பதினோரு பேரை மணந்த பாவை

மும்பையைச் சேர்ந்தவர் 32 வயதான கௌசர் பேகம். அவர் உண்மையிலேயே ஒரு புதுமைப் பெண். ஏனெனில் அவர் பதினோரு முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல. ஒவ்வொரு கணவனையும் ஏமாற்றி, மிரட்டி, சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி அவர்களிடமிருந்த பணத்தையெல்லாம் லட்சக்கணக்கில் சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்!

அந்தப் பதினோரு சோப்ளாங்கி கணவர்களிடமிருந்தும் பணத்தைக் கொள்ளையடிக்க அவர் கையாண்ட ஆயுதம் என்ன? அதுதான் கைவசம் இருக்கிறதே அய்யா, ரேணுகாசவுத்திரி போன்ற பெண்ணியவாதிகள் கட்டமைத்துக் கொடுத்துள்ள 498A சட்டம்! இதுபோன்ற பொய் வழக்குகள் போட்டு களவாணித்தனம் செய்வதற்கு ஏதுவாக அமையவேண்டும் என்பதற்காகவே நடைமுறைப் படுத்தப்பட்டதுதானே அந்த கொடுமைக்காரச் சட்டம். அதை நன்கு பயன்படுத்தி திருமணம் என்றாலே அனைத்து ஆண்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் சிம்ம சொப்பனமாக ஆக்கியுள்ளனரே!

கௌசர் பேகம், உம்மே கௌசர், கௌசர் சல்மா என்று பல பெயர்களில் பல ஊர்களில் சென்று பதினோரு பேரை அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டுள்ள அந்தப் பெண்குலத் திலகம் மும்பையிலுள்ள எச்.பி.ஆர் லேயவுட் என்னுமிடத்தை சேர்ந்தவர். பதினோருதடவையும் அது தன் முதல் திருமணம்தான் என்று அப்பாவிக் கணவர்களை நம்ப வைத்தவர் அவர். அவருடைய பால் மணம் மாறாத முகத்தைப் பாருங்கள்!

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இவருடைய பதினோரு பலியாடுகளில் ஒருவர் ஹைதராபாத் ”நவாப்” ஆவார்! அந்த நவாபின் மேல் இந்தப் பெண்குல மாணிக்கம் தொடுத்த பொய் 498A வழக்கிலிருந்து விடுபட அவர் கொடுத்த கப்பம் ரூபாய் 50 லட்சம்!

இத்தகைய திருமண மோசடியில் அவளுடைய சகோதரி நசியா பேகம் மற்றும் பெற்றோர் இக்பால் பாஷா, குல்னாஸ் ஆகியோரும் கூட்டாக ஈடுபடுவார்களாம்.
பெங்களுரிலேயே நான்கு பேரை இதுபோல் இவர்கள் கவுத்திருக்கிறார்கள். அதில் ஒரு முல்லாவின் மகனும், துபாயில் வேலை பார்க்கும் இன்னொரு அப்பாவி டாக்டரும் அடக்கம் (இவர்தான் தற்போதைய கணவராம்)!

இவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருக்கும் நல்ல பசையுள்ள வியாபாரிகளைக் குறி வைத்து கௌசர் பேகத்தை அனுப்பி மயக்கி விடுவார்களாம். பிறகு திருமணத் திட்டத்தை முன் வைப்பார்கள். பிறகு தான் கொண்டு வந்த நகை முதலியவற்றோடு அந்த அப்பாவி கணவனுடைய உடமைகளையும் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவது மட்டுமின்றி, அந்தக் கணவன் மற்றும் பெற்றோர் மேல் வரதட்சணைச் சட்டத்தின் மேல் (498A) வழக்கு போட்டு பல லட்சங்களைக் கறந்து விடுவார்கள்.

அந்த இரு சகோதரிகளும் தங்கள் மாஜி கணவர்(!)களிடமிருந்து இன்னும் தொடர்ந்து ஜீவனாம்சம் பெற்று வருகின்றனர். இதுபோன்று கொள்ளயடித்த பணத்தைக் கொண்டு பல கோடி ரூபாய்கள் பெறுமான வீடு ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளனர்!

ஆனால், கடைசியாக இந்தப் புதுமைப் பெண்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி 20 லட்சம் இழந்து, அவர்கள் அமர்த்திய அடியாட்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சயீத் அஹமது என்ற ஏற்றுமதி வியாபாரி சயான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் இந்த திருமணத் தொடருக்கு இப்போது ஒரு முடிவு கிட்டியிருக்கிறது.

ஆனால் பிறகு என்ன நிகழுமோ! ஐயோ பாவம் பேதைப் பெண் என்று ஜொள் வழிந்து அவள் தப்பிவிக்கப்படலாம். பிறகென்ன, 12-வது பலிகடா தயாராக வேண்டியதுதான்!

செய்தி:

1 மறுமொழி:

')) said...

//புதுமைப் பெண். ஏனெனில் அவர் பதினோரு முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்//

இதுவும் ஒரு நல்ல குடிசை (??) தொழில் தான்... மூலதனம் 1. பெண் உருவில் இருக்க வேண்டும் 2. 498a என்ற வங்கி இதுக்க நல்ல பொருள்உதவி மற்றும் ஆள் பலம் இதெல்லாம் தருகின்றது... இப்பொ இந்த tax pay பன்னாத இந்த தொழிலூக்கு நல்ல மவுசு உண்டு