பூஜாவின் தெய்வீகக் காதல்

முன்பு ஜெயகாந்தன் எழுதிய கதையொன்றில் இது போன்ற பதிவிரதை சொல்வாள், “அவன் பூட்டான்; இவன் வண்ட்டான்” என்று. அதுபோல் உள்ளாடை மாற்றுவதுபோன்று கணவனை மாற்றும் காரிகைகள் நிறைந்த உலகமடா இது. அவள் இருந்தும் கெடுப்பாள்; செத்தும் கெடுப்பாள்!

இந்த உன்னதக் காதல் கதையைப் படியுங்கள். அந்தக் கணவன் கதை ஒரு பரிதாபம். இந்தக் காதலன் கதை ஒரு கந்தல். வாழ்க பெண்ணியம். வளர்க பெண்கள் விடுதலை! வீழ்க ஆண்குலம்!

பூந்தமல்லி, ஏப்.19- 2009. காதலன் கை விட்டதால் துணை நடிகை பூஜா (தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.) தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.


சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஷேர்-ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுடைய மகள்தான் துணை நடிகை பூஜா (25).

இவருக்கும் திலீப் குமார் (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெயலட்சுமி (3) என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூஜாவுக்கும், திலீப் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு (இதற்க்குக் காரணம் மனைவியினுடைய பழைய காதலுடன் அவள் தொடர்ந்த கள்ளத் தொடர்பு) 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். மேலும் திலீப் குமார் மனைவி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டார். (நெலைமைய்யா!)

இந்த நிலையில் பூஜாவின் பழைய காதலன் நீலாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் (25) அடிக்கடி பூஜாவை சந்தித்து தனது காதலை புதுப்பித்தார்.

இதைத்தொடர்ந்து பூஜா கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு புறப்பட்டு ஜெகன் வீட்டுக்கு சென்றார். அவரை அழைத்துக் கொண்டு புதுக்கோடைக்கு சென்றார்.

மகள் மாயமானதால் பூஜாவின் தாயார் காமாட்சி வளசரவாக்கம் போலீசில் மகளை காணவில்லை என்று வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பூஜா ஓடி சென்றதாக கூறி இருந்தார். இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, பூஜாவின் காதலன் ஜெகன் வளசரவாக்கம் போலீசில் சரண் அடைந்தார். அப்போது அவர் போலீசாரிடம், ``பூஜா எனது காதலி; நானும், பூஜாவும் புதுக்கோட்டைக்கு சென்று நண்பர் வீட்டில் தங்கி விட்டோம். போலீசார் தேடுவதை அறிந்து போலீசில் சரண் அடைந்தேன்'' என்றார்.

அதன் பிறகு போலீசார் புதுக்கோட்டைக்கு சென்று பூஜாவை வளசரவாக்கத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது பூஜா போலீசாரிடம் கூறியதாவது:-

நானும், ஆட்டோ டிரைவர் ஜெகனும் உயிருக்கு உயிராக காதலித்தோம். இதையும் மீறி என்னை திலீப் குமாருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். (இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு 3 வயதாகிறது) திருமணத்திற்கு பிறகும் ஜெகனை காதலித்தேன். இதை அறிந்த திலீப் குமார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான் என்னை திருமணம் செய்யுமாறு ஜெகனை வற்புறுத்தினேன். அவரும் என்னை கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்று எனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பூஜா கூறினார்.

ஆனால் ஜெகன் போலீசாரிடம் கூறுகையில், ``நான் தாலி கட்டியது உண்மைதான். ஆனால் பூஜாவுடன் குடும்பம் நடத்த முடியாது. அவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனால் எனது பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள்'' என்று தெரிவித்தார். ஆனால் பூஜா வாழ்ந்தால் ஜெகனுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்தார். இதனால் உறவினர் மூலம் பிரச்சினைகளை தீர்த்து கொள்கிறோம் என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

இப்போது ஜெகனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டாராம் பூஜா. ஆனால் ஜெகன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 'உல்லாசமாக இருக்கலாம் என்பதால்தான் நான் பூஜாவுடன் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் அவரைக் கல்யாணம் செய்வதெல்லாம் முடியாத காரியம். எனக்கு அதில் இஷ்டமில்லை. மீறி கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு ஏற்கெனவே மனைவி குழந்தைகள் உள்ளனர்' என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜெகன்.

தலையிலடித்துக் கொண்ட போலீஸ், ஜெகனை எச்சரித்து அனுப்பியது. பூஜாவுக்கும், 'தயவு செய்து இந்தமாதிரி புகாரில் எல்லாம் சிக்க வேண்டாம்' என புத்திமதி கூறி அனுப்பி வைத்தது.

தாயாருடன் வீடு திரும்பிய பூஜா, ஜெகனை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என முடிவு செய்து அவருடன் போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் ஜெகன் போனை எடுக்கவே இல்லை என்று தெரிகிறது.இதனால் மனம் உடைந்த பூஜா நேற்று இரவு தூக்க மாத்திரை உள்பட ஏகப்பட்ட மாத்திரைகளை மொத்தமாக விழுங்கி விட்டார்.

இதனால் மயங்கி கிடந்த பூஜாவை முகலிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. இது குறித்த தகவல் வளசரவாக்கம் போலீசாருக்கு தாமதமாக கிடைத்தது.

உடனே ஜெகனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

1 மறுமொழி:

')) said...

உண்மையான way see வாழ்க காதல்! ஏன் இந்த கற்புக்கரசிக்கு 498a பற்றி தெரியாதா? ஜெகன் மேல ஒரு கேச போட்டு உட வேண்டியது தானே... இல்லாட்டி
மொத புருசன் இரண்டாவது புருசன்(???) ரெண்டு பேரு மேலயும் dowry case போட வேண்டியது தான்...

இரு புரட்சிய பண்ண வேண்டாமா... என்னா போங்க மேடம்...