ஐயோ பாவம் பெண்குலம், ஆசிட் வீசிய மனைவி

குடும்ப வன்முறைச் சட்டம் வரையறைத்துள்ளது என்ன?

1. “குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டுமே செய்வது.”

2. ”குடும்பத்தில் உடலாலோ, மனத்தாலோ, சொல்லாலோ வன்முறைக்கு
உட்படுத்தப்படுவது பெண்கள் மட்டுமே.”

3. அதனால் ஒரு பெண் அவளுடைய கணவன் தன்னை முறைத்துப் பார்த்தோ, தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தோ, அவனுடைய தலையைத் திருப்பிக் கொண்டா உளவியல் ரீதியான வன்முறை செய்ததாக புகார் கொடுத்தால் யாதொரு விசாரணையும் இன்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்தக் கணவனும் அவனது பெற்றோரும் அவர்களுடைய வீட்டிலிருந்தே (அதாவது அந்தக் கணவனும் அவர்தம் பெற்றோரும் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டிலிருந்து) வெளியேற்றப்பட்டு, அந்த வீடு புகார் கொடுத்த பெண்ணிடம் ஒப்படைக்கப்படும்.

இதுதானய்யா இந்த THE PROTECTION OF WOMEN FROM DOMESTIC VIOLENCE ACT, 2005 (D.V. Act) சட்டம் சொல்வது!

சந்தேகமிருந்தால் இந்த வலைத்தளத்திற்குச் http://indiankanoon.org/doc/542601/ சென்று படித்துப் பாருங்கள். அல்லது ஒரு வக்கீலிடம் கேளுங்கள்.

சரி. இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-

குடும்பத் தகாறாரில் போலீஸ் ஏட்டு மீது `ஆசிட்' வீசிய மனைவி. பூந்தமல்லி, ஏப்.25- 2009

குடும்பத்தகராறு காரணமாக போலீஸ் ஏட்டு மீது அவருடைய மனைவியும் மகளும் ஆசிட்டை வீசினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவடி நந்தனம் மேட்டூர் பாரதி தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வனஜா. ரவிக்கு தெரியாமல் மூத்த மகள் நித்யமூர்த்திக்கு, வனஜா திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக ரவி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி, அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு கோர்ட்டுக்கு சென்றது. இருவரையும் சேர்ந்து வாழ கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்பேரில் சில நாட்களாக ரவி, தன்னுடைய மனவி வனஜா, மகள் சரண்யா ஆகியோருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ரவி வீட்டுக்கு சென்றபோது வனஜாவும், சரண்யாவும் சேர்ந்து அவர் முகத்தில் ஆசிட்டை வீசியதாக கூறப்படுகிறது. இதில் முகம் வெந்த நிலையில் ரவி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதால் பின்னர்அவர் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 மறுமொழி:

')) said...

பாவம் அந்த கணவர்.

நம் கோர்ட்டுகள் தம்பதிகளை சேர்ந்துவாழ உத்தரவிடுவது எதற்கு என புரியவில்லை.விவாகரத்து கொடுத்திருந்தால் இம்மாதிரி சிக்கல்கள் வந்திருக்காது.