போராட்டம்!

இந்திய பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையைக் காக்கும் மையத்தினர் (Save Indian Family Foundation) 23-02-2008 அன்று காலை சென்னை மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஒரு அமைதிப் போராட்டமும் மனிதச் சங்கிலியும் நிகழ்த்தினர். வரதட்சிணை சட்டத்தின் தவறான செயல்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். ஒரு பெண்மணி தன் சிறு குழந்தையையும் தூக்கி வந்து நின்றது, அவர் எவ்வளவு தூரம் இந்த சட்ட துன்புருத்தலால் பாதிக்கப் பட்டிருந்தார் எனப்தைக் காட்டியது!

இந்த போராட்டத்தில் வினியோகிக்கப் பட்ட கையேட்டில் கண்டிருந்தவை:-

கோரிக்கைகள்
  1. இருபாலரிடையே சமநிலை வேண்டும்
  2. பெண்களுக்குள்ளது போல், ஆண்களின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அமைச்சரவையில் தனித் துறை வேண்டும் (Men’s Welfare Department)
  3. சட்டத்தின் செயல்பாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான அணுகுமுறை வேண்டும்
  4. பல சட்டங்களினூடே “கணவன்”, “மனைவி” என்று குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம் “துணைவர்” (spouse) என்னும் சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.
  5. தவறு செய்பவர்கள் இருவரில் யாராக இருந்தாலும் சமமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் (Equal Punishment)
  6. பெண்களுக்கும் தங்கள் பிறந்த வீட்டில் சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்
=============================

சட்ட தீர்திருத்தங்கள் வேண்டும்

  1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(e) பிரிவு தற்போது பெண்களின் கண்ணியத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்கிறது. பெண்களுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு ஆண்களுக்கும் சேர்த்து இத்தகைய பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் மாற்றப்படவேண்டும் (Article 51A(e) of the Constitution of India is to be amended to include men also).
  2. “கொடுமை” என்பது சட்டப்படி எதைக் குறிப்பிடுவது என்பதை தற்போது போலீசும், புகாரளிக்கும் மனைவியும்தான் முடிவு செய்கிறார்கள். நியாயப்படி அதனை உச்ச நீதிமன்றமோ அல்லது சட்டசபை/பாராளுமன்றமோதான் தீர்மானிக்கவேண்டும். அதுவரை 498அ பிரிவின் செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்
  3. பாராளுமன்ற விளக்கங்கள் சட்டமாகாது. அத்தகைய விளக்கங்கள் தெளிவில்லாமலும், குழப்பங்கள் நிறைந்தும் இருப்பதால் அவை உச்ச நீதிமன்றத்தால் சட்டப்படி செல்லத்தக்கவையல்ல என்று தீர்வு சொல்லப்படவேண்டும்.
  4. வரதட்சிணை ஒழிப்புச் சட்டமும் கொடுங்கோன்மையான ‘498அ’ பிரிவும் ஸிவில் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவற்றின் மேல் நடவடிக்கை “Civil Procedure Code”-படி அமைதல் வேண்டும்.
  5. சட்டப்பிரிவு ‘498அ’ உடனடி ஜாமீன் பெறத்தக்கதாகவும் (bailable), நேரடிக் குற்றமாகக் கருதப்படாததாகவும் (Non-Cognizable) மாற்றப்பட வேண்டும்.
  6. இச்சட்டத்தின்படியான போலீஸ் விசாரணைகள் நியாயமாகவும், விரைவாகவும் நடைபெற வேண்டும்.
  7. மல்லிமத் கமிஷனின் பரிந்துரைப்படி ஆண், பெண் யாராக இருந்தாலும் ஒழுக்கமற்ற கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
  8. அரசுப் பணியாளர்கள் போலிஸினால் கைது செய்யப்பட்டால் தாற்காலிக வேலைநீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. இதில் விதிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

விவாகரத்துச் சட்டங்களை எளிதாக்குக

  • மீள்பெற இயலாத வகையில் திருமண பந்தம் முறிந்து விட்டால் உடனடியாக விவாகரத்து வழங்கப்பட வேண்டும்.
  • ‘498அ’ பிரிவின்கீழ் மனைவி புகார் கொடுத்து (குற்றச்சாட்டுக்கள் உண்மையோ, பொய்யோ) அது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டால் (FIR), சட்டப்படி திருமணம் ரத்து செய்யப்பட்டதாகக் கொண்டு அதற்கான ஆவணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய குற்றச்சாட்டு எழுந்தபின் சேர்ந்து வாழ்தல் என்பது ஒவ்வாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்த உண்மை.
  • குழந்தைகளின் கண்காணிப்பு உரிமம் (custody), கணவன், மனைவி இருவருக்கும் சமமான நிலையில் வழங்கப்பட வேண்டும். அதேபோல் அந்தக் குழந்தைக்கான சிலவுகளும் இருவராலும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தற்காலத்தில் இருபாலரும் சம அளவில் பொருளீட்டும் நிலை இருப்பதால் (பல இடங்களில் பெண் ஆணைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருக்கிறது), அச்செலவு முழுவதும் கணவனுடைய சுமைதான் என்னும் நியதி மாற்றப்படுதல் அவசியம்.
  • சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடும்ப வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்ட ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • நஷ்ட ஈடு மற்றும் பேணுதலுக்கான துகை சரியான அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். மேலும் பட்டப் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெற்றுள்ள மனைவிக்கு கணவன் ஏதும் பராமரிப்புத் துகை கொடுக்கவேண்டாம் என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.
  • குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகளும் வக்கீல்களும் “திருமணத்தைக் காப்பாற்றுகிறோம்” என்னும் தவறான அனுமானத்தில், அத்திருமண பிணைப்பைத் தொடர இஷ்டமில்லாத தம்பதிகளை சேர்ந்து வாழும்படி வற்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

முதியோர்களை துன்புறுத்துதலை நிறுத்துக

  • 498அ சட்டப்பிரிவின் கீழ் முதியோர்களை கைது செய்தல் சட்ட பூர்வமாக நிறுத்தப்பட வேண்டும்.
  • முதியோர்கள் தங்கள் மகன், மகளுடன் வசிக்கும்போது, அவர்களின் திருமணத்திற்குப்பின் வெளியே துரத்தப்படுவதைத் தடுக்க, அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • மருமகள் தன் கணவனைப்போல் கணவனின் பெற்றோரையும் பேணுவது அவர்தம் கடமை என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.
  • பாட்டன்மாருக்கும் தம் பேரக்குழந்தைகளின் போஷிப்பு மற்றும் சென்று காணும் வசதி சட்டமாக்கப்பட வேண்டும்.
  • தனியாரால் நடத்தப்படும் முதியோர் காப்பகங்கள் நீக்கப்படவேண்டும். அவை வணிக முறையில் புற்றீசல் போல் தோன்றுவதால் திருமணம் ஆனவுடனேயே பெற்றோரை அங்கு அனுப்பி விடலாம் என்னும் எண்ண்ப் போக்கு மகன்/மருமகள்களுக்குத் தோன்றிவிடுகிறது.
=======================
மேலதிக விவரங்களும் புகைப்படங்களும் அடுத்த இடுகையில்!
இதுபோன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் உதவி பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-
99410 12958 / 98807 10551 (சென்னை)
நன்றி!

2 மறுமொழிகள்:

')) said...

Save Indian Family Foundation க்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

I apologise, but this variant does not approach me. Perhaps there are still variants?