பொய் வரதட்சிணை வழக்குகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா

"ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்ப ஆளையே ...." என்று ஒரு செலவாடை உண்டு. அது போலவே சாமானிய மனிதர்களை விழுங்கிகொண்டிருக்கும் பொய் டவுரி வழக்குகள் இப்போது பிரபலங்களையும் மந்திரிகளையும் தாக்கத் தொடங்கியிருக்கின்றன.

இத்தகைய வழக்குகளின் பின்னணி:-

பெண்களை "டவுரி" கொடுமையிலிருந்து காக்க சுமார் 20 ... 25 ஆண்டுகள் முன் உருவாக்கப்பட்ட சில சட்டங்கள் இன்று புதுமைப் பெண்கள் என்ற முக்காடில் ஒளிந்திருக்கும் சில விஷமிப்பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. "..உன் மீதும், உன் வயோதிகத் தாய் மீதும், உன் வீட்டில் நல்ல வேலையில் இருப்போர் மீதும் போலீஸில் புகார் செய்வேன்.." என்று சில மனைவிகள் கணவன்மார்களை மிரட்டுவது சகஜமாகிவிட்டது. பழி தீர்க்க அலையும் சில பெண்களும், தவரான பாலியல் குற்றங்களில் பிடிபட்ட பெண்களும், முன்னமே திருமணம் ஆகி அதை மறைத்து மீண்டு மணமுடிக்கும் சில பெண்களும், குட்டு வெளிப்பட்டால், தான் தப்பித்துக்கொள்ளவும், ஆண்கள் மீது பழிபோடவும், பொய் டவுரி வழக்குகளை தாக்கல் செய்துவிடுகின்றனர். புதுமைப்பெண் என்ற பெயரில் பலர் இந்த மிரட்டலில் பணம் கரக்கின்றனர். பணம் கொடுக்க முன் வராத ஆண்கள், அப்பாவிகளாய் இருப்பவர் ஆகியோர் கைது செய்ப்பட்டு, அவர்களும் அவர்களது வீட்டாரும் அவமானத்துக்குள்ளாகுகின்றனர். இந்தப் போக்கை உச்ச நீதி மன்றமே, "legal terrorism", அதாவது "சட்டத்த்தை வைத்தாடும் பயங்கரவாதம்" என்று கூறியிருக்கிறது - case of Sushil Kumr Sharma Vs Union of India - 2005.

பாதிக்கப்பட்ட பிரபலங்கள்:-

  • நடிகர் திரு பிரசாந்த் மீது டவுரி வழக்கு தொடர்ந்த அவரது மனைவி (என்று ஆஜரான) கிருகலக்ஷ்மிக்கு முன்னமே ஒரு திருமணம் ஆகியிருந்த குட்டு வெளிப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முன் மணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொண்ட ஆதாரங்களை பிரசாந்த் இப்போது நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் டவுரி வழக்கு தொடரும் முன் பிரசாந்த் கிருகலக்ஷ்மியுடன் வாழத்தயார் என்று நீதிமன்றத்தில் பெட்டிஷன் கொடுத்திருந்தார் (இப்படியும் சில அப்பாவிகள்!)!. அதன் பின்பும் கிருகலஷ்மி, பிரசாந்தின் தாய் தந்தை என்று முதியவர்களையும் சேர்த்து டவுரி வழக்கு தொடுத்தார். எல்லோரையும் கைது செய்யும் பொருட்டு போடப்பட்ட இந்த திட்டம் இப்போது அம்பலமாகியுள்ளது!

  • அர்ஜுன் சிங் இந்த வரிசையில் சமீபத்தில் அகப்பட்டவர் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் சிங்கின் பேரனின் மனைவி ப்ரியங்கா, அர்ஜுன் சிங் மீது டவுரி வழக்குத் தொடுத்து இருக்கிறார். இது பொய்யா மெய்யா என்று நிரூபிக்கப் படவில்லை. இந்த வழக்கு டில்லியில் பெரும் பரபரப்பை ஏர்ப்படுத்தியுள்ளது. அர்ஜுன் சிங் பென்சு கார் ஆகியவை கேட்டு தன்னை வதைப்பதாய் குற்றம் சாட்டியுள்ளார் பேரனின் மனைவி ப்ரியங்கா. தனக்கும் இந்த திருமணத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி தப்பிக்கப்பார்கிறார் மந்திரி !! அர்ஜுன் சிங் ஒரு மந்திரி என்பதாலோ என்னவோ, அவர் இன்னமும் கைது செய்ப்பட்டவில்லை. சாதாரண மனிதராக இருந்தால் "இந்தா, சூ சூ" என்பதற்குள் கைதாகி விடுவார்கள். அத்தகைய விஷக் கொடுக்கு இந்தச் சட்டம்!


அர்ஜுன் சிங் பல ஆண்டுகள் மத்திய பிரதேச மாநிலத்தின் முதன் மந்திரியாக இருந்தவர். அதன் பின் கவர்னராகவும், மத்திய மந்திரி சபையில் முக்கியப் பொறுப்புகளில் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நீண்ட நெடுக பணியாற்றுபவர். அரசியலில் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருந்த வருக்கு ஒரு பெண்ணிடமிருந்து வரதட்சிணை வாங்கவேண்டிய தேவை என்ன? இதிலிருந்தே தெரியவில்லையா, அந்தப் பெண் தான் பிரபலமாவதற்காகவும், பெரிய மனிதர்களை இதுபோல் பயமுறுத்தினால் கேட்டதை செய்வார்கள் என்பதாலும் இதுபோன்ற வழக்குகளை தொடுத்திருக்கிறார் என்பது?

நாடே கண்டு தவிக்கும் இந்த பொய் டவுரி வழக்குகள் எங்கு போய் முடியும்?

இத்தகைய வன்கொடுமைச் சட்டத்தினால் தீண்டப்பட்ட கணவர்கள், மர்றும் அவர்தம் குடும்பத்தினர்களின் கதி என்ன?

இறைவனே முடிவுசெய்யவேண்டும்!!