பெண்ணியத்தின் முழு வெற்றி

”பெற்றோருக்காக தாய்மாமனை கைபிடித்தார்; காதலுக்காக காதலனிடம் கழுத்தை நீட்டினார்”

சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சிப் பெண் 2 தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவிப்பு!

சென்னை, ஏப்.7- 2009. செய்தி: தினத்தந்தி

சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்து இளம் பெண் ஒருவர் புரட்சி செய்துள்ளார். இப்போது 2 கணவர்கள் கட்டிய தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவித்தபடி உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கீதா (வயது 26). இவரது தந்தை அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவரோடு கீதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.

இந்த நிலையில், பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனுக்கு கீதாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தாய்மாமனை மணக்க கீதா சம்மதிக்கவில்லை. உடனே கீதாவின் தந்தை திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன் என்று பயமுறுத்தினார். இதனால் காதலை மறைத்துவிட்டு, தாய்மாமனை மணக்க கீதா சம்மதித்தார்.

கடந்த மாதம் 29-ந் தேதி அன்று கீதாவுக்கு தாய்மாமன் தாலி கட்டினார். திருமணம் முடிந்தவுடன் பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனோடு கீதா 5 நாட்கள் இல்லற வாழ்க்கை நடத்தினார். பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா திடீரென்று காணாமல் போய்விட்டார். தியாகராயநகருக்கு ஷாப்பிங் போய்விட்டு வருவதாக சென்ற அவர் மாயமாகிவிட்டார்.

இதுபற்றி கீதாவின் தாய்மாமன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கீதாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அசோக்நகர் போலீசாரும் கீதாவை தேடினார்கள்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கழுத்தில் மாலையுடன் தனது காதலனோடு கீதா திடீரென்று அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தாய்மாமனை பிடிக்கவில்லை என்றும், எனவே அவர் கட்டிய 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு, காதலனோடு சென்றுவிட்டதாகவும், காஞ்சீபுரத்தில் கோவிலில் வைத்து காதலனோடு திருமணம் நடந்ததாகவும் கீதா போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவரது கழுத்தில் காதலன் கட்டிய மஞ்சள் கயிறு தாலியாக தொங்கியது.

இந்த தகவல் தெரிந்து கீதாவின் பெற்றோரும், முதல் கணவரான தாய்மாமனும் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தாய்மாமனிடம் அவர் கட்டிய 5 பவுன் தங்க தாலியை கீதா கொடுத்தார். `என்னை மன்னித்துவிடுங்கள், உள்ளத்தை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. காதலனோடு வாழ அனுமதி கொடுங்கள்' என்று தாய்மாமனிடம் கீதா கெஞ்சினார்.

ஆனால், கீதாவை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று தாய்மாமன் பிடிவாதமாக கூறினார். திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரவேண்டும். சட்டையை மாற்றுவதுபோல மனைவிகளை மாற்றும் பண்பாட்டில் நான் பிறக்கவில்லை. கீதாவோடு வாழ்வேன் அல்லது கடைசிவரை அவள் நினைவாகவே வாழ்க்கையை கழிப்பேன் என்று தாய்மாமன் கூறிவிட்டார்.

இந்த நிலையில், கீதாவின் காதலனும் கீதாவை விட்டு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். இந்த விசித்திர வழக்கை அசோக்நகர் உதவி கமிஷனர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகாந்தா ஆகியோர் விசாரித்தார்கள். முதலில் தாலி கட்டிய தாய்மாமனுடன் அனுப்புவதா? அல்லது 2-வதாக கைபிடித்த காதலனோடு கீதாவை அனுப்பி வைப்பதா? என்பது புரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில், போலீசாரை மேலும் குழப்பும் வகையில் புதிய விவகாரம் ஒன்று வந்தது. கீதாவின் காதலனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர். நிச்சயம் செய்த பெண் வீட்டாரும் தகவல் தெரிந்து அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள். அவர்கள் கீதாவின் காதலனுக்கு உரிமை கொண்டாடினார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தமாட்டோம் என்று அவர்களும் பிடிவாதம் பிடித்தனர்.

