சென்னை : வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக நிறைமாத கர்ப்பிணியை 150 கி.மீ., துஷரம் அலைய வைத்ததாக கரூர் பெண் போலீசார் மீது மாநில மனித உரிமை கமிஷனில் புகார் கூறப்பட்டுள்ளது.
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ராதா என்பவர் சார்பில் வக்கீல்கள் எஸ்.ஜெயக்குமார், வி.எஸ்.சுந்தர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனது சகோதரருக்கும் ஜான்சி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 2ம் தேதி
சகோதரருடன் தகராறு செய்து விட்டு, ஜான்சி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
எங்கள் குடும்பம் மீது கரூர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தனர். சேலம்
ஆத்துஷரில் கணவனுடன் வசித்து வந்த எனது சகோதரி சரஸ்வதி நிறைமாத கர்ப்பிணி. அவரை
வலுக்கட்டாயமாக கரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து சட்டவிரோத காவலில்
வைத்தனர். அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் வாந்தி எடுத்து மயங்கி
விழுந்தார். கர்ப்பிணியாக இருந்த போதிலும் கருணை காட்டாமல் மனிதாபிமானமற்ற முறையில்
போலீசார் நடந்து கொண்டனர்.இதையடுத்து வக்கீல்கள் எஸ்.ஜெயக்குமார், வி.எஸ்.சுந்தர்
ஆகியோரை தொடர்பு கொண்டேன். அவர்கள் போலீஸ் உயர் அதிகாரி ராஜாவிடம் பேசினர். அவரது
தலையீட்டால் எனது சகோதரி விடுவிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். எனது சகோதரியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கரூர்
இன்ஸ்பெக்டர் ஷரீனா, கான்ஸ்டபிள்கள் பானுமதி, பரிமளம் உட்பட போலீசார் சித்ரவதை
செய்துள்ளனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
--------------------
செய்தி : தினமலர்
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்தைத் தெரிவிக்க