காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க!

'மனைவியால் பாதிக்கப்படுபவரா நீங்கள்... காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க' : வதைபடும் கணவர்கள் சங்கம் புலம்பல் வேண்டுகோள்புதுடில்லி : 'நீங்கள் திருமணம் செய்து கொண்டு மனைவியால் பாதிக்கப்படுபவரா அல்லது விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளவரா? கண்டிப்பாக லோக்சபா தேர்தலில் காங் கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க!' -டில்லியில் உள்ள 'வதைபடும் கணவர்கள் பவுண்டேஷன்' இப்படி ஒரு புதுமையான வேண்டுகோளை விடுத்துள்ளது.


மனைவியால் குற்றம் சுமத்தப்பட்ட, வழக்கை சந்திக்கும், அன்றாடம் வதைபடும் கணவர்கள் சேர்ந்து டில்லியில், 'வதைபடும் கணவர்கள் பவுண் டேஷன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதற்கு ”சுவரூப் சர்க்கார்” என்பவர் செயலராக உள்ளார். பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு பல வகையில் இந்த அமைப்பு உதவுகிறது. இலவச சட்ட உதவி அளிக்கிறது. பெண்களுக்கு சாதகமாக சட்ட, திட்டங்களை வகுக்கும் போது, அதை எதிர்த்து அரசுக்கு கோரிக்கையும் வைக்கிறது.

லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த அமைப்பு , ஆண் வாக்காளர்களுக்கு ஒரு அதிரடி வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்ப தாவது:

நீங்கள் திருமணம் செய்து கொண்டு மனைவியால் அவதிப்படுபவரா? இனி தான் திருமணம் செய்பவரா? அப்படியானால், லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள். டில்லி மண்டலத்தில் மட்டும், மனைவியால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் கணவர்கள் உள்ளனர்; இவர்களுக்காக நாங் கள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளோம். பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு நாங்கள் உதவி வருகிறோம். மனைவியால் கணவர்கள் பாதிக்கப்பட காரணம் காங்கிரஸ் அரசின் தவறான கொள்கை தான். திருமணமான பெண்களுக்கு சலுகைகளை குவித்து விட்டது காங்கிரஸ் கூட்டணி அரசு. காங்கிரஸ் அரசு அமல்படுத்திய சட்டங்களால் தான், கணவர்களை மனைவிகள் கொடுமைப்படுத்துகின்றனர்.

விவாகரத்து வழக்குகள் பெருக, இந்த சட்ட சலுகைகள் தான் காரணம். பெண்களை தூண்டி விடும் இந்த சட்டங்களை வாபஸ் பெறவும், குடும்ப அமைதிக்கு வழி வகுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.

உங்கள் மனைவி பார்ட்டிக்கு போவதற்காக 1,000 ரூபாய் கேட்டு, நீங்கள் 800 ரூபாய் தான் தந்தால் அதுவே குற்றம். உங்கள் மீது வழக்கு போடலாம். இப்படிப்பட்ட துன்புறுத்தலுக்கு உங்களை ஆளாக்க காங்கிரஸ் அரசு போட்ட சட்டங்கள் வழி செய்கின்றன. பெண்களின் ஓட்டுக்களை பெறவேண் டும் என்பதற்காக, குடும்ப அமைதியை காங்கிரஸ் கெடுத்து விட்டது. இவ்வாறு 'வதைபடும் கணவர்கள் பவுண்டேஷன்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.எம். எஸ்., மற்றும் இன்டர்நெட் மூலமும் தங்களின் இந்த பிரசாரத்தை இந்த அமைப்பு செய்து வருகிறது.


செய்தி: தினமலர்

---------------------

தினமலர் இணைய தளத்தில் இந்த செய்திக்கு பதிவாகியுள்ள மறுமொழிகள்:

Its true. congress govt has done enough cruelty to the indian husband. Please dont vote.
~ by s muthukumar,India


தன் சொந்த மகளுக்கு சொத்தில் உரிமை மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட பெற்றோர் ஒரு புறம். வரதக்ஷணை கொடுமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம், விவகாரத்து சட்டம், கற்பழிப்பு சட்டம் ஆகியவை தவறாத பயன்படுத்தும் கலாச்சாரத்தை ''பெண் வோட்டு வாங்கி'' என்ற பெயரில் ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு புறம் , இதனிடைய சிக்கி திருமணம் செய்யவே பயப்படும் இளைய சமுதயம். இவை அனைத்தும் மேலை நாடுகளை போல் தகப்பனற்ற சமுதாயம், இள வயது கர்ப்பம் , சிறார் குற்றம் , போதை அடிமை என்ற நிலைக்கு தள்ள காங்கிரஸ் தான் காரணம். யாருக்கு வேண்டுமாலும் ஒட்டு ! காங்கிரசுக்கு அல்ல !
~ by R Suresh,India