கைதுதான் முக்கியம்!

கணவன், மனைவியிடையே எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் அது உடனே “வரதட்சணை” என்ற சாயம் பூசப்பட்டு இபிகோ 498A பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டு கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் கைது செய்யப்படும் விந்தையை அன்றாடம் காண்கிறீர்கள். ஏன்?

சிம்பிள்! அதற்கென்றே ஒரு கொடுங்கோன்மை சட்டம் கைவசம் இருக்கிறதே, பிறகு என்ன, அதைக் கையிலெடுத்து பழி வாங்கும் வெறியைத் தணித்துக் கொள்ளலாமே!

அதன்படி புகார் கொடுப்பவர்களுக்கு எந்த வித முகாந்திரமோ, சாட்சியமோ, தரவோ கொடுக்கவேண்டியதில்லை. இன்னார் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தாலே போதும். மேலும் இந்த சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் அதிசயங்களைப் பாருங்கள்:

1. கொடுக்கப்பட்ட புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுதும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் கொடுத்தவர் மேல் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கமுடியாது!

2. புகார் கொடுக்கப்பட்ட உடனே புகாரில் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட அனைவரையும், எந்தவித விசாரணையுமின்றி கைது செய்யவேண்டும். (”கைது” என்பதுதான் இந்தச் சட்டத்தின்மேல் பெண்களுக்கு ஒரு அட்ராக்‌ஷன். வக்கீல்களுக்கும்தான் - ஏனெனில் ஜாமீன் அது இது என்று காசை அள்ளலாமே!)

3. ஜாமீன் கிடையாது - cognizable offence

4. குற்றசாட்டை வாபஸ் பெற முடியாது - non-compoundable

5. வரதட்சணை கேட்டதாகவும், அதற்காக கொடுமப்ப் படுத்தியதாகவும் புகாரில் கூரப்பட்டுள்ள குற்றங்கள் எந்த காலகட்டத்தில் நிகழ்ந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கேசு போடலாம். உதரணமாக, உங்கள் மனைவி நீங்களும் உங்கள் தாயாரும் ஏனையோரும், 30 ஆண்டுகள் முன்னால் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக இன்று புகார் கொடுத்து வழக்கு பதியலாம். இதுபோல் வேறெந்த சட்டப் பிரிவின் கீழும் செய்ய இயலாது.

6. கண்வன் மற்றும் அவனுடைய பெற்றோருடன் சேர்த்து யாரை வேண்டுமானாலும் புகாரில் சேர்த்து குற்றவாளிப் பட்டியலில் உள்ளிடலாம். 85 வயதான மாமனார், மாமியார், 3 வயது நாத்தனார் மகன் - இப்படி.

7. சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் பெயரையும் குற்ற்வாளிகளாகச் சேர்க்கலாம். மன்மோகன் சிங் பெயரைக் கூட சேர்க்கலாம்! பொய்யான நிகழ்ச்சிகளை கற்பனையுடன் சேர்த்து எழுதலாம்.

8. குற்றங்களின் பட்டியலில் மேலும் பல செக்‌ஷன்களைச் சேர்ப்பதற்காக, மாமனார் கையைப் பிடித்து இழுத்தார், புளு ஃபிலிம் பார்த்தார்கள்.. இப்படி எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

இதுபோன்ற பொய் வழக்கு ஸ்பெஷலிஸ்டுகளாக பல வக்கீல்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற பல டெம்பிளேட்டுகளை கைவசம் வைத்துள்ளார்கள். குடும்ப வாழ்வை முறிக்கும் கெடுமதிப் பெண்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி புகார்களை ஜோடித்துக் கொடுப்பார்கள்.

இப்போது இந்த செய்தியை வாசியுங்கள். ஏதோ ஒரு பிரச்னை எப்படி 498A - யாக உருவெடுக்கிறது பாருங்கள்!

------------------------
சென்னையில் பட்டதாரி பெண், கணவர் மீது பரபரப்பு புகார் - 3-வது திருமணம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.6- 2009

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்ஸ்வின் (வயது 26). பட்டதாரி பெண்ணான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையைச் சேர்ந்த முகமது அலி மரைக்கான் (34) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் சிங்கப்பூரில் கம்ப்னிட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு அவருடன் நானும் சிங்கப்பூர் சென்று வசித்து வந்தேன். சிங்கப்பூர் சென்ற பிறகு எனது கணவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைக்கும் தந்தை என்று தெரிய வந்தது. இதனால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

இது பற்றி நான் கேட்ட போது, முதல் மனைவி யாஸ்மினை விவாகரத்து செய்து விட்டதாக எனது கணவர் தெரிவித்தார். இதனால் எனது மனதை தேற்றிக்கொண்டு வேறுவழி இல்லாமல் அவரோடு குடும்பம் நடத்தினேன்.

இந்த நிலையில் எனது கணவர் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினார். வரதட்சணையாக பெரிய அளவில் பணம் கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கிடையில் நான் கர்ப்பம் அடைந்தேன். என்னை பார்க்க எனது பெற்றோர் சிங்கப்பூர் வந்தனர். அவர்களிடம் எனது கணவர் என்னை அடித்து உதைத்து, சித்ரவதை செய்வது பற்றியும், ஏற்கனவே அவர் திருமணமானவர் என்பது பற்றியும் சொல்லி கதறி அழுதேன். இதைக் கேட்டு எனது பெற்றோர் கொதித்துப்போனார்கள்.

என்னை அழைத்துக்கொண்டு சென்னை வந்து விட்டனர். இங்கு வந்தவுடன் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.

இதற்கிடையில் எனது கணவரின் தாயார் மதீனா பேகமும், தங்கை சபீயாவும், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் பரங்கிபேட்டை வந்துள்ளனர். அவர்கள் எனது கணவருக்கு 3-வது திருமணத்துக்கு பெண் பார்க்க வந்துள்ளதாக அறிகிறேன். சென்னை மடிப்பாக்கத்தில் 3-வது பெண்ணை பார்த்து நிச்சயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில், சென்னை அண்ணாசாலை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணி, வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

3-வது திருமணத்துக்கு பெண் பார்க்க வந்ததாக புகார் கூறப்பட்ட மதீனாபேகம், சபீயா ஆகிய இருவரையும் பெண் போலீஸ் தனிப்படையினர் நேற்று காலையில் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள முகமது அலி மரைக்கான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள்.

1 மறுமொழி:

')) said...

Dinamalar News:http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=2875&cls=row4&ncat=IN

தலைமை நீதிபதி அதிருப்தி

ஏப்ரல் 11,2009,00:00 IST

புதுடில்லி: கட்சிக்காரர்களை ஏமாற்றி எதிர்தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து செயல் படும் வக்கீல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இந்திய பார் அசோசியேஷனின் 50வது ஆண்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது: வக்கீல்கள் பலர் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், கிரிமினல் வழக்குகளில் எதிர்தரப்பு வக்கீல்களுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் சமீப நாட்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.