocent. But many are.

')) said...

எண்ணித் துணிக கருமம். துணிந்தபின் என்னுவம் என்பது இழுக்கு.

இந்த குறள் கல்யாணம் செய்ய போகிற எல்லா இளைஞர்களுக்கும் இப்போதைக்கு பொருந்தும்.

மற்றபடி இன்றைய சட்ட திட்டங்களும் பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது.

இன்றைய இளைய சமுதாயத்திடமும் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இருப்பதில்லை.

திருமணத்திற்கு முன் Pre-Marraiage councelling செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.

மங்களுர் சிவா

')) said...

நன்றி, மங்களூர் சிவா மற்றும் பெயரிடாதவர்.

மேன்மேலும் மேற்கத்திய கலாசார நிலைக்கு செல்லும்பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!

Anonymous said...

நல்ல பதிவுகள். தெளிவான நடை. மேர்கத்திய கலாச்சார ஊடுருவலை வெளியாக்கும் பின்மொழிகளுக்கும் சபாஷ்

தமிழில் இத்தகைய பதிவுகள் தேவை

வளர்க உங்கள் பணி

சென்னை உ நீதி மன்றில் மட்டும் 300க்கும் மேர்பட்ட கேஸ்கள் போன வருடம் பதிவாகி இருந்தன

நாடேங்கும் ஆயிரக்கணக்கில்....

இவ்வருடமும் ஜாமீன் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன

டில்லியில் ஜாமீன் கேட்டு வரும் விண்ணப்பங்களில் பெரும் பகுதி 498ஆ வழக்குகளே

அன்புடன்
விநாயக்