பெருகிவரும் விவாக ரத்துக்கான காரணிகள் - பெண் வக்கீல்களின் கருத்து

தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் ஆண்களும், பெண்களும் சாதனை படைக்கும் நிலையில் விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.


  • மாறி வரும் கலாசார சூழல், உயர் படிப்பு, தேவைக்கு அதிகமான சம்பளம் போன்றவைகளால் திருமணமான சில மாதங்களிலேயே பிரிய துடிக்கும் போக்கு, தம்பதிகளிடையே அதிகரித்து வருகிறது. பண்பாடு, கலாசாரம் மிக்க மதுரையிலும் விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை குடும்ப நல கோர்ட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 600 வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 1600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதவிர சப் கோர்ட், செஷன்ஸ் கோர்ட்டுகளில் குடும்ப நலம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. குடும்ப நல கோர்ட்டில் மட்டும் சராசரியாக ஒரு மாதத்திற்கு 60க்கு குறையாமல் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல், ஜீவனாம்சம், குழந்தை உரிமை கோரும் வழக்குகள் தாக்கலாகின்றன.

  • நடுத்தர, ஏழை வர்க்கத்தினரை விட படித்த, நன்கு வசதியுடைய குடும்பங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவில் விவாகரத்து கோருகின்றனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்களாக இருப்பதும் வேதனை அளிப்பதாகும். இன்றைய காலங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பாதிக்கும் நிலையுள்ளது.

  • சில இடங்களில் கணவனை விட மனைவி அதிகம் படித்தவராக, சம்பாதிப்பவராக இருக்கின்றனர். திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தாலும் கூட சுதந்திரமாக இருக்க வேண்டும் என கணவனும், மனைவியும் விரும்புகின்றனர். தேவைக்கு அதிகமாக பணம் சேரும் போது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முயலும் போது ஈகோ பிரச்னை தலைதுஷக்குகிறது. நாளடைவில் அவர்களிடையே இடைவெளியையும் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க இரண்டு பேரும் விட்டு கொடுத்து சென்றால் பிரச்னை இருக்காது.

  • பெயர் சொல்ல விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், "அதிக படிப்பு, கை நிறைய சம்பளம் ஆகியவற்றை எதிர்பார்த்து திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. குடும்ப நடத்த பணம் போதும், மகள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என பெற்றோர் கருதுவதே இறுதியில் திருமண முறிவுகளுக்கு காரணங்களாகி விடுகிறது. குடும்பம் என்றால் என்ன? தாம்பத்ய வாழ்க்கையின் தத்துவம் என்ன? நல்லது, கெட்டது எது? என்பதை புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்த செல்லும் போது பிரச்னை ஏற்படுகிறது. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு எப்படி அவசியமோ அதுபோல செக்ஸ் கல்வியும் அவசியம். குறிப்பிட்ட வயதானதும் செக்ஸ் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


  • வக்கீல் ஜெயா இந்திரா பட்டேல்:

    கணவனுக்கும், மனைவிக்கும் ஏற்படும் ஈகோ பிரச்னை தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன. இன்று தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் வளர்ச்சி எதிரொலியாக இளம் ஆண்களும், பெண்களும் அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கும் நிலை உள்ளது. தேவைக்கும் அதிகமாக வருமானம் வரும் போது செலவழிக்கத் தெரியாமல் பணத்தை இறைக்கின்றனர். தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.




    நாளடைவில் குடும்பத் திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோர்ட்டுகளுக்கு வருகின்றனர். ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் விட்டு கொடுத்து பொறுமையாக போனால் எந்த பிரச்னையும் வராது. விட்டு கொடுக்காத பட்சத்தில் பிரச்னை தான். சில வழக்குகளில் பிரிந்து போகயிருந்த கணவனும், மனைவியும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பினாலும் கூட அவர்களது பெற்றோர்களுக்கு உள்ள ஈகோ காரணமாக சேர்ந்து வாழ முடியாமல் போய் விடுகிறது.



  • குடும்ப நல கோர்ட் ஆலோசகர் சித்ரா:

    திருமணமான தம்பதியரிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கணவனும், மனைவியும் தனித்தனி நபர்கள். தன்னை போல இருக்க வேண்டும். தன்னை போல மாற வேண்டும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர்.. அதற்கு மாறாக அமையும் போது பிரச்னை ஏற்படுகிறது.. ஏதாவது ஒரு கருத்து வேறுபாடு ஏற்படும் போது யாராவது ஒருவர் அமைதியானால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மேலும் இன்றைய இளம் பெண்களும், ஆண்களும் நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகவுள்ளனர்.



    அவர்களுக்கு பெற்றோர் நல்லது கெட்டதை விளக்க வேண்டும். சிறு வயது திருமணம் அல்லது காலம் கடந்த திருமணம் போன்றவையும் திருமண முறிவுகளுக்கு காரணங்களாகிவிடுகிறது. மேலும், குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதிக் கும் நிலையில் பிரச்னை ஏற்படும் போது அவரவர் விருப்பத்திற்கு செயல்படுகின்றனர். வேறு நபர்களுடன் தொடர்பு வைத்து ஆறுதல் தேட முயற்சிக்கின்றனர். இவையும் விவாகரத்து அதிகரிப்பதற்கு காரணங்கள்.

  • நன்றி: தினமலர்.