புதிய விவகாரம் போலீசாருக்கு மேலும் தலைவலியை கொடுத்தது. இந்த புதிய புயல் கீதாவை நிலைகுலைய வைத்தது. ஒருபக்கம் தாய்மாமன், இன்னொரு பக்கம் காதல் கணவன், காதல் கணவனுக்கோ நிச்சயிக்கப்பட்ட பெண் உரிமை கொண்டாடும் நிலை இப்படி முக்கோண குழப்பத்தில் கீதா திணறினார். நேற்று முன்தினம் இந்த பிரச்சினை பற்றி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடந்தது.

இறுதியில் போலீசார் அனைவரிடமும் கவுன்சிலிங் மூலம் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். தற்சமயம் கீதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்றும், 2 தாலிகளையும் அவரிடம் கொடுத்துவிடுவது என்றும், ஒரு வாரம் நிதானமாக யோசித்து, யாருடன் வாழ்வது என்பதை கீதா முடிவு செய்யட்டும் என்றும் போலீசார் ஒரு தீர்வை சொன்னார்கள்.

இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். கீதா அவரது பெற்றோரோடு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், கீதாவின் காதலனை தனியாக அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அந்த பெண்ணுக்கும் வாழ்வு கிடைக்கும், கீதாவும் அவரது தாய்மாமனோடு சந்தோஷமாக வாழ்வார். எனவே, யோசித்து நல்ல முடிவை எடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். காதலனும் ஒரு வாரத்தில் யோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற சொல்படி கீதாவின் திருமண வாழ்க்கை எந்த கணவரோடு என்பதை விரைவில் காலம் முடிவு செய்யும் என்று போலீசார் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
----------------------

நிச்சயம் அந்தத் தாய்மான் மேல் வரதட்சணை கேட்டான் என்று 498A கேசு போடப்பட்டு அவர் உள்ளே தள்ளப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பாவம் அய்யா அந்தப் பரிதாப தாய்மாமன்!

கழுத்துக்கு இரண்டு மூன்று பேரைத் திருமணம் செய்து கொண்டு தமிழகப் பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று கும்மியடிப்போம்!

1 மறுமொழி:

')) said...

லேட்டஸ்ட் செய்தி:-

காதலன் கட்டிய தாலியை கழுத்தில் சுமப்பதா? அல்லது தாய்மாமன் கட்டிய தாலியை ஏற்றுக்கொள்வதா? என்பது பற்றி கடந்த ஒரு வாரமாக கீதா தீவிரமாக ஆலோசித்து வந்தார். நேற்று அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது முடிவை கீதா தெரிவித்தார். காதலனோடுதான் வாழ்வேன் என்றும், தனது தாய்மாமனிடம் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொள்வேன் என்றும் கீதா தெரிவித்தார். இதனால் தாய்மாமன் பலத்த ஏமாற்றம் அடைந்தார்.

கீதாவுக்காக நான் தொடர்ந்து காத்திருப்பேன் என்றும், கீதா தன்னோடு வராவிட்டாலும் அவள் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துவேன் என்றும் தாய்மாமன் குறிப்பிட்டார். கீதாவின் முடிவு இவ்வாறு இருக்க, அவரது காதலன் அவரை ஏற்றுக்கொள்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது முறைபெண்ணை தூக்கி எறியமுடியாமல் கீதாவின் காதலன் தொடர்ந்து தவித்த நிலையில் உள்ளார். காதலன் முடிவுக்காக கீதா காத்திருக்கிறார். சென்னையில் இருந்தால் பிரச்சினை வரலாம் என்று கருதி தூத்துக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டில் கீதா தங்கியிருக்க முடிவு எடுத்துள்ளார்.
-----------------

ஐயோ பாவம், அந்தப் பைத்தியக்கார தாய் மாமன்!

பெண்கள் எல்லோரும் முழு விடுதலை அடைஞ்சுட்டாங்கய்யா. இது தெரியாமா ஏனய்யா காதல், திருமணம்னு அலையறீங்க! அவிங்க ஒவ்வொரு ஆணா தாண்டித்தாண்டி பல்லாங்குழி வெளையாடுவாங்கய்யா!

உஷாரா இருங்கப்பா. இல்லைன்னா 498A பாஞ்சுடும்!